இடுகைகள்

அகிம்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியை எளிமையாக அறிந்துகொள்ள உதவும் ஆங்கில நூல் - காந்தி எ ஷார்ட் இன்ட்ரொடக்‌ஷன் - ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்

படம்
  காந்தி ஒரு சுருக்கமான அறிமுகம் ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்  நூல் மொத்தம் 152 பக்கங்களைக் கொண்டது. இதில் காந்தியைப் பற்றி நாம் என்னென்ன தேவையோ  அவற்றை சுருக்கமாக அறிந்துகொள்ள முடியும். காந்தி நிறைய எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி வெறும் 150 பக்கங்களிலேயே அறிய முடியுமா என்ற அவநம்பிக்கையோடு படித்தாலும் இறுதியில் நாம் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம் என்பதே உண்மை.  நூலில் காந்தியன் அகிம்சை, சத்தியாகிரகம், அவரின் ஆன்மிக அனுபவம், நிர்வாண சோதனை, அரசுக்கு எதிரான போராட்டம், நேர்மை என நிறைய விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அனைத்தும் சுருக்கமாக என்றாலும் சில இடங்களைப் படித்துப் புரிந்துகொள்வது சற்று கடினம்தான். அந்தளவு அவரின் கொள்கைகளை ஆங்கிலத்தில் சுருக்கியிருக்கிறார்கள்.  காந்தி ஒரு சுருக்கமாக அறிமுகம் என்பது தலைப்பிற்கு ஏற்றபடி காந்தியின் அடிப்படைகளை எளிமையாக தெரிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் இதில் அவரின் ஆன்மிக அனுபவங்கள் பற்றிய பகுதி சற்று புரிந்துகொள்ள கடினமானவை. அதுதவிர மற்ற விஷயங்கள் சிறப்பாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.  கோமாளிமேடை டீம்  image pinterest good reads

சத்யமேவ ஜெயதே மின்னூல் இப்போது கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளத்தில்.... வாசியுங்கள்!

படம்
  காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் இந்தியா எப்படி இருக்கிறது, காந்தியின் காலத்திற்கும் இன்றைக்கும் என்ன வேறுபாடுகளை நாடு அடைந்திருக்கிறது, இன்றும் விவாதிக்கப்படும் காந்தியின் கருத்துகள், பரிசோதனைகள் என்ன என்பதைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டுள்ள நூல் இது. பல்வேறு மதவாத சக்திகளும் காந்தியை தத்தெடுத்து தங்களின் கருத்துகளுக்கு ஏற்றபடி அவரை உருமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் காந்தியவாதிகள் எப்படி செயல்படவேண்டும் என்பதையும் நூல் கூறுகிறது. உண்மையே கடவுள் என்பதை ஒருவர் தன் வாழ்வு வழியாக எப்படி தேடி கண்டறிகிறார் என்பதற்கு காந்தியின் வாழ்க்கையே முக்கியமான சான்று. நூலில் காந்தி நல்லவர் என்று வாதிடவில்லை. அவர் பல்வேறு குறைகளைக் கொண்ட மனிதர்தான். மகத்தான மனிதராக மாற இடையறாது பல்வேறு பரிசோதனைகளை செய்துகொண்டிருந்தார். உண்மையை காந்தி கடவுளென கண்டுகொண்ட தருணம் முக்கியமானது. பல்வேறு அக, புற அழுத்தங்களுக்கு இடையில் இந்தியாவை ஒரே நாடாக கலாசார வேற்றுமைகளோடு கட்டமைக்க முயன்ற ஆளுமை காந்தி. நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமான பல்வேறு திறன்கள் உள்

சத்யவே ஜெயதே - மின்னூல் வெளியீடு - விரைவில்....... நூல் அட்டை அறிமுகம்

படம்
  காந்தியைப் பற்றிய அவரது கொள்கைகளைப் பற்றி அறிய உதவும் சிறிய நூல். மொத்தம் 92 பக்கங்கள். காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டு கடந்து சென்றிருக்கிறது. தற்போது இந்தியாவின் நிலை என்ன, அதில் காந்தியின் தாக்கம் என்ன என்பதை அலசி ஆராயும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. இந்த நூல் விரைவில் கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த தளத்தின் விசேஷமாக நூலின் சில பக்கங்களை நீங்கள் வாசித்துவிட்டு நூலை வாங்க முடியும். அமேஸானில் இந்த வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வகையில் தற்போதைக்கு கூகுள் தளத்தில் இது சிறப்பானதுதான் என்று கூறலாம். 

