வட்டவடிவ பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி எதற்காக?

 










பழமொழிகளை நாம் நிறைய இடங்களில் பயன்படுத்துவோம். நிறைய நம்பிக்கைகளை முன்னோர்கள் கூறினார்கள் என அப்படியே பின்பற்றுவோம். அதை ஏன் என கேள்வி கேட்டால்தானே அதன் பின்னணி தெரியும். அப்படி சில விஷயங்களை தேடிப்பார்த்த அனுபவம் இது. 


தினசரி 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடலுக்கு நல்லது


இப்படி கூறுவதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. பொதுவாக வாக்கிங் சென்றால் நல்லது என்ற நிலைக்கு நீரிழிவு நோய் வந்தவர்கள் வந்துவிட்டார்கள். எனவே பத்தாயிரம் அடி என்பது கூட இப்போது போதுமா என்று தெரியாத நிலை. ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்த காலம். 1960ஆம் ஆண்டு, மான்போ கெய் என்ற கருவி விற்பனைக்கு வந்தது. இதை பத்தாயிரம் அடி மீட்டர் என்று அழைத்தனர். இக்கருவியை தயாரித்த யமாசா என்ற நிறுவனம் பத்தாயிரம் என்ற எண்ணைக் குறிக்கும் ஜப்பானிய எழுத்தைக் கவனித்தது. அது ஒரு மனிதர் நடப்பது போலவே இருந்ததால்,அதேயே விற்பனைப் பொருளுக்கு பயன்படுத்தியது. 


உடல் ஒரே இடத்தில் இருந்தால் அது கெடுதலை உருவாக்கும், எனவே சிறிது நடங்கள், உட்காருங்கள். உடலை பல்வேறு வடிவங்களில் நிலைகளில் மாற்றி உட்கார்ந்து பாருங்கள். இதெல்லாமே உடலுக்கு பயிற்சிதான். மற்றபடி பத்தாயிரம் அடிகள் என்ற கணக்கு இன்றைக்கு பெரிதாக பயன்படாது. ஆனால் அன்றைக்கு அது வியாபாரத்திற்கு உதவியது. 



பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி அணைக்கப்படுவது எதற்காக?


இதற்கு பதிலை அறிய நாம் க்ரீசுக்கு செல்லவேண்டும். தொன்மை க்ரீசில் உள்ள ஆர்டெமிஸ் என்ற நிலவு மற்றும் வேட்டைக்கடவுளுக்கான பிரார்த்தனையாகவே வட்டவடிவ கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி பிறகு வாயால் ஊதி அணைக்கப்பட்டது. வட்டவடிவ கேக், நிலவைக் குறிக்கும். அதில் ஏற்றும் மெழுகுவர்த்தி நிலவு வெளிச்சத்தைக் குறிக்கும். வாயால் ஊதி அணைக்கப்படும்போது எழும் புகை, அங்குள்ள கெட்ட ஆவிகளை விரட்டும் என நம்பப்படுகிறது. இதுதான் பிறந்தநாள் கேக்கின் பின்னணி ரகசியம். 


உலகைக் காக்க முயன்ற பிளாஸ்டிக் பேக்குகள் 


எதற்காக ஒரு பொருள் உருவாக்கப்படுகிறதோ, அந்தப் பொருள் அந்த அர்த்தம் இழந்து வேறொன்றாக மாறி பிரச்னை ஏற்படுவதற்கு பிளாஸ்டிக் பேக் முக்கியமான எடுத்துக்காட்டு. 1959ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பொறியாளர் ஸ்டென் குஸ்டாஃப் துலின், மக்கள் திரும்ப பயன்படுத்தும் பேக்குகளை தயாரிக்க நினைத்தார். இதன்மூலம் காடுகள் அழிக்கப்படுவதை பெருமளவு காக்கலாம் என்று நினைத்தார். ஆனால், அவர் உருவாக்கிய பொருள் நினைத்ததை விட வேகமாக பிரபலமானது. 

1979ஆம் ஆண்டு, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பேக்குகளி்ன் சதவீதம் எண்பது சதவீதமாக இருந்தது. 1982ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இயங்கிய சேஃப்வே, குரோகர் என்ற இரு சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள், பொருட்களை பிளாஸ்டிக் பேக்குகளி்ல போட்டு தர தொடங்கின. இதனால் பிளாஸ்டிக் பேக்குகள் அனைத்து இடங்களிலும் பரவத் தொடங்கின. இன்று உலகம் முழுவதும் 500

பில்லியன் பிளாஸ்டிக் பேக்குகள் பயன்பாட்டில் உள்ளன. 


ஆனால் துலின் நினைத்ததற்கு மாறாக, பிளாஸ்டிக் பேக்குகளை மக்கள் தவறான முறையில் பயன்படுத்தியதால் மாசுபாடு ஏற்பட்டு நிலம், நீர் என அனைத்துமே பாதிக்கப்பட்டுவிட்டதுதான் வேதனை. 


எப்போதுமே வைரம்தான்


இரண்டாம் உலகப்போருக்கு முன்னதாக அமெரிக்காவில் வைரமோதிரம் அணிவித்து நடந்த திருமணங்களின் சதவீதம் 10. ஆனால் இன்று 75 சதவீத திருமணங்கள் வைர மோதிரம் இல்லாமல் நடப்பதில்லை. கல்யாணத்திற்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வைரம் எதற்கு என எளிதாக கேட்கலாம். நிச்சயமாக எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த டீபீர்ஸ் கன்சோலிடட் மைன்ஸ் லிட். நிறுவனம் வைரங்களை விற்கிறதே? இதை விளம்பரம் செய்ய வந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த காப்பிரைட்டர் மேரி பிரான்சஸ் கெரெட்டி. அவர் தனது 31 வயதில் உருவாக்கிய விளம்பர வாசகம்தான்,  எ டைமண்ட் இஸ் ஃபாரெவர். 1947இல் உருவாக்கப்பட்ட இந்த வாசகம் இன்று வரையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


அன்றைய காலத்தில்(1930) வைர மோதிரத்தை வாங்குவது ஒருவரின் ஒருமாத சம்பளத்தை காலி செய்யும். இன்று மூன்று மாத சம்பளம் தேவை. அந்தளவு விலைவாசி ஏறியிருக்கிறது. மக்களுக்கு காதலை விலைமதிப்பான அளவில் பிரமாண்டமாக சொல்லியே ஆகணும் என்ற வெறியும் கூடியிருக்கிறது. 


கருணா எபர்ல்

ரீடர்ஸ் டைஜெஸ்ட்


pixabay

கருத்துகள்