இடுகைகள்

பார்ச்சூன் 2024 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசியாவில் வலிமையான தொழிலதிபர் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024

படம்
             powerful womens asia fortune asia 2024(not included india) siyun chen bristol myers squibb பிரிஸ்டல் நிறுவனத்தின் துணைத்தலைவர், பொது மேலாளராக இருக்கிறார் சென். இவர். 2011ஆம் ஆண்டு தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோவில் உள்ள மலைத்தொடரில் கணவருடன் மலையேற்றம் செய்ய முடிவெடுத்தார்.  அந்த செயல்பாடு இலக்கு, அதன் முக்கியத்துவம், கூட்டாளிகள் மீது வைக்கும் நம்பிக்கை, நெகிழ்வுத்தன்மை பற்றி புரியவைத்ததாக கூறுகிறார். அமெரிக்க நிறுவனமான பிரிஸ்டலின் ஆசிய வணிகம், சீனா ஆகியவற்றை சியுன் கவனித்து வருகிறார். இந்த பணிக்கு முன்னர் ஜிஎஸ்கே, நோவர்டிஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். sung suk suh cosmax தலைவர், துணை நிறுவனர் சங்கின் கணவர் கியுங்தான் காஸ்மேக்ஸ் நிறுவனத்தை 1992ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த நிறுவனம் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களை தயாரித்து விற்று வருகிறது. காஸ்மேக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா, சீனா, தென்கொரியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகள் உண்டு. கடந்த ஆண்டு நிறுவனம், 1.3 பில்லியன் டாலர்களை லாபம் பார்த்துள்ளது. கலீஜா...

தொழில்துறையில் சாதனை செய்யும் பெண் தொழிலதிபர்கள், அதிகாரிகள் - பார்ச்சூன் 2024

படம்
      ஆற்றல் வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் - பார்ச்சூன் 2024 கிரேஸ் சுவா இயக்குநர், ஃபேர்பிரைஸ் குழுமம் சிங்கப்பூர் grace chua fairprice group சுவா, குழுமத்தின் ஓன் பிராண்ட்ஸ் பிரிவின் இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனம், சிங்கப்பூரின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலித்தொடர் அமைப்பைக் கொண்டுள்ளது. ஓன் பிராண்ட்ஸ் என்பது, குறைந்த விலையிலான பொருட்களை விற்று வருகிறது. சுவா, குழுமத்தில் 2017ஆம் ஆண்டு இணைந்தார். அதற்கு முன்னால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திலும், கல்வி தொடர்பான ஸ்டார்ட்அப்பிலும் வேலை செய்திருக்கிறார். ஃபேர்பிரைஸ் குழுமம் தனது பொருட்களை பிலிப்பைன்ஸ் நாட்டில் விற்க திட்டமிட்டு வருகிறது. ஜெனிபர் வாங் சுயி ஃபென் நிதி தலைவர், மேக்சிஸ் மலேசியா jenifer wong chui fen maxix மலேசியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதில் வணிக திட்டமிடல், நிதி மேலாண்மை ஆகிய பொறுப்புகளை வகிக்கிறார். தொலைத்தொடர்புத் துறையில் பதினேழு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். நிதி நிர்வாகத்தில் இருபத்தெட்டு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஜெனிபரின் வழிகாட்டுதலில் நிறுவனம் முந்தைய ஆண்டை விட அதிக...