இடுகைகள்

ஜம்மு காஷ்மீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய ஜனநாயகத்தை காக்கும் ஆயுதமாக மாறிய இணையசேவை தடை!

படம்
  இணைய சேவை தடை ஜனநாயகத்தைக் காக்கும் இணையசேவை தடை!   உலக நாடுகளில் அதிக முறைகள் இணையம் துண்டிக்கப்பட்டு தடை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. 2012ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை 734 முறை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் உச்சபட்சமாக 421 முறை இணையம் துண்டிக்கப்பட்டு தேச ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்து சட்டத்தை திரும்ப பெற்றதற்கு பிறகு 550 நாட்கள் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 தொடங்கி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 6 வரை 4ஜி இணையசேவை முழுமையாக அரசால் துண்டிக்கப்பட்டு, மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கடித்தனர். அரசியல்ரீதியாக சிக்கல் ஏற்படும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவது மெல்ல வாடிக்கையானது. 2017ஆம்ஆண்டு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து கோரிக்கை எழும்பப்பட்டு போராட்டங்கள் உருவாயின. உடனே அரசு   நூறு நாட்களுக்கு இணைய சேவையை நிறுத்தி வைத்தது.   அண்மையில் பஞ்சாபில் காலிஸ்தான் நாட்டுக்கான போராட்டம் தொடங்கியது. இதை தொடங்கி வைத்த அம்ரித்பால் சி

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை விளையாட்டு மூலம் ஊக்குவிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் - ஷானாஸ் பர்வீன்

படம்
        விளையாட்டு மூலம் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும் விளையாட்டு ஆசிரியர்! காவல்துறையில் பணியாற்றிய அப்பா மறைந்துவிட, குடும்பம் பொருளாதாரத்திற்கு தடுமாறியது. அந்த நிலையிலும் ஷானாஸ் பர்வீனின் விளையாட்டு ஆர்வத்திற்கு அவரின் அம்மா தடை விதிக்கவில்லை. இதனால் தான் இன்று ஷானாஸ் கால்பந்து, ரக்பி, ஐஸ் ஸ்டாக், பென்கேக் சிலாட் என பல்வேறு விளையாட்டு அமைப்புகளை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். காஷ்மீர் இளைஞர், பெண்களை விளையாட்டு வழியாக ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தனி மனிதராக பெரும்பாடு பட்டிருக்கிறார் ஷானாஸ். அரசு ஆதரவு இல்லாத நிலையில் அப்பாவின் ஓய்வூதியம் மட்டுமே அம்மா, தாய் இருவரின் வயிறு காயாமல் காப்பாற்றியது. எந்த நிலையிலும் தனது விளையாட்டு கனவை கருகவிட்டதில்லை. அதற்கு, அவரைப் புரிந்துகொண்ட தாய் கிடைத்தது முக்கியமானது. இதனால் விளையாட்டு பயிற்சிக்கு போய்விட்டு வீட்டுக்கு தாமதமாக வரும்போது, வீட்டுக்கு தாமதமாக வருகிறாள் பாருங்கள், பையன்களுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறாள், விளையாடி காயம்பட்டால் இவளுக்கு எப்படி திருமணமாகும் என பல்வேறு சாடைகள் பேசப்பட்ட சூழலி