சிறிய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் வெற்றி பெறுவது எப்படி?
அடோமிக் ஹேபிட்ஸ்
ஜேம்ஸ் கிளியர்
பெங்குவின் ராண்டம் ஹவுஸ்
சின்ன பழக்கவழக்கம் எப்படி நமது வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை பல்வேறு அறிஞர்களின் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமாக 250 பக்கத்தில் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் ஜேம்ஸ் கிளியர்.
இதனை நான்கு எளிய தத்துவங்களின் வழியாக விளக்கியுள்ளார். அவை என்ன என்பதை நூலை வாங்கிப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். விஷயத்தை இங்கே சுருக்கமாக கூறி விடுகிறோம். காலையில் நேரமே எழுவது, அன்றைய வேலைகளைத் திட்டமிடுவது, சமூகவலைத்தளங்களில் செலவிடும் நேரத்தை குறைப்பது, சேமிப்பைத் திட்டமிடுவது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, அலுவலகத்தில் உற்பத்தித்திறனை பெருக்குவது ஆகியவற்றை எப்படி உருவாக்கிக்கொள்வது அதனை எப்படி பின்பற்றுவது, அதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன, அதனை தீர்ப்பது எப்படி என நூலாசிரியர் விவரித்துள்ளார்.
நூல் பெரிதாக இருந்தாலும் வாசிக்க எளிமையாகவே உள்ளது. ஆங்கிலமு்ம், கூறும் எடுத்துக்காட்டுகளும் நன்றாக உள்ளன. பழக்க வழக்கங்களைப் பொறுத்தவரை உளவியலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனையும் நூலில் பதிவு செய்துள்ளதால் பழக்கத்தை நீண்ட நாட்களுக்கு தொடர என்ன செய்யவேண்டும் என்பதை வாசகர் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.
ஆக்கப்பூர்வமான பழக்கம், அபாயகரமான பழக்கம், கடினமானது, எளியது என பல்வேறு விஷயங்களை அட்டவணை போட்டு விளக்கியுள்ளதால் இதுவரை நாம் எப்படி வெட்டியாக நேரத்தை உடனடி சந்தோஷத்திற்காக வீணாக்கியுள்ளோம் என்பதையும் கூட கண்டுபிடிக்க முடிகிறது. எனவே எளிதாக நமது தவறுகளை அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும் என்பது மகிழ்ச்சிதானேழ
நன்றி
கணியம் சீனிவாசன்
கருத்துகள்
கருத்துரையிடுக