இடுகைகள்

விக்கிலீக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசின் சர்வாதிகாரம், பயங்கரவாதத்தை தட்டிக்கேட்கும் ஹேக்டிவிஸ்டுகளின் வரலாறு!

படம்
  கோடிங் டெமாக்கிரசி மௌரின் வெப் எம்ஐடி பிரஸ் கட்டுரை நூல்  உலக நாடுகளில் உள்ள அரசு சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கணினி போராளிகளைப் பற்றிய நிறை, குறை, போராட்டங்கள், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிப் பேசுகிற நூல் இது.  அடிப்படை மதவாத நாடுகள், மதவாத நாடாக மாறிவரும் இந்தியா போன்ற நாடுகள், ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தில் இயங்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில், ஜனநாயகம் கிடையாது. அதை மரபான ஊடகங்கள், பத்திரிகைகள், தன்னார்வ அமைப்புகள் பேச முடியாது. அப்படி பேசினால் உடனே அந்த நபர்கள் காணாமல் போய்விடுவார்கள். சிறையில் விசாரணையின்றி காலவரையின்றி வைக்கப்படுவார்கள். விஷம் வைத்து அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். இதுதான் சர்வாதிகார அரசில் உள்ளவர்களுக்கு நேரும் நிலைமை. ஆனால் இதெல்லாம் அடையாளம் தெரிந்து செயல்படும் ஆட்களுக்குத்தான்.  அதே சர்வாதிகார நாட்டில் இணையத்தில் இயங்கும் ஹேக்டிவிஸ்டுகள் உண்டு. இவர்கள் கணினி கோடிங்கைக் கற்றுக்கொண்டு அதை வைத்து அரசு செய்யும் குற்றங்களை உலகிற்கு கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் குழுக்களாக அல்லது தனியாக இயங்கி வருவார்கள். இவர்களை பிடித்து சிறையில் அடைப்பது கடினம். பெரும