வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை செம்மை செய்தாலே நோய்களை குணப்படுத்தலாம்! - ஜெனிஃபர் டூட்னா

 











நேர்காணல் ஜெனிஃபர் டூட்னா, பயோகெமிஸ்ட்


எனக்கு நீங்கள் செய்யும் புரோஜெக்ட் மீது ஆர்வமாக உள்ளது. மனிதர்களின் வயிற்றில் மாறுதல் செய்யப்பட்ட பாக்டீரியாக்களை உருவாக்க முயன்று வருகிறீர்கள். நான் இதை முதலில் கேள்விப்பட்டபோது அது மிகவும் சிக்கலான முறை என்று நினைத்தேன்.


மனித உடலில் உள்ள செல்களை விட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகம். முதலில் நுண்ணுயிரிகளை ஆய்வகத்தில் உருவாக்கி வளர்த்து ஆய்வு செய்து வந்தனர். ஆனால் அதன்பிறகுதன் அவை பல்வேறு இடங்களிலும் உருவாகி வளர்வது தெரிய வந்தது. நமது உடலில் உள்ள நுண்ணுயிரிகளை பற்றி மட்டுமே ஆய்வாளர்கள் கவனம் செலுத்தினர். அவற்றின் உலகம் சற்று வித்தியாசமானது. 


செரிமானம், உடல்பருமன், மன அழுத்தம், பதற்றகுறைபாடு என ஏராளமான சிக்கல்களுக்கு நுண்ணுயிரிகளை பயன்படுத்தலாம் என யோசனை கூறப்படுகிறது. நீங்கள் குழந்தைக்கு வந்த ஆஸ்துமாவை எப்படி குணப்படுத்தினீர்கள்?


ஆஸ்துமா என்பது முக்கியமான நோய். நாங்கள் செய்யும் சிகிச்சை, யோசனை என இரண்டு விஷயங்களிலும் மேம்பாடு வேண்டுமென நினைத்தோம். அமெரிக்காவின் யுசி சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த சூ லின்ச், நோயாளியின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரி ஒன்று, ஆஸ்துமாவை ஏற்படுத்தியிருக்கிறது என கண்டுபிடித்தார். அதுதான் அழற்சி ஏற்படுத்தும் மூலக்கூறு என ஆய்வில் உறுதியாகியுள்ளது. 


இந்த மூலக்கூறைத்தான் நீங்கள் அறிவியல் முறையில் செம்மைபடுத்தவேண்டும் என நினைத்தீர்களா?


அதுதான் எனது ஐடியா. கிரிஸ்பிஆர் முறையில் இந்த மூலக்கூறை அழித்துவிட்டால் வயிற்றில் உள்ள பிற நுண்ணுயிரிகள் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். ஆஸ்துமா பிரச்னை தொடராது. 


அமெரிக்க ஆராய்ச்சியாளர், அழற்சி ஏற்படுத்தும் மூலக்கூறை கண்டுபிடித்ததாக கூறினீர்கள். இந்த மூலக்கூறு அனைத்து குழந்தைகளின் உடலிலும் இருக்குமா? இதை எப்படியான பாக்டீரியா உருவாக்குகிறது?


ஆமாம். இந்த மூலக்கூறில் செய்யும் மாற்றம் பிற நுண்ணுயிரிகளை பாதிக்குமா என்று உறுதியாக தெரியவில்லை. 


நுண்ணுயிரிகள் பிரச்னை செய்கிறது என்றால் அதை கண்டுபிடித்த உடனே சரி செய்ய முடியாதா?


அதை கண்டுபிடித்து தடுத்து நிறுத்துவதுதான் முதல் வேலை. ஆனால் அதைசெய்வது எளிதல்ல. நாங்கள் கிரிஸ்பிஆர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். மூலக்கூறு பிற பல்வேறு செயல்பாடுகளுடன் இணைந்துள்ளது. அதை நேரடியாக நிறுத்தினால், அழித்தால் உடனே ஒருவரின் உணவுமுறை, வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 


சந்தையில் ஏராளமான புரோபயோடிக் பொருட்கள் விற்பனையில் உள்ளன. இவை அனைத்துமே வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை பாதுகாக்கிறது என நினைக்கிறீர்களா?


எனக்கும் அதுபற்றிய வேறுபட்ட கருத்துகள் உண்டு. ஆனாலும் அதைப்பற்றி உறுதியாக பேச தகவல்கள் தேவை. இப்போது அவை என்னிடம் இல்லை. 


வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளின் மரபணுக்களை மாற்றினால் ஒருவரின் உணவுப்பழக்கத்தை வேறுவிதமாக மாற்றமுடியுமா?


உண்மைதான். நாங்கள் நீங்கள் கூறும் விஷயத்தை மேலும் ஆராய்ச்சி செய்ய சிறிதுகாலம் ஆகும். நாங்கள் இப்போது இதுபற்றி குழந்தையின் மலக்கழிவை எடுத்து சோதித்து வருகிறோம். இதன் வழியாக ஒருவரை குறிப்பிட்ட உணவு சாப்பிடுங்கள் என வற்புறுத்த முடியாது. ஆனால் உணவை சாப்பிடும்போது குறிப்பிட்ட இயற்கை சூழல் மாற்றம் வரும் என்பதை வேண்டுமானால் கூறலாம். அது சாப்பிடுபவர்களின் குணங்களை மாற்றலாம். 


வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை அதிகரிக்க புரோபயோட்டிக் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?


ஆரோக்கியத்தை ஏற்படுத்த புரோபயோட்டிக் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆய்வைப் பொறுத்தவரை குறிப்பிட்ட விளைவை முன்னமே திட்டமிட்டு அதை சாத்தியமா என்று சோதிக்கும்போது கிரிஸ்பிஆர் எனும் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இதன் வழியாக மரபணுக்களை மாற்றி தேவையான சோதனைகளை செய்து விளைவுகளை எதிர்பார்க்கலாம். 


கிரிஸ்பிஆர் தொழி்ல்நுட்பத்தை ஒருவரின் உடலில் எப்படி பயன்படுத்துவீர்கள். அதற்கு ஏதாவது பானங்களை குடிக்கவேண்டுமா அல்லது மாத்திரைகளை சாப்பிடவேண்டுமா?


நீங்கள் கேட்ட கேள்வி எதிர்காலத்திற்கானது. ஆனால், நாங்கள் இப்போது அந்த எல்லை வரை செல்லவில்லை. உடலுக்குள் கிரிஸ்பிஆர் நேரடியாக செல்லும்போது அதை செல்கள் உடனே ஏற்றுக்கொள்வது சொற்பம்தான். அப்படியல்லாதபோது வைரஸ் மூலம் அதை ஒன்றின் செல்களுக்குள் கொண்டு செல்லவேண்டும். 



ஜெனிஃபர் கான்

வயர்ட் இதழ் 


















கருத்துகள்