புத்தக கடை உரிமையாளரைக்கொன்ற கொலையாளி - 11 ஆண்டுகள் போராடி பிடித்த காவல்துறை!
உணமையான சமத்துவமான நீதி என்பது உலகில் எங்குமே இல்லை. ஏனெனில் மனிதர்களிடையே சாதி, மதம், இனம், அந்தஸ்து, செல்வாக்கு, சமூக அடுக்கு என்ற வகையில் ஏராளமான பாகுபாடுகள் உள்ளன . அரசியலமைப்பு அடிப்படையில் சாமானியர் ஒருவருக்கு நீதி கிடைக்கும் இடம நீதிமன்றம், ஆனால் அங்குள்ள நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்கள், மனதிலுள்ள முன்முடிவுகளும் கருத்துகளும் கூட தீர்ப்பில் வெளிப்படுகிறது. ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே பார்த்து தேவையான சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டி தண்டனை வழங்குவது சரியானது. பெரும்பாலான நேரங்களில் அரசியல் அழுத்தங்கள், இறந்துபோனவரின் குடும்ப செல்வாக்கு, பணபலம், ஏழையின் நிர்க்கதியான பலவீன நிலை கூட தீர்ப்பை மாற்ற வைக்கிறது. இப்போது இங்கே நீங்கள் வாசிக்கப்போகும் குற்றச்சம்பவம் கூட அத்தகையதுதான்.
ஒரு புத்தக்கடையை வயதான பெண்ணும், அவரது கணவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு. அவர் வழியாக பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள். வயதான பெண்ணுக்கு புத்தகடை மேல் தனிப்பிரியம் உண்டு. இவர் ஒருநாள் கடையில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தார். அதே கடையில்தான் அவரின் கணவரும் மேசைகளை பழுதுபார்த்து கொடுக்கும் வேலையை செய்து வந்தார்.
அவர் கொடுத்த தகவலின்படி காவல்துறை அங்கு வந்து கொலையை பதிவு செய்து விசாரித்தது. டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆனாலும் கூட வழக்கில் பிடிமானம் கிடைக்கவில்லை. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்ஏ மாதிரிகளை வைத்து சந்தேகப்படும் நபரை சோதித்து கைது செய்தனர். நீதி வழங்கப்பட்டுவிட்டது என தோன்றுகிறதா?
சம்பவத்தை அறிவோம் வாருங்கள்.
அமெரிக்காவின் உடா பகுதியில் 64 வயதான ஷெர்ரி பிளாக் என்ற பெண்மணி தான் நடத்தும் புத்தக கடையில் கொல்லப்பட்டார். சம்பவம், 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. பி அண்ட் டபிள்யூ பில்போர்ட்ஸ் அண்ட் புக்ஸ் என்பதுதான் புத்தக கடையின் பெயர். இங்கு அரிய முதல்பதிப்பு இலக்கிய நூல்கள் முதற்கொண்டு பிரபலமான மத நூல்களை விற்று வந்தார் ஷெர்ரி. கடையில் இன்னொரு பகுதியில், அவரது கணவர், மேசைகளை பழுதுபார்க்கும் கடையை வைத்திருந்தார். மேரி,சால்ட்லேக் பகுதியில் வெகுவாக அறியப்பட்ட முகம். அவர் யாரையாவது காயப்படுத்தி எதிரியாக மாற்றியிருந்தாரா என்று கூட யாருக்கும் தெரியாது.
