இடுகைகள்

மயிலாப்பூர் டைம்ஸ்! - வாழ்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மயிலாப்பூர் டைம்ஸ்!- 2 கோயில்சூழ் வாழ்வு

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்!- 2 குடித்தனமும், கோயில் வாசமும் மயிலாப்பூரில் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு காலம் தள்ளுவது மிக சிரமமான ஒன்று. இந்த சிரமங்களை தாங்கிக்கொண்டும் இங்கு தங்கியிருக்க காரணம் போக்குவரத்து வசதிகளும், கூடக்குறைய இருக்கும் மரங்களும்தான். பறவைகள் உட்கார ஒரு மரம் கூட இல்லாமல் இருக்கும் இடத்தில் எப்படி வசிப்பது? ரயில், பஸ்களின் பேரிரைச்சல்கள் மனதை ராஜீவ் ரவியில் கேமரா கோணங்கள் போல திகைப்புக்குள்ளாக்கி விடும். சிலர் இதனை வர்க்கம் சார்ந்த பிரச்னையாக பார்க்கிறார்கள். தனக்கான சுயநலம் என்றால் கூட அதற்கு பிறரையும் சம்மதிக்க வைத்து ஏதேனும் செய்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டியதுதான். கபாலி கோயில் வெளிநாட்டு வருகையாளர்களால் பரபரப்பானாலும் ஆசுவாசம் தர ஆதிகேசவ பெருமாள், மாதவப்பெருமாள் குறையாத புன்னகையுடன் வரவேற்கிறார்கள். போகும் வழியில் முண்டக்கண்ணியம்மன் தன் தாய்மடியை ஆறுதல் தேடிப்போகும் உங்கள் நீட்டுகிறாள். அப்புறமென்ன? பேருந்துக்கு போட்டியாக ரயில்வே இன்று மக்களை இணைக்கிறது. முண்டக்கண்ணியம்மன் ஸ்டேஷன் தொடங்கப்பட்டதிலிருந்து பெரும் மக்கள் கூட்டம் குறைந்த காசில் நகருக்குள்