இடுகைகள்

நடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வட்டவடிவ பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி எதற்காக?

படம்
  பழமொழிகளை நாம் நிறைய இடங்களில் பயன்படுத்துவோம். நிறைய நம்பிக்கைகளை முன்னோர்கள் கூறினார்கள் என அப்படியே பின்பற்றுவோம். அதை ஏன் என கேள்வி கேட்டால்தானே அதன் பின்னணி தெரியும். அப்படி சில விஷயங்களை தேடிப்பார்த்த அனுபவம் இது.  தினசரி 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடலுக்கு நல்லது இப்படி கூறுவதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. பொதுவாக வாக்கிங் சென்றால் நல்லது என்ற நிலைக்கு நீரிழிவு நோய் வந்தவர்கள் வந்துவிட்டார்கள். எனவே பத்தாயிரம் அடி என்பது கூட இப்போது போதுமா என்று தெரியாத நிலை. ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்த காலம். 1960ஆம் ஆண்டு, மான்போ கெய் என்ற கருவி விற்பனைக்கு வந்தது. இதை பத்தாயிரம் அடி மீட்டர் என்று அழைத்தனர். இக்கருவியை தயாரித்த யமாசா என்ற நிறுவனம் பத்தாயிரம் என்ற எண்ணைக் குறிக்கும் ஜப்பானிய எழுத்தைக் கவனித்தது. அது ஒரு மனிதர் நடப்பது போலவே இருந்ததால்,அதேயே விற்பனைப் பொருளுக்கு பயன்படுத்தியது.  உடல் ஒரே இடத்தில் இருந்தால் அது கெடுதலை உருவாக்கும், எனவே சிறிது நடங்கள், உட்காருங்கள். உடலை பல்வேறு வடிவங்களில் நிலைகளில் மாற்றி உட்கார்ந்து பாருங்கள். இதெல்ல...

உலகம் சுற்றிவர தனியாக கிளம்பும் பெண்கள் - சாகச பயணத்தின் மேல் உருவாகும் புதிய மோகம்

படம்
  இன்று உலகம் தொழில்நுட்பம் சார்ந்து நிறைய மாறியிருக்கிறது. அதேசமயம், ஆண், பெண் என பாலின வேறுபாடுகளும் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார வலிமையில் பெண்கள், ஆண்களுக்கு நிகர் இணையாக ஏன் அவர்களையும் கடந்து சென்றுவிட்டார்கள். வீடு, அலுவலகம் கடந்து புதிய இடங்களுக்குச் செல்ல பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு   பொருளாதார வலிமையும் கைகொடுக்கிறது. லீவு போட்டுவிட்டு அல்லது வேலையை விட்டு விலகிச் செல்ல துணிச்சலான மனமும் இருக்கிறது. அப்புறம் என்ன? உடனே பையை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதானே? பெங்களூருவில் எஃப்5 எஸ்கேப்ஸ் என்ற நிறுவனம், பெண்களுக்கு மட்டுமேயான பயணங்களை திட்டமிட்டு ஏற்பாடு செய்துகொடுக்கிறது. தங்கும் இடம், சாப்பாடு என அவசிய விஷயங்களை, இந்த நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. பெண்கள் முடிவு செய்யவேண்டியது ஒன்றுதான். குழுவாக செல்வதா அல்லது தனியாக செல்வதா என்பதை முடிவு செய்வது மட்டும்தான். இந்த நிறுவனம் 300க்கும் மேலான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது. 30க்கும் அதிகமான முறை, பெண்களின் குழுக்களை   சுற்றுலா அனுப்பி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் பெண்கள் பயணித்துள்ளனர்....

வண்ணத்துப்பூச்சியை எப்படி பார்ப்பது? - இந்திய வண்ணத்துப்பூச்சியியலாளர்கள் நூலிலிருந்து....

