இடுகைகள்

செயற்கைக்கோள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கத்தின் பங்கபந்து சாட்டிலைட்!

படம்
வங்கதேசத்தின் முதல் சாட்டிலைட் ! வங்கதேசத்தின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளான பங்கபந்து 1, அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள கேப் கார்னிவலிலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது . வங்கதேச தந்தையான ஷேக் முஜிபிர் ரஹ்மானின் நினைவாக பங்கபந்து இச்செயற்கோளுக்கு பெயர் சூட்டியுள்ளனர் . பதினைந்து ஆண்டுகளாக திட்டமிட்டு ஏவப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் இது .   Bangladesh Communication Satellite Company Ltd எனும் வங்கதேச அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனம் இத்திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ளது . இணையம் மற்றும் தகவல்தொடர்புக்கான விஷயங்களைச் செய்ய இச்செயற்கைக்கோள் உதவும் . வங்கதேசம் தற்போது தகவல்தொடர்புக்கு வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி வருகிறது . இதற்கு வாடகையாக ஆண்டுதோறும் 14 மில்லியன் டாலர்களை அளிக்கிறது . தற்போது ஏவியுள்ள பங்கபந்து 1 கைகொடுத்தால் விரைவிலேயே வாடகைக் செலவு குறைந்துவிட வாய்ப்புள்ளது .