பிழைத்திருப்போம்! மின்சாரம் என் மீது பாய்கின்றதே?
பிழைத்திருப்போம்! மின்சாரம் என் மீது பாய்கின்றதே? மின்சாரம் இல்லாமல் மனிதர்கள் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. இன்று அப்படியான காலம் சாத்தியமில்லை. அதை சாத்தியப்படுத்த இயற்கை பேரிடர்கள் முயல்கின்றன. மின்சாரம் இல்லையென்றாலும் எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம். ஜெனரேட்டர்களை வாங்கவில்லையா? வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கூடவே அதற்கான பெட்ரோல், டீசலும் போதுமான அளவுக்கு தேவை. அடிப்படையில் உணவு, நீர், தங்கும் இடம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகவே மின்சாரம் வரும். எனவே மின்சாரத்தையே நினைத்து அடிப்படை விஷயங்களை கோட்டை விட வேண்டாம். செல்போன், இபுக் ரீடர், ஷேவிங் கருவிகள், அடுப்பு என அனைத்துமே மின்சாரத்தில் இயங்குபவை என்றால் மின்சாரத்தை ஜெனரேட்டர் வழியாக பெறுவதற்கு முயலவேண்டும். வேறு வழியே இல்லை. வீட்டில் சோலார் முறையில் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்தாலும் நன்மையே. ஆபத்துகாலத்தில் ஜெனரேட்டர்களை அதிக விலைக்கு விற்பார்கள். எனவே, முன்னமே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. பவர் பேங்குகளின் காலம் இது. எனவே, அவற்றை சார்ஜ் போட்டு வைத்தால் போன்களை உயிரோடு வைத்துக்கொள்ளலாம். மின்சாரம் இல்லாதபோது போனில் பணத...