படம்
  வண்ணத்துப்பூச்சி நடை!  வீட்டுத்தோட்டம், பூங்காக்கள், சாலையோரங்கள், குளக்கரை ஆகிய இடங்களில் வண்ணத்துப்பூச்சிகளைப் பார்ப்பது, வண்ணத்துப்பூச்சி நடை (Butterfly walk) ஆகும்.  காலையில் சூரியனின் ஒளிக்கதிர் பரவுவதற்கு முன்னர், வண்ணத்துப்பூச்சிகளை தாவர இலைகள், பூக்களில் பார்க்கலாம்.  வெயில் அதிகரிக்கும் நேரத்தில், வண்ணத்துப்பூச்சி உயரமான இடங்களில் உள்ள இலைகள், பூக்களில் இளைப்பாறும். வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க ஆண்டின் இறுதி மாதங்களான அக்டோபர், நவம்பர் மாதங்கள் சரியானவை. இக்காலங்களில் இரைத்தாவரங்களில் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுகின்றன. பிறகு, முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையை உண்டபடியும், வளர்ந்த புழுக்கள் கூட்டுப்புழுவாகவும் மாறியிருப்பதையும் காணலாம்.  ஆண்டின் இறுதிக்குப் பிறகு இரண்டாவது பருவ காலமாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டம் உள்ளது. இக்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகளை அதிகம் காணலாம்.  பூக்கள், அழுகிய பழங்கள், பறவைகளின் எச்சம், கால்நடைகளின் சிறுநீர், சாணம், தாவரங்களின் சாறு, இறந்த  நண்டுகள் போன்றவையும் வண்ணத்துப்பூச்சிகளைக் கவர்கின்...

வினோதரச மஞ்சரி - சிம்பன்சிகள் பற்றிய சுவாரசியங்கள்

படம்
  பறவைகள் தம் அலகை, நாம் கைகளைப் பயன்படுத்துவது போலவே பயன்படுத்துகின்றன. கூடுகளைக்கட்ட, இறக்கைகளை சுத்தம் செய்ய, உணவு தேட என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. மக்காவ் கிளி இனத்தின் அலகு, கொட்டைகளை உடைத்து தின்னும் அளவுக்கு உறுதியானது. மரங்கொத்திகள், தனது அலகினால் மரத்தை கொத்தி துளையிட்டு பூச்சிகளை உண்ணுவதை அறிந்திருப்பீர்கள்.  ஃபிரில் லிசார்ட் (Frill lizard) என்ற பல்லி இனம் உள்ளது. இது, தான் உண்ண  நினைத்துள்ள இரையை அச்சுறுத்த, தன் சவ்வைப் பயன்படுத்துகிறது. தலைக்கு பின்புறம் குடை போல விரியும் மெல்லிய சவ்வு இதற்கு உண்டு.  பிறந்தவுடனே சிம்பன்சி குட்டிகளால் நடக்க முடியாது. ஏறத்தாழ குழந்தைகள் போலத்தான். எனவே, தாய் சிம்பன்சியின் மார்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும். சிம்பன்சிகள் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழுவாக வாழ்கின்றன.  சில மாதங்களில் சிம்பன்சி குட்டிகள் நிற்க முயல்கின்றன. இதற்காக மரத்தைப் பிடித்தபடி நிற்கும். அவை கீழே விழாதபடி அதன் பின்பகுதியை தாய்க்குரங்கு பிடித்துக்கொள்ளும்.  சிம்பன்சிகள் பழம், விதைகள், பூக்கள், தேன் ஆகியவற்றை உண்கின்றன. குச்சிகளையும் கற்களையும்...

கொரோனா கற்றுத் தந்த பாடங்களை மறக்க கூடாது!

படம்
        சின்மய் தும்பே     சின்மய் தும்பே பொருளாதார பேராசிரியர் ஐஐஎம் அகமதாபாத் பெருந்தொற்று காலத்தில் நாம் கற்று்க்கொண்ட விஷயங்களை பின்பற்றுவதுதான் எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடர்களை காக்கும் என்கிறீர்கள் . இந்தியா அப்படி பாடங்களை கற்றுக்கொண்டது என நினைக்கிறீர்களா ? ஆம் , இல்லை என இரண்டுவிதமாகவும் இதற்கு பதில் சொல்லலாம் . நோய்த்தொற்றுக்கு எதிராக முன்னமே நடவடிக்கை எடுப்பது பெருந்தொற்றை கட்டுப்படுத்த உதவும் . 1817 றற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் பெருந்தொற்று ஏற்பட்ட வரலாற்றை இந்தியா அம்னீசியா வந்த து போல மறந்துவிட்டது . இந்த பாதிப்பில் 40 மில்லியன் மக்கள் இறந்துபோனார்கள் . கடந்துபோன பெருந்தொற்றை கவனித்தால் , தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வருவதை எளிதாக கணித்திருக்க முடியும் . சீனாவில் 1911 ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் தொழிலாளர்களை சிறப்பாக கையாண்டது . அக்காலகட்டத்தில் நடந்து சென்ற தொழிலாளர்கள் பனியில் சிக்கி இறந்தனர் . நாம் நேரடியாக அதனை எடுத்துக்காட்டாக கொள்ளமுடியாவிட்டாலும் கூட அப்பாடங்களை மறக்க கூடாது . கொரோனா முதலில் சீன வைரஸ் என...