இடுகைகள்

பாப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காது கேட்காத மாற்றுத்திறனாளியை காதலிக்கும் இளம்பெண்ணின் வாழ்க்கை! - சைலன்ட் - ஜப்பான்

படம்
  சைலன்ட் டிவி தொடர் ஜப்பான் - ஜே டிராமா  ராகுட்டன் விக்கி ஆப்   பள்ளிப்பருவ காதல்கதை. பள்ளிப்பருவத்தில் உற்சாகமாக தொடங்கும் காதல்,   பின்னாளில் காதலனின் உடல்நலப் பிரச்னையால் பிரிந்து மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக தொடங்குகிறது. அவர்களின் காதல் மீண்டும் தொடங்கியதா, ஒன்று சேர்ந்ததா என்பதே கதை. ஒரு எபிசோட் ஒரு மணிநேரம் என மொத்தம் பதினொரு எபிசோடுகள் உள்ளன. காசு கட்டினால் விளம்பரத்தொல்லையின்றி பார்க்கலாம். இல்லையென்றால் விளம்பரத்தைப் பார்க்கவும் ஏராளமான டேட்டா செலவாகும். சௌக்கு என்ற சகுரா, பள்ளியில் படிக்கிறார். இவரை மினாட்டோ என்ற மாணவர் ஆவோவா என்ற தனது தோழிக்கு அறிமுகப்படுத்துகிறார். அவளுக்கு சகுராவைப் பார்த்த உடனே காதல் தோன்றிவிடுகிறது. சகுராவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.   எப்போதும் பாப் பாடல்களை கேட்டுக்கொண்டே இருப்பான். அவனுக்கு ஸ்பிட்ஸ் எனும் இசைக்குழுவின் பாடல்கள் இஷ்டம். அதுவரை அப்படி பாடல்கள் கேட்காத ஆவோவா மெல்ல இசையின் வசமாகிறாள். சௌக்குவிடம் இரவல் வாங்கும் பாடல்களைக் கேட்டுக்கொண்டே தனது படிப்பைத் தொடர்கிறாள். வகுப்பறையில் வெளியில் என சகுராவும் ஆவோவாவும

அசத்தும் பாப்ஸ்டார் அமித் திரிவேதி!

படம்
  யூட்யூபில் எப்போது உலாவி வருபவர்கள் அமித் திரிவேதியின் ஏடி ஆசாத் சேனலை பார்க்காமல் இருக்க முடியாது. இதில் பெரும்பாலும் அனைத்து வீடியோக்களிலும் அமித் பாடி ஆடுகிறார். நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்கிறார்.  சினிமா பாடல்களின் தன்மை இல்லாமலேயே யூட்யூபில் இருபது பாடல்களை வெளியிட்டு விட்டார். பெரும்பாலும் வீடியோக்களில் வெட்கப்படும் அமித், இப்போது தைரியமாக பாடுவதோடு  குழுவாக நடனக் கலைஞர்களோடு சேர்ந்து ஆடுகிறார். எப்படி இந்த மாற்றம் என்று கேட்டோம். முதலில் எனக்கு இசையை உருவாக்கினால் போதும் என்று தோன்றியது. ஆனால் இப்போது இசையமைப்பாளர் என்பவர், தனக்கென தனி சேனல், இசை அமைப்பது, வீடியோக்கள், நேர்காணல் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டுவது முக்கியம். இன்றைய காலத்தில் இது நமக்கு அழுத்தம் கொடுக்கிறதாக மாறியுள்ளது என்கிறார்.  2010 முதல் 2015 ஆண்டு வரையில் ஏராளமான ஆல்பங்களை ஹிட் கொடுத்தவர் அமித் திரிவேதி. தேவ் டி, பாம்பே வெல்வெட், உடான் , இஷ்க்ஜாடே, குயின் ஆகிய படங்களின் பாடல்கள் புகழ்பெற்றவை. தற்போதும் இந்தி படங்களுக்கும் தென்னிந்திய படங்களுக்குமான இசையையும் வழங்குகிறார். தெலுங்கில் சைரா நரசிம்மரெட

முரடன், சாமுராய், துறுதுறு பெண் என மூன்று பேரும் இணைந்து சாமுராயைத் தேடிச்செல்லும் பயணம்! - சாமுராய் சம்புலு - அனிமேஷன்

படம்
                  சாமுராய் சம்புலு அனிமேஷன் தொடர் இருபத்தி ஆறு எபிசோடுகள் குருவைக் கொன்றுவிட்டு சுற்றும் சாமுராய் வீரனும் , ரைகு தீவில் வளர்ந்த குற்றவாளி ஒருவனும் நண்பர்களாகி , இளம்பெண் ஒருவளுக்கு அவளது தந்தையைக் கண்டுபிடிக்க உதவுகிறார்கள் . தொடரின் டைட்டிலிலேயே ஜின் என்ற சாமுராய் வீரன் எப்படி , முகன் என்பவன் எப்படி , இவர்களை தனது பாதுகாவலர்களாக கொண்டு தந்தையைத் தேடும் ஃபு என்ற பெண்ணின் குணம் எப்படி என சொல்லிவிடுகிறார்கள் . இருபத்தி ஆறு அத்தியாயங்களில் சிறுகதை போல ஒரு கதையைச் சொல்லுகிறார்கள் . இவற்றில் ஜின் , முகன் என இருவருமே தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொண்டு சண்டைபோடுகிறார்கள் , நகைச்சுவை செய்கிறார்கள் , காதலிக்கிறார்கள் , தங்களை நிழல் போலத் தொடரும் இறந்தகாலத்தை நினைத்து வருந்துகிறார்கள் , புதிய விஷயங்களைக் கற்கிறார்கள் . இரண்டு ஆண்கள் , ஒரு பெண் என்றால் முக்கோண காதல் இருக்குமே என்றால் அதில்தான் வேறுபாடு காட்டுகிறார்கள் . முகன் , காசு கொடுத்தால் எதையும் செய்யும் முரடன் . அதிகம் யோசித்து செயல்படுவது இவனுக்கு சரிவராது . கோபம் வந்தால் உடனே