சாதனை படைத்த பெண்கள்! -நான்சி பெலோசி, ஜோய் வாட், ஷெமாரா விக்ரம நாயகே, ஆஸ்லெம் துரெசி
சாதனை படைத்த பெண்கள் 2021!
மனிதநேய இயக்குநர்!
ஜோய் வாட்
யும் சீனா, இயக்குநர்(மார்ச் 2018 முதல்)
பார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்ற நிறுவனத்தின் இயக்குநர் வாட். இத்தனைக்கு்ம் ஆரம்பம் சீனாவிலுள்ள கிராமத்தில் உள்ளது. அங்குள்ள பூக்களின் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த சிறுமிதான் பின்னாளில் உலகம் முழுக்க இயங்கும் 10 ஆயிரம் தொழிற்சாலைகளை இயக்கினார். இன்று இவரின் கட்டுப்பாட்டில் பீட்ஷா ஹட், கேஎப்சி ஆகிய உணவகங்களும் உள்ளன.
2007இல் சாவர்ஸ் எனும் சலூன் நிறுவனத்தில் சேர்ந்த பணியாற்றினார். நிறுவனத்தின் இயக்குநராக ஒருவர் எடுக்கும் முடி்வு அங்கு வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பாதிக்கும் என்பதை அறிந்திருந்தார். யும் சீனா நிறுவனத்தில் வேலை செய்த 4 லட்சம் பேர் கொரோனா காலத்தில் 1450 மருத்துவமனைகளுக்கு உணவுகளை வழங்கினார். கடந்த ஆண்டில் யும் சீனா நிறுவனம் உணவகத் சேவையில் 97 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது.
முக்கியமான சாதனை
வாட், முதலில் யும் சீனா நிறுவனத்திற்கு வருவதற்கு முன்னர் நிறுவனம் நஷ்டத்தில் இருந்தது. இவர் நிறுவனத்தின் பொருட்களை ஆன்லைனில் வாங்குவதற்கான ஆப்பை உருவாக்கினார். இப்போது அங்கு 97 சதவீத வணிகம் நடைபெறுகிறது. உறுப்பினராக 285 மில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர்.
சூழலுக்காக போராடும் பெண்மணி
ஷெமாரா விக்ரம நாயகே
மக்குவாரி குழுமம் (டிசம்பர் 2018)
எந்த பெண் இயக்குநராக இருந்தாலும் அவர்களை என்ன கேள்வி கேட்பார்கள் தெரியுமா? எப்படி தொழிலையும் பார்த்துக்கொண்டு வீட்டிலும் வெண்டைக்காயை நறுக்குகிறீர்கள்? என்பதைத்தான். ஷெமாராவைப் பொறுத்தவரை அவரது கணவர் இரு பையன்களையும் பார்த்துக்கொள்கிறார். ஷெமாரா வணிகத்தைக் கவனிக்கிறார். இதனால் ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் இயக்குநராக உள்ளார். 13.8 மில்லியன் டாலர்களை ஊதியமாக பெற்றுள்ளார்.
ஐ.நா சபையில் இவர் சூழலுக்கு உகந்த தலைவர்களுக்கான திட்ட உறுப்பினராக உள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அரசு பசுமை முதலீடுகளை தொழில்நுட்பங்களில் செய்ய கோரி வருகிறார். ஷெமாரா இதுவரை ஐந்து நாடுகளில் 15 வேலைகளை செய்துள்ளார். 2018இல் ஏஎஸ்எக்ஸ் 200 பட்டியலில் ஆசிய ஆஸ்திரேலிய பெண்ணாக இடம்பெற்ற பெருமையை கொண்டவர்.
தனது நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தை தளர்வு செய்வது, குழந்தை பராமரிப்புகளுக்கான செலவு ஆகியவற்றை மாற்றியுள்ளார்.
முக்கியமான சாதனை
பசுமை முதலீட்டுக்காக 77.1 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளார். உலக வங்கியின் குளோபல் கமிஷன் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவன இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
நாயகி
ஆஸ்லெம் துரெசி
சீப் மெடிக்கல் ஆபீசர் பயோன்டெக் (2008 முதல்)
துருக்கியை பூர்வீகமாக கொண்ட மருத்துவத்துறை நிபுணர் இவரும் இவரது கணவரும் சேர்ந்த ஜெர்மனியில் பயோன்டெக் நிறுவனத்தில் பணியாற்றியபோது புற்றுநோய் மருந்தைக் கண்டுபிடிக்க முயன்று வந்தனர். கோவிட் காலத்தில் 600க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பயன்படுத்தி தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியைத் தொட்கினர். இவர்கள் பைசர் என்ற நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளனர்.
துரெசியும் அவரது கணவரும் பணக்காரர்களாகவே உள்ளனர். 2016இல் கனைமெட் என்ற நிறுவனத்தை உருவாக்கி பின்னர் 1.4 பில்லியன் டாலர்களுக்கு விற்றனர். இந்த மருந்து கம்பெனியின் பெயருக்கு கடின உழைப்பால் உருவாக்கியது என்று பெயர். மெய்ன்ஸ் எனும் சிறு நகரில் ஜெர்மனியில் வசிக்கிறார்கள். தடுப்பூசி 95 சதவீத திறனுடன் உள்ளதை எளிமையாக ஒரு கப் டீயுடன் கொண்டாடி உள்ளனர்.
முக்கிய சாதனை
பயோன்டெக் என்ற இவர்களது கம்பெனி மதிப்பு 21.9 பில்லியன் டாலர்களாக உள்ளது. பதினொரு மாதங்களில் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். 1960ஆம் ஆண்டில் வந்த நோய்க்கு நான்கு ஆண்டுகளில் தடுப்பூசி கண்டுபிடித்ததுதான் முந்தைய சாதனை.
உண்மையைப் பேசும் தலைவர்!
நான்சி பெலோசி
2019இல் இருந்து அமெரிக்க நாடாளுமன்ற அவை சபாநாயகராக உள்ளார். நான்சி தனது 47 வயதில் தான் நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆண்டு 1987. அந்த நெருக்கடியான கட்டத்தில் ஜனநாயக கட்சி உறுப்பினராக தேர்வான பெண் என்பது முக்கியமான சாதனை. மூன்று சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒபாமா கேர் என்ற திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறார். அதிபர் ட்ரம்ப் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்து வெற்றிகரமாக நிறைவேற்றினார். இந்த வகையில் இப்படியொரு தீர்மானத்தை கொண்டு வந்து டிரம்பிற்கு தீராத அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும் கூறலாம்.
எனது வாழ்க்கையில் ஆச்சரியம் என்ற ஒன்று கிடையாது என்று உறுதியாக சொல்லமுடிவது நான்சி பெலோசியால் மட்டுமே சாத்தியம்.
bloomburg
கருத்துகள்
கருத்துரையிடுக