நாயகனுக்கும் உதவும் துணைப்பாத்திரம், இறுதியில் கதையின் நாயகனாக மாறினால்....
ஐயம் போசஸ்டு ஸ்வார்ட் காட் மங்கா காமிக்ஸ் குன்மங்கா.காம் நகரில் உள்ள சிறுவன், காமிக்ஸ் ஒன்றை படித்துக்கொண்டிருக்கிறான். திடீரென அந்தக் கதையில் வரும் துணைப்பாத்திரமாக மாறி தொன்மைக் காலத்திற்குச் செல்கிறான். பத்தாண்டுகளுக்குள் தீயசக்தி இனக்குழுவோடு போர் நடக்கவிருப்பது அவனுக்கு முன்னமே தெரியும். அதாவது காமிக்ஸை படித்த காரணத்தால். அதற்கேற்ப நாயகனைக் கண்டுபிடித்து அவனுக்கு உதவி சண்டை போட வைப்பதுதான் கதை. நாயகன் மோ மோயங். நாம்கூங் குலத்தைச் சேர்ந்தவன். சரக்கு அடித்துவிட்டு பிறரை ஒரண்டு இழுப்பதுதான் அவனது வேலை. நகரில் உள்ள சிறுவனின் ஆவி, அவனது சுயநினைவு இல்லாத உடலில் புகுந்தபிறகு மாற்றம் ஏற்படுகிறது. அவனது காலை வெட்ட வந்த நாயகனிடம் மன்னிப்பு கேட்டு உயிர் பிழைக்கிறான். அதேநேரம், அவனுக்கு உதவி நெருக்கமாகிறான். அதேநேரம், வாள் பயிற்சியில் ஈடுபட்டு மெல்ல வலிமை பெறத் தொடங்குகிறான். அவனைப் பற்றி பெற்றோருக்கு பெரிய நம்பிக்கை இல்லை. மாமா, மாமா பையன் என யாருக்குமே இவன் உருப்படுவான் என்ற எண்ணமில்லை. இந்த அவநம்பிக்கையை மோ முயோங் மெல்ல மாற்றி துணைப்பாத்திரத்தில் இருந்து மையப் பா...