காந்தியின் உருவத்தைப் பார்த்து நாம் பெறும் செய்தி!

படம்
  பொதுவாக காந்தியின் வழிமுறைகளாக கூறுவது என்ன ? அமைதி , அநீதிக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு , எதிர்ப்பது , போராடுவது ஆகியவைதான் . இதைத் தாண்டி உணவு , உடை , குடிநீர் , மின்சாரம் ஆகியவற்றை வீணாக்காமல் பயன்படுத்துவதை காந்தியின் பெயர் சொல்லித்தான் சொல்லுவார்கள் . உள்நாட்டு துணிவகைகளைப் பயன்படுத்துவது இதில் முக்கியமானது . காதியில் கிடைக்கும் காடாத்துணிகளை தைத்து உடைகளாக்கி போடுவது ஒரு காலத்தில் நாகரிகமாக இருந்தது . இன்று காதி , சர்வோதய சங்கத்தில் விற்கும் சட்டைகள் சற்று பெரிதாக வினோதமான வடிவமைப்பில் இருந்தாலும் , துணிகளை வாங்கி சாதுரியமாக தையல்காரரிடம் விருப்பம் போல தைத்துக்கொள்ளும் புத்திசாலிகளும் உண்டு . உடைகளை பழசாகிவிட்டால் தூக்கி எறிவதை காந்தி வெறுத்தார் . அதை கிழியும் வரையில் பயன்படுத்தலாம் . கிழிந்துவிட்டாலும் கூட அதை பயன்படுத்தும் வழிகள் உண்டு . இது நம்மை காசு செலவழிக்காத கருமியாக காட்டலாம் . ஆனால் அப்படி பயன்படுத்த கற்றால் உங்களுக்கு செலவுகள் குறையும் . பொருட்களால் வீட்டை நிறைக்க மாட்டீர்கள் . வாழ்க்கையும் எளிமையாக மாறும் . காந்தியின் சத்திய சோதனை நூலை ஒருவர் படிக்கும்போது அவர் பள

காந்தியின் அரசியலைச் சொன்ன அவரின் உணவுமுறை

படம்
              காந்தியின் அகிம்சை , சுய சிந்தனை அனைவரும் அறிந்த ஒன்றுதான் . இதைக்கடந்த ஒன்றை அவர் செய்தார் . அதுதான் , நேர்த்தியான உணவு பண்டங்களைக் கொண்ட உணவுமுறை . காந்தி , வைஷ்ண குடும்பத்தில் பிறந்தவர் . சைவ உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினார் . அவர் சிறுவயதில் ஒருமுறை ஆட்டின் இறைச்சியை ரகசியமாக சாப்பிட்டுப் பார்த்தார் . பிறகு வாழ்வெங்குமே இறைச்சியை அவர் சாப்பிடவில்லை . அதற்கு மாற்றாக கிடைத்த பொருட்களை உண்டார் . அவை அனைத்துமே எளிமையான உணவுதான் . கோதுமை , சோளம் , சோயாபீன்ஸ் அல்லது வேர்க்கடலை பால் ஆகியவற்றை காந்தியின் உணவு என ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் உருவாக்கினார் . இது இன்று வீகன் என்று கூறப்படுகிறது ., பசுவின் பாலை தானே பயன்படுத்தி வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் அப்படி விலங்கிடமிருந்து பெற்று குடிப்பது அறமல்ல என்று தோன்றியிருக்கிறது .. உடனே அதை நிறுத்திவிட்டார் . ஆனால் அந்த பால் கொடுத்த நிறைவை அதற்கு பதிலீடான உணவுகள் ஏதும் கொடுக்கவில்லை . எனவே , வேறுவழியின்றி பாலுக்கு மாற்றாக பாதாம் பாலை காய்ச்சி குடிக்கத் தொடங்கினார் . ஆனால் பசுவின் பாலைப்ப

