இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆடியோ மூலமாக என்னென்ன விஷயங்களை செய்யலாம்?

படம்
              ஆடியோவில் ஆடிப்பாடுவோம் ! ஸ்மார்ட்போன்களில் குரல் மூலம் செயல்படும் உதவியாளர் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகப்போகின்றது . இதனை இன்னும் நாம் சிறப்பாக பயன்படுத்த கற்கவேண்டும் . அப்போதுதான் எழுதுவதை விட எளிதாக பேசி ஒரு விஷயத்தை செய்யமுடியும் என்பதை உணர்வீர்கள் . உதவியாளரால் என்ன செய்யமுடியும் ? ஆப்பிளின் சிரி , கூகுளின் ஆண்ட்ராய்டு சாம்சங்கின் பிக்ஸ்பை ஆகியவை இன்று பெரும்பாலோனாரின் போன்களில் பயன்பாட்டில் உள்ளது . இதனை முழுமையாக பயன்படுத்த அதனைப் பற்றி அறிவது அவசியம் . எனவே இதுபற்றி இணையத்தில் தேடிப் பார்க்கலாம் . அல்லது போனில் உள்ள உதவியாளரிடமே உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டு பதில் பெறலாம் . என்ன செய்யலாம் ? இன்று வேலைகள் என்னென்ன என்பது உங்களது அற்புதமான காந்தர்வ குரலில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் . போனில் நோட்ஸ் எடுக்கும் ஆப்புகளும் இருக்கும் . அதனைப் பயன்படுத்தலாம் . இல்லையெனில் போனில் கம்பெனியே கொடுத்துளமள ரெக்கார்ட் ஆப்பை பயன்படுத்துங்கள் . பட்டனை அழுத்தி பேசி பதிவுசெய்துகொண்டு அதனை கணினியில பதிவேற்றி பேக்கப் எடுத்து வைத்துக்

இந்திய மக்கள் இறப்பதற்கு அரசின் செயலற்ற தன்மைதான் காரணம்! - ஶ்ரீனிவாஸ் பி.வி. இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர்

படம்
            கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக அரசு முழுக்கவே செயலிழந்துவிட்டதாக என நினைக்கத்தோன்றும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது . பேஸ்புக்கில் மோடிபதவிவிலகு என எழுதும் அளவுக்கு மக்கள் விரக்தி நிலைக்கு வந்துவிட்டார்கள் . கோபம் கொள்வது சரி , செயல்வேகம் கொண்ட மனிதர்கள் இந்தியாவில் வேறு யாரும் இல்லையா ? என்றால் இருக்கிறார்கள் என உற்சாகமாக கூறலாம் . இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் ஶ்ரீனிவாஸ் பிவி , கட்சி பேதமில்லாமல் பலருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார் . நீங்கள் என்ன விதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறீர்கள் ? நாங்கள் எங்களை தொடர்புகொள்ளும் நோயாளிகளிடம் பேசிவருகிறோம் . அவர்களை தனிமைப்படுத்தவும் , தேவையான தன்னார்வலர்களாக உள்ள மருத்துவர்களின் உதவிகளைப் பெற உதவுகிறோம் . நோயிலிருந்து மீண்டவர்களைப் பற்றிய பட்டியலைப் பெற்று அவர்களிடமிருந்து பிறருக்கு பிளாஸ்மா பெற உதவுகிறோம் . மேலும் மக்களுக்கு மருத்துவமனை படுக்கை , ஆக்சிஜன் சிலி்ண்டர்களையும் வழங்குகிறோம் . நாங்கள் ஆக்சிஜன் வழங்குபவர்களோடு தொடர்பில் இருக்கிறோம் என்வே , ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற முடியாத ஏழைகளுக்கு உ

நினைவை எப்படி மூளை தட்டி எழுப்புகிறோம்? - மூளையிலுள்ள நினைவை பாதுகாக்கும் பகுதிகள் ஒரு பார்வை

படம்
          ஞாபகம் வருதா ? சிலரது கைகளை தொட்டால் பல்வேறு நினைவுகள் வரும் . சிலரது முகத்தை பார்த்தால் நமக்கு நெருக்கமானவர்களின் நினைவு பல ஆண்டுகளுக்கு சென்று உடனே ரீகேப் ஆகி மீளும் . சிலரது உடல்மொழி கூட நமக்கு தெரிந்தவர்களை திடீரென பெய்யும் அடைமழை போல நினைவுப்படுத்தி செல்லும் . இதெல்லாம் எப்படி நடக்கிறது ? மூளையில் அதற்கான பார்ட்டுகளை பிரம்மா தனது கையாலேயே செய்து வைத்திருக்கிறார் . உணர்வுரீதியான நினைவு , குறுகியகால நினைவு , நீண்டகால நினைவு என மூன்று வகை நினைவுகள் உள்ளன . உணர்வு ரீதியான உணர்வு சில நொடிகள் மட்டும்தான் நீடிக்கும் . குறுகியகால நினைவுக்கு ஆயுள் 20 நொடிகள் . நீண்டகால நினைவுக்கு ஆயுள் அதிகம் . நினைவுகளைப் பொறுத்தவரை அதனை முக்கியம் என்று நீங்கள் கருதினால் அது நிலைக்கும் . இல்லையென்றால் மண்டையில் நிற்காது . நடத்துநர் எச்சிலைத் தொட்டு டிக்கெட் கிழித்தாரா என்பது மூளையில் சேமித்து வைக்கவேண்டிய விஷயமில்லை . ஆனால் அவருக்கு சரியான காசை கொடுத்து டிக்கெட் வாங்கினோமா என்பது முக்கியம் . அதைவிட முக்கியமானது . அவரிடம் சொன்ன இடத்தில் இறங்கி நண்பனை சந்தித்தோமா என்பது நினைவு கொள்ளவேண்ட

