இடுகைகள்

சலவை சோப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ளை சலவை சோப்பால் வென்ற தொழிலதிபர்கள்!

படம்
  ராஜ் குழுமத்தின் தயாரிப்புதான் ராஜ் சூப்பர் ஒயிட் சோப். விலையுயர்ந்த நறுமண சோப்பை எப்படி இந்திய மக்களிடம் விற்றார்கள் என்பதுதான் வணிகம் வளர்ந்த கதை. குளியல் சோப்பு என்ன நிறத்தில் வேண்டுமானால் விற்கலாம். ஆனால் சலவை சோப்பு என்பது நீலநிறத்தில் இருக்கவேண்டும் என்பதுதான் பொதுவான இந்திய மக்களின் நம்பிக்கை. ராஜ் குழுமம் இப்படி நினைப்பவர்களின் நம்பிக்கையை மாற்றி வெள்ளை நிற சலவை சோப்புகளை பஞ்சாப், ராஜஸ்தானில் வெற்றிகரமாக விற்று வருகிறது. 2010ஆம் ஆண்டில் ராஜ் குழுமத்தில் ஒரே ஒரு சோப்புதான் இருந்தது. நேஷனல் சோப் மில்ஸ் என்ற பெயரில் தயாரித்து வந்த இந்த ஒரு சோப்புக்கு பிறகுதான் மாற்றங்கள் நடந்தன. இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வெள்ளை நிற சோப்பை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தனர்.  சோப்பு வணிகம் 1956ஆம் ஆண்டிலேயே பன்சால் குடும்பத்தினர் செய்துவந்தனர். அடுத்து வந்த சாகில், சலீல் ஆகியோர் இருவரும் இரண்டாம் தலைமுறை தொழிலதிபர்களாக மாறினர். சாகில் இங்கிலாந்து சென்று எம்பிஏ படித்துவிட்டு வந்து வணிகப்பொறுப்பை கையில் எடுத்தார். ராஜ், சகேலி என்ற சோப்புகளை விற்று வந்தபோதும் வருமானம் என்பது ஐம்பதாண்டுகளுக்