காந்தியை மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் - சோபன் ஜோஷி

படம்
                 மாணவர்களிடத்தில் காந்தியை கொண்டு போய் சேர்ப்பது எப்படி?   சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி இன்றுவரை காந்தி இந்தியாவில் பேசுபொருளாகவே இருக்கிறார் . அவரை நேரடியாக வாழும் மனிதராக பார்க்க முடியாவிட்டாலும் தினசரி வாழ்க்கையி ல் எளிதாக சந்தித்து விடலாம் . அவரை ரூபாய் நோட்டுகளில் , சாலைகளின் பெயராக , குப்பைகளை அள்ளும் திட்டத்தில் காந்தி இருப்பார் . அவரின் வட்டமான கண்ணாடி இருக்கும் ., நேர்மை , உண்மை என்று பேசப்படும்போதும் காந்தியை தவிர்த்து வேறு யாரை நாம் கூறிவிடமுடியும் . இன்று வாட்ஸ் அப் மூலம்தான் பலரும் செய்திகளை அறிகிறார்கள் . அதை வைத்தே அனைத்தையும் தெரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள் . இந்தியாவைக் கட்டமைத்தவர்களை நாக்கு வளைந்த வரை அவதூறு பேசுகிறார்கள் . குற்ற உணர்வேயின்றி , சுய லாபத்தை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள் . மனிதர்கள் பலவகை . அப்படித்தான் இருப்பார்கள் . இன்று வலது சாரிகள் தங்களது ஆட்சியில் காந்தியை பல்வேறுவிதமாக விவாதப் பொருளாக்கி அவரை ஓரங்கட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள் . அது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை . அவர் எழுதிய பேசிய எழுத்துகளே நூற

தென் ஆப்பிரிக்காவில் இனவெறி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது!

படம்
  சூயஸ் கால்வாய் கட்டப்பட்டபிறகு வணிகம் அதிகரித்ததை இங்கு முன்னமே எழுதியிருக்கிறோம். இதற்கு முன்னர், ஐரோப்பியர்கள் எப்படி வணிகம் செய்தார்கள்? தென் ஆப்பிரிக்கா வழியாக சென்று ஆசியாவை அடைந்து வணிகம் செய்தார்கள். வணிக உதவிகளுக்காக இங்கு பல்வேறு வணிக மையங்களை அமைத்து இருந்தனர். துறைமுகங்களையும் இந்த முறையில் அமைத்து வணிகம் கெடாதபடி பார்த்துக்கொண்டனர்.  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க மக்களை இனவெறி கொண்டு பிரித்தனர். அவர்களை ஆப்பிரிக்கானர்ஸ் என்று அழைத்து வந்தனர். டேனியல் மாலன் என்பவர் அங்கு ஆட்சிக்கு வந்ததும் இனவெறிக் கொள்கையை உடனே நடைமுறைக்கு கொண்டு வந்தார்.  இதன் மூலம் அம்மக்களை எளிதாக சுரண்ட முடிந்தது கருப்பின மக்களை பொதுவெளியில் அரசு அனுமதிக்கவில்லை. பார்த்தால் அடி உதை அபராதம் என சென்றது. இவர்களால், நாடாளுமன்றத்திற்கு கூட வரமுடியாது. இதெல்லாம் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பூர்விக மக்களுக்குத்தான் என்றதும் அதிர்ச்சியாக இருக்கும்.  இவர்கள் உள்ள பகுதிகளுக்கு பந்துஸ்தான் என்று பெயர். இந்த மக்களுக்கு அடிப்படையான உரிமைகள் கிடைக்காத காரணத்தால் அமெரிக்கா, ஐ.நா அமைப்பு என இரண்டுமே த