புதிய பழக்கங்களை எப்படி கற்றுக்கொள்வது? - மூளையில் பழக்கவழக்கங்களை எப்படி பதிய வைக்கலாம்

படம்
            இலக்கு நோக்கிய பயணம் வாழ்வதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வியை தனது வாழ்நாளில் ஒருவர் சந்திக்கவேண்டும் . அப்படி சந்திக்காதபோது பிறரின் மீதான அக்கறை ஒருவருக்கு குறைந்துபோய்விடும் என டாக்டர் ரொமான்டிக் தொடரில் டீச்சர் கிம் கூறுவார் . குறிப்பிட்ட நோக்கம் இல்லாத வாழ்க்கை என்பது சலிப்பான மோசமான விஷயங்களுக்குத்தான் அழைத்துச்செல்லும் . முயல் தனது கேரட்டை எடுக்க வழிகாட்டிய புதிர் பலருக்கும் நினைவிருக்கும் . இதுபோல நோக்கங்களை மையமாக வைத்து முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் . நோக்கங்களை தேடுவதை பயிற்சியாக கொண்டால் அதனை அடையும் வழி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை . பாதை நினைவிருக்கும் என்பதால் முயல் போலவே நமது மூளையும் எளிதாக அதனை அடைந்துவிட முடியும் . தூண்டுதல் பற்பசை விளம்பரத்தை பார்த்துவிட்டு தூண்டுதலில்தான் ஹைப்பர் மார்க்கெட்டை வேட்டையாட கிளம்புகிறோம் . சுத்தமான பற்கள் , நம்பிக்கை அளிக்கும் என ஸ்லோகனை பயன்படுத்துகிறார்கள் . இதுபோல தூண்டுதல்தான் பழக்கத்தை தொடங்க உதவும் . உடற்பயிற்சி , நல்லுணவு , தூயஆடை , ஆளுமை மாற்றங்கள் ஆகியவையும் பிறரைப் பார்த்து காப்பி

ரொமான்டிக் மருத்துவரின் புதிய மருத்துவப்படை - டாக்டர் ரொமான்டிக் சீசன் 2 - கொரிய தொடர்

படம்
    டாக்டர் ரொமான்டிக்  சீசன் 2 புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் டீச்சர் கிம், தலைமை நர்ஸ், அவருக்கு உதவியாளர்கள் யாரும் மாற்றப்படவில்லை. வில்லனும் கூட மாறவில்லை. ஆனால் சூழல்கள் மாறியுள்ளன.  டாக்டர் ரொமான்டிக் என்பது டீச்சர் கிம்தான். அவர்தான் டைட்டில் ரோல் நாயகன். டோல்டம் மருத்துவமனையில் தலைமை மருத்துவர். தனது குழுவில் உள்ளவர்கள் தவறு செய்தால் இவரது கண்டிப்பு பல்லை உடைப்பேன், தவறு செய்த கையை வெட்டுவேன் என்பதாகவே இருக்கும். இப்படிப்பட்டவர்தான் அவர்களுக்கு தேவையானபோது உதவியும் செய்வார். ஒருவருக்கு உதவி தேவையென்றால் எந்த இடத்திலும் இருக்கும் பொருட்களை வைத்தே சிகிச்சை செய்யும் இவரது ஸ்டைல் டோல்டம் வட்டாரத்தில் புகழ்பெற்றது.  சாதாரணமாக இந்த மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. காசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சிகிச்சை கிடைக்கும். இதனால் மருத்துவமனை பெரிதாக சம்பாதித்து கொடுப்பதில்லை. ஆனால் அவசர சிகிச்சை என்றால் டோல்டம் மருத்துவமனையில் டீச்சர் கிம் என்பதுதான் அந்த வட்டாரத்தில் பிரபலமான நம்பிக்கை.    முதல்பகுதியில் கங் டங் ஜூ, யூன், டூயிங்பம் ஆகியோரின் வருகை, டீச்ச

