நாசா கண்டுபிடித்த அட்டகாசமான பொருட்கள்!
நாசாவின் மகத்தான கண்டுபிடிப்புகள்
அமெரிக்காவின் நாசா அமைப்பு பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு அதன் விளைவாக பல்வேறு சாதனங்களை தயாரித்துள்ளது. அவை வெகுஜனத்தின் பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. அவற்றைப் பார்ப்போம்.
கிராஷ் ஹெல்மெட்.
1966ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹெல்மெட் இது. இலகுவான பஞ்சினால் தயாரிக்கப்பட்டது. தலையை அடிபடாமல் காக்க ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்டது.
கார்ட்லெஸ் டூல்ஸ்
1965ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நிலவில் ஆய்வாளர்கள் சாம்பிள்களை எடுக்க உருவாக்கப்பட்ட கருவி.
கீறல் விழாத குளிர் கண்ணாடி
இதுவும் விண்வெளி வீரர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது.
கணினி
அப்போலோ திட்டத்தின்போது உருவாக்கப்பட்டது.
நவீன கோல்ப் பந்து
1981ஆம் ஆண்டு தரைப்பரப்பு சார்ந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.
ஜாய்ஸ்டிக்
மினி பஸ் டிரைவரின் கியர் லிவர் போல பாவித்து கேம் விளையாடுபவர்களே, இந்த கண்டுபிடிப்பும் கூட நாசாவின் உபயம்தான். இதனைப் பயன்படுத்தி அப்போலோ லூனார் ரோவர் இயக்கப்பட்டது. இதன் மூன்று திட்டங்களுக்கு பயன்பட்டது. பின்னர் விளையாட்டுகளில் களமிறக்கப்பட்டது இளைஞர்களின் மனத்தை வென்றது.
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
விண்வெளி வீரர்களுக்கு நச்சில்லாத குடிநீர் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. .
1950களில் குடிநீர் சுத்திகரிப்பு விஷயங்கள் கண்டறியப்பட்டுவிட்டன. . 1963இல் நாசா அதனை மேம்படுத்தி, கடினமான சூழலிலும் நீரை சுத்தமாக்குவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
ஜிபிஎஸ்
இதற்கு நாசாவைக் கை காட்டினாலும் அது தவறு. இத்தொழில்நுட்பத்தை நாசா கண்டுபிடிக்கவில்லை.
மைக்ரோ புரோசசர்
இன்டகிரேட்டட் சர்க்கியூட் அமைப்பை மின்னணு பொறியாளரான ஜேக் கில்பி என்பவர்தான் கண்டுபிடித்தார். ஆண்டு 1958. அதன் மற்றொரு வெர்ஷனை நாசா கண்டறிந்து மேம்படுத்தியது. அப்போலோ புரோகிராமிற்காக அமெரிக்காவில் உள்ள 60 சதவீத இன்டகிரேட்டட் சிப்களை நாசா வாங்கியது. இதனால் மைக்ரோசிப் உற்பத்தி பெருமளவு அதிகரித்தது. அதன் விளைவாக இன்று மொபைல் போன் முதல் கால்குலேட்டர் வரை அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் இன்டகிரேட்டட் சர்க்கியூட் பயன்பட்டு வருகிறது.
சாட்டிலைட் டிவி
1962இல் இத்திட்டத்தை பெல் நிறுவனமும், நாசாவும் இணைந்து திட்டமிட்டன. தோர் டெல்டா ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அட்லாண்டிக் கடல் பகுதியில் இதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டன. செயற்கைக்கோளிலுள்ள டிரான்ஸ்பான்டர் சிக்னல்களைப் பெற்று அதனை திருப்பி அனுப்பியது.. கீழுள்ள விண்வெளி நிலையம் இதனைப் பெற்று டிவியில் ஒளிபரப்பியது. இத்தொழில்நுட்பம் மேம்பட்டிருப்பதால், இன்று அதி துல்லியம் வாய்ந்த வீடியோக்களை நம்மால் பார்க்க முடிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக