செய்திகளை எழுதுவதில் எந்தப்பக்கம் நிற்பது? - எது சரி, எது தவறு?

 













கொள்கை ரீதியான சவால்கள்

இதழியலைப் பொறுத்தவரை நவீன காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு ஊடகம் கடந்து காட்சி ஊடகங்கள் சக்தி பெற்றுள்ளன. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தனி ஒரு ஊடகமாக செயல்படத் தொடங்கிவிட்ட காலமிது.

எப்படி இயங்கினாலும் செய்திகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அதுவும் இதழியலில்தான் சேரும். இதழியலைப் பொறுத்தவரை நிருபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கும் பெரும் சவால். ஒரு விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாடு ஒரு சூழலில் சரியாக இருக்கும். மற்றொரு சூழலில் தவறாக இருக்கும். அதை முட்டாள்தனம் என்று கூட பிறர் கருதலாம். செய்தி தொடர்பாக முடிவெடுக்கும்போது தொழில் சார்ந்த கொள்கைளை அடிப்படையாக கொள்ளவேண்டும். ஆசிரியர் குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் நாம் அதற்கு சரியான பதிலைக் கண்டுபிடித்தால்தான் முன்னே நகர முடியும்.

இரண்டு இடங்களில் நாம் என்ன முடிவெடுப்பது என தடுமாறி நின்றுவிடுகிறோம். ஒன்று. எது சரி அல்லது எது தவறு என குழம்புவது. அடுத்து நாம் எடுக்க வேண்டிய ஒரே முடிவு. ஒரே முடிவால் நாம் செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் சரியான பதில்கள் அல்லது விளைவுகள்.

சரியா தவறா என்ற கேள்விக்கு எளிதாக பதில் கண்டுபிடித்துவிட முடியும். அறநிலையில் தவறாக, சட்டவிரோதமாக, தொழிலின் விதிகளுகு விரோதமாக இருந்தால் அது தவறான செயல் என முடிவு செய்யலாம். பத்திரிகையாளராக ஒருவர் இதுபோன்ற செயல்களை எப்போதும் செய்யக் கூடாது. இதற்கு உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். ஒரு இடத்திற்கு செல்லாமல் அந்த இடம் பற்றி, மனிதர்கள் பற்றி கற்பனையாக கட்டுரை ஒன்றை எழுதுவது. நீங்கள் ஓரிடத்திற்கு செல்லாமல் அதுபற்றி கட்டுரை எழுதுவது தவறு. இந்த செயல் தவறானது என்ற வரிசையில் வரும். இதை எப்போதும் செய்யக்கூடாது.

 ஒரே முடிவெடுத்தால் நமக்கு சரியான விடைகள் கிடைப்பது என்பதை சற்று யோசித்து நிதானமாகவே செய்யவேண்டும்.இப்படி எடுக்கும் முடிவுகள் தொழிலின் அறநிலையைக் கூட குலைத்துப்போடும் ஆற்றல் கொண்டது. ஒரு செய்தியை விளக்க புகைப்படம் ஒன்றை பத்திரிகையாளர் பயன்படுத்த நினைக்கிறார். அந்த படம் மக்களுக்கு பாதிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இங்கு என்ன முடிவு எடுக்கவேண்டும்? அதை பயன்படுத்துவதா?, வேண்டாமா?  ஒரு பிரச்னையை மக்களுக்கு கொண்டு சென்று, அதுபற்றி விவாதத்தை உருவாக்குவே சிறந்த இதழியல்.

 

 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்