அமெரிக்காவின் கல்விக்கொள்கையை மாற்றிய உளவியலாளரின் ஆராய்ச்சி!

 







ஜெரோம் ப்ரூனர்


போலந்து நாட்டு அகதிகளாக வந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறந்தவர் ஜெரோம் ப்ரூனர். பிறக்கும்போது இவருக்கு கண்பார்வை இல்லை. பிறகு அறுவை சிகிச்சை செய்து பார்வை கிடைத்தது. இரண்டு வயதில் பார்வை கிடைத்தவர், பனிரெண்டாவது வயதில் தனது தந்தையை புற்றுநோய்க்கு பலி கொடுத்தார். ஜெரோமின் அம்மா, கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை. ட்யூக் பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்த ஜெரோம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை முடித்தார். 


இரண்டாம் உலகப்போரின்போது ஜெரோம் அமெரிக்க அரசின் உளவுத்துறையில் பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு ஹார்வர்டில் அறிவாற்றல் சார்ந்த ஆய்வு நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். பிறகு, இங்கிலாந்திற்கு சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பித்து வந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பியவர், தொண்ணூறு வயதில் கூட பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். 


முக்கிய படைப்புகள்


1960 the process of education 

1966 studies in cognitive growth


இருபதாம் நூற்றாண்டில் டெவலப்மென்டல் சைக்காலஜி துறை முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இதற்கு குழந்தைகளின் யோசிக்கும் திறன் எப்படி வளர்ந்து முதிர்ச்சி பெறுகிறது என்பதை விளக்கிய உளவியலாளர் ஜீன் பியாஜெட் முக்கியமான காரணமாக இருந்தார். அப்போது லெவ் வைகோட்ஸ்கியின் குழந்தைகளின் சிந்தனைத் திறன் பற்றிய ஆய்வும் ஆய்விதழ்களில் வெளியானது. இதில், குழந்தைகள் பெறும் அறிவு என்பது அவர்கள் சந்திக்கும அனுபவங்கள் வழியாக உருவாகிறது என கூறப்பட்டிருந்தது. அதாவது, குழந்தைகள் பிறருடன் பேசித்தான் தங்களது அறிவை அதிகரித்துக்கொள்கிறார்கள். 


பெறும் அறிவை மூளை தொகுத்து ஆராய்ந்து தனது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதை புரிந்துகொள்கிறது. ஒரு விஷயத்தை நல்லதாக பார்க்கலாம் அல்லது தவறானதாக பார்க்கலாம். இந்த வகையில் ஒருவருக்கு எந்த நம்பிக்கை தேவையாக இருக்கிறதோ அதன்படி சேர்த்து வைத்த தகவல்களைப் பார்க்கலாம். வெறுமனே தகவல்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அதை உண்மை என நம்புவதுதான் அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. 


ஒரு புதிய தகவலை ஒருவருக்கு கூறுவதால், அதை அவர் அறிவதால பெரிய பயன் ஏதுமிருக்காது. அந்த செயல்முறையில் தகவல்களை பெறுபவர் ஈடுபட்டு அதை தெரிந்துகொள்வது முக்கியம். இதை ஆசிரியர் செய்யமுடியும். மாணவர்கள் செயல்முறையில் பங்கேற்கலாம். ப்ரூனர், 1960ஆம் ஆண்டு தி புரோசஸ் ஆஃப் எஜூகேஷன் என்ற நூலை எழுதினார். இந்த நூலில் உள்ள கொள்கைகளை அமெரிக்க கல்வித்துறை கவனித்து கல்விக்கொள்கைகளை மாறுதல் செய்துகொண்டது. இதுவே அவரின் கொள்கைகளின் முக்கியத்துவத்தை விளக்கும். 


கருத்துகள்