இடுகைகள்

நிகில் சித்தார்த் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தொற்று ரகசியம் பொதிந்த கிருஷ்ண ஆபரணத்தை மீட்க செல்லும் மருத்துவர்! கார்த்திகேயா 2 - சந்து மாண்டெட்டி

படம்
  கார்த்திகேயா 2 இயக்கம் சந்து மாண்டெட்டி இசை கால பைரவா ஒளிப்பதிவு கார்த்திக் கட்டமனேனி தனியார் மருத்துவமனையில் வேலை செய்பவன் கார்த்திக். கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன். அவன் அந்த மருத்துவமனையில் புகும் பாம்புகளை உயிருடன் பிடித்து அகற்றுவதில் திறமையானவன். இப்படி இருக்கும்போது ஒருநாள் அவன் செய்யும் செயலால், அவனுக்கு வேலை பறிபோகிறது. பிறகு, அவன் அம்மா கூறியதன் பேரில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற துவாரகா செல்கிறான். அங்கு சென்று விஷ்ணுவுக்கான நேர்த்திக்கடனை செய்ய நினைக்கிறாள் கார்த்திக்கின் அம்மா. இன்னொருபுறம், விஷ்ணுவின் மறைத்து வைக்கப்பட்ட மூன்று ஆபரணங்களைத் தேடி எடுத்தால் அதிலுள்ள விஷயங்களை வைத்து பெருந்தொற்று பிரச்னையை சமாளிக்க முடியும் என அகழ்வராய்ச்சியாளர்  நம்புகிறார். இவரை பின்பற்றி விஷ்ணுவின் ஆபரணங்களைத் திருடி அதை வைத்து மருந்து தயாரித்து லாபம் பார்க்க ரகசிய மருத்துவக்குழு ஒன்று முயல்கிறது.  கார்த்திக் எப்படி தனது அனுபவங்களின் வழியாக நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறுகிறான் என்பதே காட்சி ரீதியான கதை. ஆனால் இறுதிக் காட்சியில் பேசும்போது, அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுதான். நம்பிக்கையால்

கல்விச்சான்றிதழ் மோசடிகளை வெளியே கொண்டு வரும் டிவி ரிப்போர்ட்டரின் அக, புறவாழ்க்கை! - அர்ஜூன் சுரவரம் - நிகில் சித்தார்த்

படம்
                  பேக் டூ பேக்காக நிகில் சித்தார்த்தின் அடுத்த படம் இது.  அர்ஜூன் சுரவனம் நிகில் சித்தார்த், லாவண்யா திரிபாதி இயக்கம் டி சந்தோஷ் இசை சாம் சிஎஸ் கணிதன் படத்தை தெலுங்கு மொழியில் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் உருப்படியான விஷயம். காதல், காதல் தொடர்பான காட்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கவில்லை. படத்திலும் அதற்கான தேவையில்லை. போலி கல்வி சான்றிதழ்களை உருவாக்கி தவறான மனிதர்களை தற்குறிகளை அரசு வேலை, தனியார் வேலைக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனம் மாபியா ஆட்களை வைத்து செய்கிறது. இதை அடையாளம் கண்டுபிடித்து தனது மீதுள்ள களங்கத்தையும் பிற மக்களையும் எப்படி ஒருவன் காப்பாற்றுகிறான் என்பதே.... முதல் காட்சியில் ப ப் ஒன்றில் கார் கீ போல தெரியும் ஸ்பை கேம் ஒன்றை பொறுத்தி காட்சிகளை படம் பிடிக்கிறார்கள். அதை ஒருவன் தட்டிவிட்டுவிட அது நாயகி கையில் மாட்டுகிறது. அவள் அதை உடனே தரமாட்டேன் என நிறைய விவரங்களைக் கேட்கிறாள். அதற்கு அர்ஜூன் போலியான தகவல்களைக் கொடுக்கிறான். பிறகு சூழல் என்னாகிறது என்றால், அதே டிவி சேனலில் பப்பில் குத்து ஆட்டம் ஆடிய நாயகியும் சேர்கிறாள். பிறகுதான் அர்ஜூன் சொன்ன பொய

காதலுக்காக சாராய வியாபாரியுடன் மோதும் காதலன்! - வீடு தேடா - நிகில் சித்தார்த், பூஜா போஸ்