மத மோதல்களை போக்கும் உரையாடலுக்கு ரெடி - விபின்குமார் திரிபாதி

படம்
  ஐஐடி டெல்லியில் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்றபிறகு என்ன செய்வார்? இருக்கும் தொடர்புகளை வைத்து வெளிநாடுகளுக்கு செல்வார், தனது சொந்த விஷயங்களை செய்வார். ஆனால் டெல்லியைச் சேர்ந்த விபின்குமார் திரிபாதி, நாடெங்கும் சென்று மதமோதல்களை தடுக்கும் முயற்சியை செய்து வருகிறார்.  ஏறத்தாழ இது வங்கப் பிரிவினையின்போது நடந்த மத மோதல்களை தடுக்க காந்தி தொடர்புடைய இடங்களுக்கு சென்ற சம்பவம் போல இருக்கிறதா? அதேதான். அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். அகிம்சை வழியில் முடிந்தளவு மக்களிடம் பேசி வன்முறை உணர்வை மட்டுபடுத்த நினைக்கிறார்.  பத்து பேரிடம் பேசினால் கோபமாக இருப்பவர்களில் ஒருவர் மட்டுமே என் பேச்சை கேட்கிறார். இந்த அளவில் எனது பணி இருக்கிறது. இந்தியா உயிர்வாழ்வது இப்படி பட்ட சிலரால்தான் என்கிறார்.  திரிபாதியின் உறவினர்கள் இவரையும் குடும்பத்தையும் பார்த்தாலே பதற்றமாகி வேறுபக்கம் திரும்பிக்கொண்டு வருகிறார்கள். நலம் விசாரித்தலைத் தாண்டி வேறு எதையும் அவர்கள் பேசுவதில்லை. ஆனாலும் திரிபாதி எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார். அதை நோக்கி போய்க்கொண்டே இருக்கிறார்.  வி

என்னுடைய தந்தை எப்போதும் ஓய்வெடுப்பதில்லை! சரோஜினி நாயுடு ஆல் இந்தியா ரேடியோ உரை!

படம்
    என்னுடைய தந்தை எப்போதும் ஓய்வெடுப்பதில்லை !     சரோஜினி நாயுடு 1948 ஆண்டு பிப்ரவரி 1 அன்று , இந்துத்துவவாதிகளால் காந்தி சுடப்பட்டு இறப்பதற்கு இரு நாட்களுக்குப் பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் சரோஜினி நாயுடு ஆற்றிய உரையின் சுருக்கம் இது . இன்று காந்தியை விரும்பிய அனைவரும் , அவரை அறிந்தவர்கள் , அவரது பெயர் மட்டுமே கேள்விப்பட்டவர்கள் கூட அவருக்காக அஞ்சலி செலுத்துகிறோம் . ஒரு அதிசயம் போன்ற ஆளுமை அவர் . அவரது இழப்பு நம் மனதில் சோகத்தையும் கண்ணீர் கண்ணீரை ஆற்றொழுக்காகவும் பெருக்குகிறது . அவர் எப்படி வாழ்ந்தார் , தனது வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை இழந்தார் , அவரது ஆன்ம சக்தி எத்தகையது , வெறும் சதையல்லாத ஆற்றலின் வடிவமாக உலக ராணுவ வலிமைகளையும் மிஞ்சியிருந்தார் . காந்தி சிறியவர்தான் , எளியவர்தான் . அவரிடம் பணம் கூட கிடையாது . ஏன் உடுத்திக்கொள்ள உடலை மறைக்க முழுமையான உடை கூட அவரிடம் இல்லை . ஆனால் அவரை விட வலிமையான ஆயுதங்களை கொண்டவர்களை எதிர்த்து நின்றார் . இது உலகளவில் எங்காவது சாத்தியமா ? இதற்கு காரணம் ஒன்றுதான் , அவர் யாருடைய பாராட்டுகளுக்காகவும் ஏங்கவில்லை . அ