சம்பவம் நடந்த அன்று ஷெர்ரியின் கணவர் மதியம் 1.40க்கு புத்தக கடைக்கு வந்தார்.. மனைவியைத் தேடினால் அங்கு அவரை வரவேற்றது தேங்கி கிடந்த ரத்தம்தான். ஷெர்ரி, கத்தியால் குத்தப்பட்டு அப்படியே கடையின் பின்பக்கம் இழுத்து செல்லப்பட்டு, மூர்க்கமாக கொல்லப்பட்டிருந்தார். கணவர் எர்ல் உடனே காவல்துறைக்கும், தனது மகள் ஹெய்டி மில்லருக்கும் போனில் அழைத்து தகவல் சொன்னார். ஷெர்ரி, எர்ல் பள்ளி காலத்திலிருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
காவல்துறையினருக்கும் நன்றாக வேலை செய்ய ஆசைதான். ஆனால் நன்றி திருநாள் மாதம். அதற்கான பொருட்களை வாங்குவது என அனைவருமே பரபரப்பாக இருந்தனர். இருந்தாலும் முடிந்தளவு வழக்கை விசாரணை செய்தனர். ஷெர்ரியின் கடையில் பொருட்கள் அப்படியே இருந்தன. அவரது உடலில் இருந்த வைர நகை கூட திருடுபோகவில்லை. கொலையாளி கடைக்குள் வலுகட்டாயமாக வந்தார் என்று கூட கூறமுடியவில்லை. சம்பவ இடத்தில் கிடைத்த கொலையாளியின் கைரேகைகளை மாகாண, தேசிய தகவல்தளங்களில் கொடுத்து சோதித்தனர். ஆனால் அதில் உள்ளவர்களுடன் ஒத்துப்போகவில்லை. ஒருநாள் இல்லை இரண்டு நாள் இல்லை மொத்தம் பத்து ஆண்டுகள் காவல்துறை குற்றவாளியை பிடிக்க போராடினர். பகவந்துடா என ஷெர்ரியின் மகள் ஹெய்தி வேண்டியிருப்பார் போல ....2018ஆம் ஆண்டு, ஷெர்ரியின் வழக்கை பென் பென்டர் விசாரித்தார். வாரத்திற்கு பதினைந்து மணி நேரம் ஒதுக்கி உழைத்தார். அவருக்கு ஷெர்ரி மீது பரிதாபமும், அவரது குடும்பத்தினர் மீது மரியாதையும் இருந்தது.
குற்றவாளியை பிடிப்பதில் ஹெய்தி காட்டிய அக்கறை முக்கியமானது. தனது கணவர் மூலம் தாய் ஷெர்ரி பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் டாலர்கள் பரிசு கொடுப்பதாக ஊடகங்களில் அறிவிக்கச் செய்தார். தன்னார்வ அமைப்பொன்றைத் தொடங்கி அதன் மூலம் நிதியளித்து காவல்துறை ஷெர்ரி கொலை வழக்கை விசாரிக்க வைத்தார். இவர்களுடன் டிஎன்ஏ ஜஸ்டிஸ் என்ற அமைப்பும் இணைந்து வேலை செய்தது. 2020ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று, காவல்துறை குற்றவாளியைக் கண்டுபிடித்து லாக்கப்பில் அடைத்தது. உடாவில் வசித்த ஆடம் அன்டானியோ டர்போரோ என்ற இருபத்தொன்பது வயது இளைஞரே குற்றவாளி. அவருடைய அம்மா வீடு, கொலையான ஷெர்ரியின் புத்தக கடை அருகே இருந்தது. பத்தொன்பது வயதில் கொலையை செய்த ஆடம், அங்கே தனது கைரேகை, டிஎன்ஏ தடயங்களை விட்டுவிட்டு வந்துவிட்டார்.
2022ஆம் ஆண்டு ஆடமிற்கு பிணை இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. விசாரணையில் பயன்படுத்தப்பட்ட உத்திகள் சற்று புதியவை. டிஎன்ஏ மாதிரிகளை வைத்து கொலையாளியை அடையாளம் கண்டனர். பாரபோன் நானோ லேப் என்ற நிறுவனம், டிஎன்ஏ மாதிரிகளை ஆராய்ந்தது. அதில் கிடைத்த தகவல்படி ஆடமின் குடும்ப உறுப்பினர்களை அடையாளம் கண்டு குடும்ப விவரங்களை சேகரித்தது. அதை வைத்தே ஆடமை சந்தேகப்பட்டு விசாரித்து குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பத்தாண்டுகள் போராடி பெற்ற தீர்ப்பால் என்ன நன்மை? மகள் ஹெய்தி, அவரது அப்பா எர்ல் ஆகியோரின் மனபாரம் சற்று குறைந்திருக்கும். அவ்வளவேதான்.
கீத் மர்பி
பீப்பிள் இதழ்
பின்டிரெஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக