ஒருவரை மிரள வைக்கும் பயங்கள் நான்கு!

 







ஒருவரின் பிள்ளை, அவரின் அப்பாவை இரண்டு விதமாக புகழ்பெறச்செய்யலாம். அவரை விட மோசம். அவரே பரவாயில்லைப்பா என இரண்டு விதமாக தனதுசெயல்களை அமைத்துக்கொள்ளலாம். நல்லவிதமாக இயங்கலாம். கெட்டவிதமாகவும் செயல்படலாம். இதெல்லாம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது? அவரின் மரபணுவா, அல்லது அவர் வளர்ந்த சூழ்நிலையா?


இந்த விவாதம் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. பரிணாம உளவியலில் இதைப்பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். இதைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்தான், கனடாவைச் சேர்ந்த உளவியலாளர் ஸ்டீவன் பிங்கர். இவர் மனிதர்களுக்குள் உள்ள நான்கு பயங்களை சுட்டிக்காட்டினார். அதில் முதலாவதாக வருவது பாகுபாடு. ஒருவர் உலகில் குழந்தையாக பிறக்கும்போது அவர் மனது எழுதப்படாத சிலேட் பலகையாக உள்ளது. அனைவரும் ஒன்றானவர்களாக இருக்கிறார்கள். பிறகுதான் அவரின் குடும்பம், பணம், அரசியல் கருத்தியல் என வேறுபாடு தொடங்குகிறது. 


இரண்டாவது, சீரற்ற தன்மை. அனைவரும் ஒன்று போலவே நகலெடுத்த சீனப்பொருட்கள் போல இருப்பதில்லை. பற்றாக்குறை, போதாமை கொண்டவர்களாக உள்ளனர். இப்படி உள்ளவர்கள் தங்களை மாற்றங்களுக்கு தயார்படுத்திக்கொள்வதில்லை. இவர்கள் அதிகாரத்தில் உள்ளபோது சமூக மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வருவதில்லை. இது ஒரு சமூகத்தையே பின்னால் தள்ளுகிறது. 


அடுத்து, மரபணுக்கள். ஒருவரின் குணத்தை மரபணுக்கள்தான் தீர்மானிக்கின்றன.எனவே, இயற்கையிலேயே அமைந்த பிரச்னை என சிலர் தப்பிக்க நினைப்பார்கள். செய்த செயலுக்காக எந்த பொறுப்பையும் ஏற்க மாட்டார்கள். தண்டனையிலிருந்து தப்பிக்க சிலர் மரபணுக்கள் மீது குறை சொல்லுகிறார்கள். அடுத்து, உணர்ச்சிகள், நம்பிக்கைகள் என அனைத்தையும் உயிரியல் அறிவியல் பூர்வமாக அழித்துவிடும் என பீதியடைவது. அதற்கு எதிராக பிரசாரங்களை செய்வது. ஆய்வுகளை தவறாக புரிந்துகொள்வது ஆகியவற்றைக் கூறலாம். 

cartoon stock

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்