புத்திசாலித்தனத்தை அளவிடும் சோதனைகள்!

 







சோறு தின்றுவிட்டு பற்களில் உள்ள துணுக்குகளை நீக்குவதற்கு பற்குச்சி உதவுகிறது. ஆனால் அதே குச்சியை வைத்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கட்டுமானங்களை ஒருவர் உருவாக்கினால் அவரது புத்திசாலித்தனத்தை என்ன சொல்லுவீர்கள்? இ்ந்தியாவில் இதுபோன்ற விஷயங்களுக்கு பெரிய மதிப்பில்லை. மதம், சாதி, இனம் பார்த்து பாராட்டுவது இந்நாட்டின் தனிக்குணம். அயல்நாடுகளில் இதை ஏற்றுக்கொண்டு புதுமைத்திறன் என்கிறார்கள். அதை இனவெறி கடந்தும் பாராட்டுகிறார்கள். இப்படி மேதாவியாக யோசிப்பவரின் புத்திசாலித்திறனை அளக்க ஐக்யூ அளவீடுகள் கூட உண்டு. 1905ஆம் ஆண்டு வரை ஒருவரின் புத்திசாலித்தனத்தை அளவிட அளவீடு என்று ஒன்று உருவாக்கப்படவில்லை. பிரெஞ்சு உளவியலாளரான ஆல்பிரட் பைனட், தியோடர் சைமன் ஆகியோர் இணைந்து பைனட் சைமன் ஸ்கேல் என்ற அளவீட்டை உருவாக்குகிறார்கள். இதில் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அளவிடும் அம்சங்கள் உள்ளன. நினைவுத்திறன், கவனம், பிரச்னையை தீர்க்கும் திறன் ஆகியவை கணக்கிடப்பட்டன. 


இதில் தோராயமான ஐகியூ அளவீடு 100. அதிமேதாவி என்றால் 145. மற்றபடி பிறர், எழுபது முதல் 130க்குள் வருவார்கள். உலகில் மேதாவி என்பவர்களின் அளவு 0.5 சதவீதம்தான். இந்த அளவீடு இன்றும் கூட பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த அளவீட்டில் குறைபாடுகள் உள்ளன என்று உளவியலாளர் ஜே பி கில்ஃபோர்ட் கருத்து கூறினார். இவர் எப்படிப்பட்ட ஆசாமி என்றால் த்ரீ இடியட்ஸ் படத்தில் வருகிற புன்சுக் வாங்குடு என்ற அமீர்கான் பாத்திரம் போல. ஒரு கேள்விக்கு எப்படி ஒரு பதில் இருக்கமுடியும்? அதற்கு பல பதில்கள் இருக்கும். அப்படி யோசிக்கிறவன்தான் புத்திசாலியாக இருப்பான் என கருதினார். தனது கருத்தை நிரூபிக்க அவர் இதற்கென சோதனைகளை உருவாக்கினார். பற்குச்சி, செங்கல், பேப்பர் கிளிப் என மூன்றையும் பரிசோதனை செய்பவர்களுக்கு கொடுத்து அதன் பிற பயன்களை எழுத கூறினார். அடுத்து, நாட்டில் உள்ள மாகண, தேசிய சட்டங்கள் அனைத்தும் திடீரென விலக்கிக் கொள்ளப்படுகின்றன. இப்படியான சூழலில் நாட்டில் என்னென்ன விளைவுகள் உருவாகும் என சோதனையாளர்களை கற்பனையாக யோசித்து எழுத பணித்தார். 

உண்மை, சரளம், நெகிழ்வுத்தன்மை, விரிவான முறை என நான்கு அம்சங்களை வைத்து அறிவுத்திறனை அளவிட்டார். கில்ஃபோர்டின் சோதனை சற்று குழப்பமானது. சிக்கல் மிகுந்தது. எனவே அது மக்களிடையே பிரபலம் அடையவில்லை. ஆனாலும் கூட அவரின் மாற்றுச்சிந்தனை ஆய்வாளர்களுக்கு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்கியது. 


ஜே பி கில்ஃபோர்ட்


அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் பிறந்தார். படிப்பில் வல்லவர். புத்திசாலியாகவே சிறுவயது தொடங்கி கருதப்பட்டவர். கார்னெல் பல்கலையில் உளவியல் படித்து முனைவர் பட்டம் வென்றார். 1928ஆம் ஆண்டு நெப்ராஸ்காவுக்கு திரும்பி வந்தவர், உதவி பேராசிரியராக சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலைக்கு சேர்ந்தார். இரண்டாம் உலகப்போர் காரணமாக கற்பித்தல் பணியில் தடை ஏற்பட்டாலும் முன்னர் பணிபுரிந்த பல்கலையிலேயே 1967ஆம் ஆண்டு வரை பணி ஆற்றினார். நேர்மையும் கருணையும் கூச்சமும் கொண்ட பேராசிரியர் என்பதால் இவருக்கு பழுப்பு பேய் என்று பட்டப்பெயர் உருவாக்கப்பட்டிருந்தது. இதைக்கூட ராணுவத்தில்தான் கூறினர். 25 நூல்கள், 30 ஆய்வுகள், 300 ஆய்வறிக்கைகளை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். 


முக்கிய படைப்புகள் 


1936 psychometric methods

1967 the nature of human intelligence

cartoonstock.com


கருத்துகள்