நேர்மை, சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை எனும் மூன்று நம்பிக்கை கொள்கைகள்! - இதழியல் அறம்

 










உலக நாடுகளிலுள்ள பத்திரிகை ஊடக நிறுவனங்கள் அவற்றுக்கே உரிய கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. இதில், நிலப்பரப்பு, உள்ளூர் கலாசாரம் சார்ந்து சில அம்சங்கள் மாறுபடலாம். உலகளவில் புகழ்பெற்ற மதிக்கப்படும் ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸ், பின்பற்றும் இதழியல் கொள்கைகளுக்கு ட்ரஸ்ட் பிரின்சிபல் என்று பெயர். இந்த நம்பிக்கை கொள்கைகளில் சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை, நேர்மை ஆகியவை அடங்கியுள்ளன.

இந்த மூன்று கொள்கைகளையும் நிருபர் / செய்தியாளர், ஆசிரியர் ஆகியோர் அனைத்து செய்திகளிலும், கட்டுரைகளிலும் கடைபிடிப்பது அவசியம். இப்போது பத்து முக்கியமான கடைபிடிக்கவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

1.    செய்திகளில் எப்போதும் துல்லியம் இருக்கவேண்டும்.

2.     நேரும் தவறுகளை வெளிப்படையாக ஏற்று சரி செய்யவேண்டும்.

3.    பாகுபாடற்ற தன்மையை சமநிலையாக பராமரிக்க வேண்டும்.

4.    ஆர்வமுள்ள செய்திகளைப் பற்றி மேலாளர் / மூத்த ஆசிரியரிடம் கூறவேண்டும்.

5.    ரகசியமான செய்திகளை எப்போதும் மதிக்க வேண்டும்.

6.    செய்திகளைக் கொடுக்கும் ஆதாரங்களை, அதிகாரத்திடமிருந்து பாதுகாக்கவேண்டும்.

7.    கட்டுரை அல்லது செம்மைப்படுத்தலின்போது தனிப்பட்ட கருத்துகளை வெளியிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.

8.    எப்போதும் செய்திகளை புனைவாக உருவாக்க கூடாது. திரிக்க கூடாது.

9.    செய்திக்காக எடுக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை உள்ளபடியே பயன்படுத்தவேண்டும். மாற்றியமைக்க கூடாது.

1.செய்திகளை பிரசுரிக்க பணம் பெறக்கூடாது. செய்தியைப் பெற ஒருவருக்கு பணம் வழங்கவும் கூடாது

 

 நன்றி

தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்

படம் - பிக்சாபே


கருத்துகள்