தூக்குத்தண்ட்னைக் கைதியின் பழிவாங்கும் படலத்திற்கு உதவும் காக்கை சித்தர்! சிவரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
                சிவரகசியம்   இந்திரா சௌந்தர்ராஜன் பூமிக்காத்தான் பட்டியில் கோவிலுக்குள் அமைந்திருக்கிறது ஊர் . இங்கு பௌர்ணமி தோறும் சித்தர்கள் பூஜை செய்து வருகிறார்கள் ரசமணீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பால் ஊரில் மழை வளம் குறைவதில்லை . தினமும் மழை பெய்கிறது . அங்குள்ள சிவ வனத்தில் சித்தர்கள் வாழ்கின்றனர் . இந்தசெய்தி காண்டீபன் என்ற பத்திரிகையாளர் வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு கூற , வில்சன் எனும் ஆராய்ச்சியாளர் அங்கு வருகிறார் . இதனால் நேரும் விளைவுகள்தான் கதை . இதன் உப கதைகளாக தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி ராமண்ணா , பூமிக்காத்தான் பட்டியில் தொழிற்சாலை தொடங்கும் அர்ஜூன் ஆகியோர் கதை வருகிறது . தூக்குதண்டனை கைதி கதை மட்டுமே சுவாரசியமாக உள்ளது . மற்ற இரு கதைகளும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை . நாவலின் இன்னொரு பலவீனம் . கதையில் தொடக்கத்தில் கூறும் தகவல்கள் . சித்தர்கள் பற்றிய தகவல்களை ஆசிரியர் கூற நினைத்திருக்கிறார் . அதற்காக இன்னொரு புத்தகம் எழுவதும் அளவுக்கு தகவல்களை குவிப்பார் என்பதை வாசகரும் எதிர்பார்த்திருக்கமுடியாது . ஒருகட்டத்தில் இந்த தகவல்களைப் படித்தவிட்ட

சுவாரசியமான செய்தி வெறியால் அழிக்கப்பட்ட தனது குடும்பத்திற்காக அறவழியில் பழிவாங்கல்! - பினாக்கியோ - கொரிய தொடர் - இறுதிப்பகுதி

படம்
        பினாக்கியோ இறுதிப்பகுதி கொரியதொடர் எம்எக்ஸ் பிளேயர் டிவி சேனல் நேர்காணலில்... மொத்தம் இருபது எபிசோடுகள்தான் . முதல் பகுதியில் தீயணைப்பு வீரரான ஒருவர் கட்டிடம் ஒன்றில் தீயணைக்க செல்கிறார் . அங்கு தகவல் கொடுப்பவர் செய்யும் குளறுபடியால் தீயணைப்பு வீரர்கள் அனைவருமே கேஸ் வெடித்து இறக்கும்படி ஆகிறது . உண்மையில் இதற்கு பின்னணியில் தொழிலதிபர் ஒருவரும் அவருக்கு உதவியாக அரசியல்வாதியும் உள்ளனர் . ஆனால் இந்த உண்மை வெளியே வரக்கூடாது என தொழிலதிபர் பங்குகளை வைத்துள்ள எம்எஸ்சி என்ற ஊடகத்தின் செய்தியாளர் சாவோக்கிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது . முதலில் உண்மை , நேர்மை , கண்ணியம் , கட்டுப்பாடு என்பவர் இறுதியில் வாய்ப்புதான் வசதியைக் கொடுக்கும் என சலனப்பட்டு டீலுக்கு ஒகே சொல்லுகிறார் . செய்திகளில் வீரர்கள் இறப்புக்கு தீயணைப்பு வீரர்களின் தலைவர்தான் காரணம் என கட்டம் கட்டுகிறார் சாவோக்கி . இதனால் மக்களின் கோபம் முழுக்க தீயணைப்பு வீரரின் குடும்பம் மீது திரும்புகிறது . இப்படி மக்களின் வெறுப்பினால் தீயணைப்பு கேப்டனின் மகன்கள் கி ஜே மியூங் , ஹோமி யூங் ஆகியோரின் வ

இரண்டாவது அலையை கணிக்க தவறியது மத்திய அரசின் குற்றம்தான்! - பூபேந்திரசிங் பாதல் -சத்தீஸ்கர் முதல்வர்

படம்
              பூபேந்திரசிங் பாதல் சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளதா ? நாங்கள் இரண்டு நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம் . 45 முதல் 60 வயது கொண்ட 63 சதவீத மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் . அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வயது வரம்பை தளர்த்த மத்திய அரசிடம் கூறியுள்ளோம் . கொரோனா நோய்த்தொற்று வயது வரம்பின்றி அனைத்து மக்களையும் பாதித்துள்ளது . தற்போது உள்ள இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே வைத்து மக்களை பாதுகாக்க முடியாது . முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் கூறியபடி வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதோடு , உ்ள்நாட்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவேண்டும் . அப்போதுதான் தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் வழங்க முடியும் . மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் . அவருடைய கடிதத்திற்கு ஹர்ஷ்வர்த்தன் காங்கிரஸ் தலைவர்கள் , முதல்வர்களை தாக்கி பதில் கூறியிருக்கிறாரே ? இங்கே பாருங்கள் . ஹர்ஷ்வர்த்தன் மரியாதைக்குரிய பதவியில் இருக்கிறார் . அதற்க