படம்
                      வீடு தேடா நிகில் சித்தார்த், பூஜா போஸ்  இயக்குநர் சின்னி கிருஷ்ணா இசை சக்ரி         திருப்பதியில் தனது அக்கா, மாமாவுடன் வாழ்ந்து வருகிறான் கத்தி சீனு. சீனுவைப் பொறுத்தவரை காதல் கடிதம் கொடுப்பதே முதல் பணி. பெண் ஒகே என்றால் மஜாப்பா மஜா என வாழ்ந்து வருகிறான். இந்த நேரத்தில் அவனுக்கு லவ்குமார் என்ற மனிதர் கிடைக்கிறார். அவரை ஏமாற்றி உடை, உணவு என அத்தனையும் ரெடி செய்துகொண்டு திருமணம் ஒன்றுக்கு செல்கிறார்கள்.    அங்குதான் சீனு, மேக்னா என்ற வெள்ளை அழகியைப் பார்க்கிறான். பார்த்தவுடனே பென் ஹியூமன் தமிழ் பாப் பாடல் வரியைப் போல ஃப்யூச்சர் ஆத்துக்காரி என மனதில் விதை விழுந்துவிடுகிறது. அப்புறம் என்ன அந்த பெண்ணை வளைக்க தன்னால் முடிந்த அத்தனையும் செய்கிறார். இத்தனைக்கும் அந்த பெண் குடிமைத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கிறார். காதல் கூடாது என்பதே ஒரே கொள்கை. எப்படியாவது அவளை கரெக்ட் செய்துவிட முயல்கிறான் சீனு. அந்த பெண்ணும் அவனின் கடி ஜோக்குகளுக்கு மயங்கி சிரித்து தனது சோகங்களை மறந்துவிடும் நேரத்தில் அவளது தோழிகள் அவள் சந்தோஷத்தைப் பொறுக்காமல் நீ காதலிக்கிறே இது பாவம் கிறிஸ்துவ பாதிர

சவால் விடும் காதலிக்காக நண்பர்களை ஏமாற்றி பாங்காங் செல்லும் அக்மார்க் காதலன்! -டிஸ்கோ -நிகில் சித்தார்த், சாரா சர்மா

படம்
                 டிஸ்கோ நிகில் சித்தார்த், சாரா சர்மா இன்னும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள் பலர் தெலுங்கு கதை, இயக்கம் - ஹரி கே சந்தூரி டிஸ்கோ, நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்க கூடியவன். அதேசமயம் அவனுக்குத் தேவையென்றால் நண்பர்களென்று பாராமல் சித்திரவதை செய்தாவது தேவையானதைப் பெற்றுக்கொள்ள தயங்காத ஆள். அப்படிப்பட்டவன், நண்பன் ஒருவனுக்கு ரௌடி ஒருவரின் குடும்பத்தில் திருமணத்தை செட் செய்கிறான். பிறகு, அதற்காக பார்ட்டி செய்வோம் என நண்பர்களை பாங்காங்கிற்கு அழைத்து செல்கிறான். இதற்கான பணம் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலையில் இருந்து கிடைக்கிறது. கிடைக்கிறது என்பதை விட பாஸ்கர பட்லா என்ற சிறு ரௌடியின் ஆட்களை அடித்துப் புரட்டி பணத்தைப் பெறுகிறார்கள். அந்தப் பணம் தெலுங்கு பேசும் டான் ஒருவருக்கு சொந்தம் என பில்ட் அப் கொடுக்கிறார்கள். உண்மையில் அந்த பணம் யாருடையது, அவர் பாங்காங்க் செல்லும் நான்கு நண்பர்களையும் பழிவாங்கினாரா என்பதே கதை. படம் பாதி நேரம் எதைநோக்கி செல்கிறது என்றே தெரியாமல் பயணிக்கிறது. அந்த நேரலத்தில் எல்லாம் நம்மை காப்பாற்றுவது நிகில் சித்தார்த்தான். அவர் தான் படத்தில் டிஸ்கோ. இவரின் அ

கிராக் பார்ட்டி: நெகிழ வைக்கும் கல்லூரி வாழ்க்கை

படம்
ABZMovies.Com கிராக் பார்ட்டி இயக்கம்: சரண் கோபிசெட்டி கதை: ரக்சித் ஷெட்டி வசனம்: சந்து மாண்டெட்டி ஒளிப்பதிவு: அத்வைதா குருமூர்த்தி இசை:அஜனீஸ் லோக்நாத் Sify.com ஜாலியான கல்லூரிக் கதை. ஆனால் வெட்டியாக ஆசிரியர்களை முட்டாளாக காண்பிக்கும் 1980 கால தமிழ் சினிமா கல்லூரி அல்ல என்பதுதான் கொஞ்சம் ஆசுவாசமாக உள்ளது. கல்லூரியில் முதல் ஆண்டு மாணவராக சேரும் கிருஷ்ணாவுக்கு(நிகில் சித்தார்த்) டிஸ்டிக்சன் வாங்கி ஆளுநர் கையில் அவார்ட் வாங்கும் ஐடியாவெல்லாம் கிடையாது. ஜாலியாக சரக்கு அடிக்கிறார், நண்பர்களை கிண்டல் செய்யும் சீனியர்களை குழுவாக சேர்ந்து அடி வெளுக்கிறார். கல்லூரி மாணவிகளை அவர்களே பீதியாகும்படி லவ் பண்ண முயற்சிக்கிறார். iQlik Movies அப்போதுதான் மீரா எனும் சீனியர் மாணவி(சிம்ரன் பரீஞ்சா) அறிமுகமாகிறார். நிகிலின் மொத்த நண்பர் குழுவே அம்மணிக்கு பிராக்கெட் போட முயற்சிக்கிறது. ஆனால் அம்மணியை ட்ராப் செய்ய கார் வாங்க திட்டம் போட்டு அவரின் இதயத்தை வெல்கிறார் நிகில். அதிலும் மீராவின் இந்தி கிளாசுக்கு வந்து கலாட்டா செய்யும் காட்சி ஆசம். நெகிழ்ச்சி இல்லாமலா? மீராவின்