நேரம் தவறாமல் சாப்பிடுவது, லக்கி சீட்டில் உட்காருவது என பழக்கத்தை மாற்றிக்கொள்ளாத மனிதர்களின் உளவியல்!
எங்கள் அலுவலகத்தில் ஹசார் என்ற ஓவியர் பணியாற்றி வந்தார். அவருக்கு வேலையில் பெரிதாக ஈடுபாடு ஏதும் கிடையாது. காலையில் பத்து மணிக்கு வருபவர், வந்தவுடனே சோற்றுக்கு யார் என்ன கொண்டு வந்தார்கள் என ஹர ஹர மகாதேவகி குரலில் விசாரிக்கத் தொடங்குவார். தான் எங்கே உட்காருவது, தனக்கு வேண்டும் விஷயங்கள் மீது தீவிர ஆர்வம் உண்டு. அதை யாரும் தடுக்க கூடாது என்று நினைப்பார். தான் வேலைக்கு வரும்போது அலுவலகத்தில் மின்விளக்கு எரிய வேண்டும் என்பதே அவரது சென்டிமெண்ட். ஆனால் அலுவலகமோ நீங்கள் வேலை செய்யும்போது மின் விளக்கை பயன்படுத்துங்கள். சீட்டில் இல்லாதபோது விளக்கை அணைத்து விடுங்கள் என மிரட்டல் விடுத்திருந்தது. அதை நான் கடைபிடித்தபடியே இருந்தேன். ஒருமுறை காலையில் அப்படி வேலை செய்துகொண்டிருந்தபோது,தனது இருக்கைக்கு விளக்கு போடவில்லை என சண்டைக்கு வந்துவிட்டார் ஹஸார். அவருக்கு இருந்த சென்டிமென்ட் பற்றி எனக்கேதும் தெரியவில்லை.
அலுவலக விதியை விளக்கியபோதும், அதை அவர் துளியும் ஏற்கவில்லை. இவர் மட்டுமல்ல இதுபோல நிறைய முட்டாள்தனமான கொள்கைகளை நம்புகிற பைத்தியங்கள் உலகம் முழுக்க உண்டு. உலகம் தட்டையானது, குறிப்பிட்ட நேரத்தில் சோறு தின்பது, முகராசி பார்ப்பது, லக்கி சீட்டுகளை பிடித்து உட்காருவது என பழக்கங்களை விடாமல் பின்பற்றுவார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு சமூக உளவியல் சார்ந்த ஆராய்ச்சியில் மறுமலர்ச்சி உண்டானது. அமெரிக்காவில் கர்ட் லெவின் இதற்காகவே ஆராய்ச்சி மையத்தை தொடங்கினார். ஃபெஸ்டிங்கர் என்ற ஆராய்ச்சியாளர் மக்களின் பிடிவாதமான மூடநம்பிக்கை பழக்க வழக்கங்களை ஆராயத் தொடங்கினார். மேற்கண்ட இருக்கை, மின்விளக்கு ஆகிய பழக்கவழக்கங்களை யாரேனும் மாற்ற முயன்றால் உடனே அவர்களை வசைமாறி பொழிவார்கள். சாடை பேசுவார்கள். செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டுவார்கள். குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும். அதை அவர்களால் விலக்க முடியாது. இதை ஃபெஸ்டிங்கர் காக்னிட்டிவ் டிசோனன்ஸ் என்று குறிப்பிட்டார்.
இணையத்தில் உலகம் டிசம்பர் 21 அழிந்துவிடும் என சிலர் மக்களை பயமுறுத்தியபடி உரையாடி வந்தனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஃபெஸ்டிங்கர் அவர்கள் எப்படி தங்கள் கருத்தை விவாதித்து காப்பாற்றுகிறார்கள் என்பதை அடையாளம் கண்டார். அவர்களது கருத்துகளை கொண்டே ஓக் பார்க் ஆய்வு உருவானது. இந்த ஆய்வில் ஃபெஸ்டிங்கரோடு, ஹென்றி ரிக்கன், ஸ்டான்லி ஆகியோரும் இணைந்தனர். இப்படி மூடநம்பிக்கைகளை பரப்புவர்களை அழைத்து உண்மையை, ஆய்வுப்பூர்வமாக கூறினாலும் அதனால் பெரிய பயனில்லை. உங்கள் வாதங்களை ஏற்கமாட்டார்கள். இறுதியாக உங்களை வசைமாறி பொழிவார்களே தவிர வேறு எந்த பயனும் விளையாது.
லியோன் ஃபெஸ்டிங்கர் ரஷ்யாவை பூர்விகமாக கொண்டவர். நியூயார்க்கின் ப்ரூக்ளினில் வந்து குடியேறிய அகதி குடும்பத்தைச் சேர்ந்தவர். 1939ஆம் ஆண்டு நியூயார்க்கின் சிட்டி கல்லூரில் பட்டம் பெற்றார். பிறகு கர்ட் லெவினின் வழிகாட்டலில் ஐயோவா பல்கலையில் படித்தவர், 1942ஆம் ஆண்டு குழந்தை உளவியலில் முனைவர் படிப்பை முடித்தார். பிறகு ராணுவ சேவைக்கு சென்றார். திரும்பி வந்து லெவினின் ஆராய்ச்சியில் இணைந்தார். மின்னசோட்டா பல்கலையில் பேராசிரியராக வேலை செய்தவர், ஓக் பூங்கா ஆய்வு ஒன்றை செய்தார். 1955ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கும் சென்று சமூக உளவியல் ஆய்வுகளை செய்தார். பார்வைக்கோணம் பற்றிய ஆய்வுகளை செய்தார். பிறகு வரலாறு, அகழாய்வு ஆகியவற்றின் மீது ஆர்வம் ஏற்பட அது பற்றியும் ஆய்வுகளை செய்திருக்கிறார். கல்லீரலில் புற்றுநோய் வந்து அறுபத்தொன்பது வயதில் காலமானார்.
முக்கிய படைப்புகள்
1956 when prophecy fails
1962 a theory of cognitive dissonance
1983 the human legacy
கருத்துகள்
கருத்துரையிடுக