பசுமைக் கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் மத்தியதர வர்க்கத்தின் சுயநலம்! - குஸ்தாவோ பெட்ரோ, கொலம்பியா அதிபர்

 







குஸ்தாவோ பெட்ரோ, அதிபர், கொலம்பியா



உலகில் இன்று நடைபெறும் பெரும்பாலான மோசமான அரசின் செயல்பாடுகளுக்கு பின்னால் மத்திய வர்க்கத்தினரின் பேராசை உள்ளது. இவர்களால்தான் வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்து பாசிச செயல்பாடுகளை முடுக்கிவிடுகின்றனர். பசுமைக் கொள்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை செய்து வருகிறார்கள். நிறைய அரசியல் கட்சிகள் இந்த கருத்தை வாக்கு வங்கி கருதி கூறமாட்டார்கள். ஆனால் கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ, மத்திய வர்க்கத்தினரின் வாழ்க்கை பற்றிய பயமே பசுமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமல் தடுக்கிறது என வெளிப்படையாக பேசியுள்ளார். 


2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று அதிபரானவர் பெட்ரோ. இவர் முன்னாள் கொரில்லாவாக செயல்பட்டவர். பிரேசில் அரசு, அமேசான் காட்டில் கச்சா எண்ணெய் எடுக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் சூழல் காக்கும் பணியில் அமேசான் காடுகள் முக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றன. அதன் முக்கியத்தை கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார். 


வசதியான சொகுசான உயர்தர வாழ்க்கை வாழும் மக்கள் கொண்ட நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா , சீனா ஆகியவை கார்பன் வெளியீட்டில் முன்னணி வகிக்கின்றன. மத்தியதர வர்க்கம், மேல்தட்டு வர்க்கம் ஆகியோர் பசுமைக் கொள்கைகளால் தம் பணக்கார வசதியான வாழ்க்கை வசதிகள் கெட்டுவிடும் என பயப்படுகிறார்கள். இதன் காரணமாகவே வலதுசாரி கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றன. 


வெப்பமயமாதல் அதிகரித்து வரும் பொழுதில் ஒருவர் தனது செயல்பாடுகளை கார்பன் இல்லாததாக மெல்ல மாற்றாதபோது, பருவமழைக்காடுகளில் ஈரப்பதம் குறைந்து உலரும். வளமிழந்த நிலம் காரணமாக மக்கள் தங்கள் பூர்விகத்தை விட்டு இடம்பெயரும் நிர்பந்த சூழல் உருவாகும். காப் 28 மாநாட்டில், பிரேசில் நாட்டுக்கு எதிராக கொலம்பிய அதிபர் பெட்ரோ பேசியது முக்கியமானது. கொலம்பியாவும் கரிம எரிபொருட்களை பயன்படுத்தினாலும் அதன் உற்பத்தி நிறைவு பெற்றபிறகு பசுமைக் கொள்கைகளை பின்பற்ற முடிவு செய்துள்ளது. 




பேட்ரிக் கிரீன்ஃபீல்ட்

கார்டியன் வீக்லி


கருத்துகள்