இடுகைகள்

வெப்தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதம், வகுப்புவாத கருத்துக்களைப் பற்றி உறுதியாக இருந்த நேரு! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? கடந்த 25ஆம் தேதி முதல் நாங்கள் வேலை செய்த நாளிதழ் பதிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. திங்கள் மட்டும்தான் இதழ் வெளியாகும். அதற்கான வேலைகளை செய்து தரவேண்டும்.  எம்எக்ஸ் பிளேயரில், லிமிட்லெஸ் என்ற வெப்தொடரைப் பார்த்தேன். மூளையை சுறுசுறுப்பாக்கி அதன் சக்தியைக் கொண்டு குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒருவரின் கதை. வேலை இல்லாமல் கஷ்டப்படும் இளைஞனுக்கு இந்த மாத்திரை கிடைக்கிறது. கூடவே இதனைத் தயாரித்து விற்கும் மாபியா தலைவனின் பகையும் போனஸ். இப்பிரச்னைகளைச் சமாளித்து கொலைப்பழியிலிருந்து தப்பி காவல்துறைக்கு உதவத் தொடங்குகிறான்.  அவனுக்கு பக்கபலமாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் இருக்கிறார். நாயகன், மூளையை உசுப்பும் மருந்தின் பக்கவிளைவுகளை தடுக்கும் மாற்று மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால் கண்ணில் கற்பனைக் காட்சிகள் தோன்றும், உடல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார்கள். காமெடியில் அசத்தியிருந்தார்கள். குடும்பம், காதல், நட்பு, துரோகம், அரசியல் பழிக்குப்பழி என நிறைய விஷயங்களை சொல்ல முயன்றிருந்தார்கள். பரபரவென தொடர் பற

பகைவனுக்கும் அருளும் இதயநோய் மருத்துவனின் ரத்தசரித்திரம்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் - இறுதிப்பகுதி

படம்
        பகைவனுக்கும் அருளும் நெஞ்சமுடைய மருத்துவனின் ரத்தசரித்திரம் ! டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் இறுதிப்பகுதி கொரிய தொடர் எம்எக்ஸ் பிளேயர் முன்னமே கூறியது போல வெறும் காதல் கதை என்பதாக எடுக்காமல் , வடகொரியா , தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வெறுப்பு , அரசியல் சதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கொரிய தொடர் . துருக்கி தொடர்கள் போல வளவளவென நீளாமல் இருபது எபிசோடுகளில் கதையை நிறைவு செய்திருப்பதற்கு தொடரின் இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டும் . பார்க் குவான் இதயநோய் மருத்துவர் . அவரின் அப்பா புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர் . அவரின் நண்பர் சோய் செய்த அறுவை சிகிச்சை தோற்றுப்போக , மனசாட்சிப்படி அது மருத்துவமனையின் , மருத்துவரின் தவறு என்று சாட்சி சொல்ல தயாராகிறார் . ஆனால் மருத்துவமனை சேர்மன் மருத்துவமனையைக் காப்பாற்ற , ஊழல் பிரதமரின் செல்வாக்கைப் பெற்று பார்க் குவானின் அப்பாவை வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கிறார் . உதவி என்று அனுப்பி வைக்கப்பட்டாலும் அவர் திரும்பி வரக்கூடாது என்பதுதான் தென்கொரியா , வடகொரியா அரசியல்வாதிகளுக்குள் ப

நவீன இளைஞனை டார்ச்சர் செய்யும் வெவ்வேறு காலகட்ட மனிதர்கள்! டைம் என்ன பாஸ்? - சூப்பர் சுப்பு

படம்
            டைம் என்ன பாஸ்?     டைம் என்ன பாஸ்? சூப்பர் சுப்பு சுட்டகதை என்ற படத்தை எடுத்தவர்தான் இந்த இயக்குநர். ஏறத்தாழ அந்தப்படத்திலிருந்து பெரிய மாறுதல்கள் இல்லாமல் மற்றொரு மேடை நாடகம் போன்ற வெப்தொடரை உருவாக்கியுள்ளார்.  டைம் என்ன பாஸ்? 2019இல் வாழும் ஐடி இளைஞன் அறைக்கு வரும் பல்லவ நாட்டு உளவாளி, இஸ்ரோ விஞ்ஞானி, பிரிட்டிஷ் கால ஆங்கிலோ இந்தியன் பெண், எதிர்காலத்திலிருந்து வரும் டெக் இளைஞன் ஆகியோர் வந்தால் என்ன களேபரங்கள் நடைபெறும் என்பதுதான் கதையின் முக்கியமான மையம். இந்த வெப் தொடரை பெரிதாக எதிர்பார்ப்புகளுடன் பார்த்தால், மிஞ்சுவது வாட்ச்மேனாக வரும் சந்தோஷம் (அலெக்ஸ்), பல்லவ உளவாளி (கிள்ளிவளவன்) ஆகிய இருவர் மட்டும்தான். குழுவில் வித்தியாசமாக தென்படுவது, செவத்தபையனாக வரும் பரத்தான். மாட்டு ஊசி போடும் டாக்டர் போல என்ன செய்வதென தெரியாமல் வெப் தொடர் முழுக்க தவித்திருக்கிறார். வெவ்வேறு காலத்திலிருந்து நவீன காலத்திற்கு வருகிறார்கள் நிச்சயம் பட்ஜெட் பெரிதாக இருந்தால் மட்டுமே பெரிதாக ஏதேனும் சாதிக்கமுடியும். இல்லையென்றாலும் உரையாடல்களில் கூட சுவாரசியம் ஏற்படுத்தலாம். ஆனால் இந்த வெப்தொடரில் எ

உண்மை ஆய்வாளரின் குற்றவழிப் பயணம்- பியோம்கேஷ் பக்சி

படம்
பியோம்கேஷ்  ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் தமிழில்... இயக்கம் - சயானந்தன் கோசல் மூலக்கதை - சராதிந்து பந்தோபாத்யாய பியோம்கேஷ் - அனிர்பன் பட்டாச்சார்யா அஜித் - சுப்ரதா தத் ஷெர்லாக் ஹோம்ஸின் தமிழ் வடிவம் என்கிறார்கள். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பியோம்கேஷ், உண்மை ஆய்வாளர். தன்னை டிடெக்டிவ் என்று கூட சொல்லிக்கொள்வதில்லை. அவருடன் எழுத்தாளர் அஜித் உடன் இருக்கிறார். அவர் அவ்வளவு சுதாரிப்பான புத்திசாலி அல்ல; ஆனால் பியோம்கேஷ் சொல்வதைச் செய்வார்.  கதை 1 முதல் கதை போதைப்பொருட்களை விற்கும் மருத்துவர், தன்னை தெரிந்துகொண்ட சிலரைக் கொலை செய்கிறார்.இதனைக் கண்டுபிடிக்கும் பியோம்கேஷ், அவரை கத்தியும் கையுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார். கதை நடப்பது 1930 ஆம் ஆண்டு. வேட்டி கட்டிக்கொண்டு ஓடுவது, உதைப்பது, நொடிக்கொருமுறை தீப்பெட்டியை தொடையில் தட்டி யோசிப்பது என அனிர்பன் பட்டாச்சார்யா நடிப்பில் பிரமிக்க வைக்கிறார். வயதான நிறைய சொத்துக்களை வைத்துள்ள பெருசுகளை வரிசையாக போட்டுத் தள்ளுகின்றனர். யார் காரணம் என்று தேடுகிறார்கள். ஆனால் பிடிக்க முடியவில்லை. அதி புத்திசால