இடுகைகள்

பேட்டரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - மைக்ரோசாஃப்ட், பைடு, சாம்சங்

படம்
  பைடு, சீனா ஜேபி மோர்கன் சேஸ் சிஏடிஎல், சீனா லேண்ட் ஓ லேக்ஸ் லைவ் நேஷன் என்டர்டெயின்மென்ட் சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட் இயக்குநர் மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு உலகின் வாசல் மைக்ரோசாஃப்ட்   டெக் உலகில் இருக்கிறதா இல்லையா என பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று அதையெல்லாம் இயக்குநர் சத்யா நாதெள்ளா மாற்றியிருக்கிறார். ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அதை தன் வசப்படுத்தியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதன்மூலம் டெக் உலகில் கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களை விலக்கி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட், சாட் ஜிபிடியை தனது அனைத்து மென்பொருட்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. அதாவது, அதன் இணைய உலாவியான பிங் தொடங்கி ஆபீஸ் வரையில் அனைத்துமே இனி மாறிவிடும். மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்கும். டெக் வல்லுநர்கள் பயன்படுத்தி வந்த கிட்ஹப்பும் கூட மைக்ரோசாஃப்ட் வசம் சென்றுவிட்டது. எனவே, இதிலும் சாட்ஜிபிடியின் ஆதிக்கம் தொடங்கும். இதில் கோடிங் எழுதுவதற்கு பயன்படுத்தும் கோபைலட் என்ற கருவியை செயற்கை நுண்ணறிவு கொண்டு மேம்படுத்தவிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை கோடிங் எழு

இ ஸ்கூட்டர்கள் - சந்தையில் களைகட்டும் பிராண்டுகள்

படம்
  ஆங்கில தனியிசைப் பாடல்களை இதனை நிறையப் பார்த்திருப்பார்கள். இப்போது பார்க்கப்போகும் இ ஸ்கூட்டர்களை இப்போதுதான் தமிழ் நடிகர்கள் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.  உனாகி மாடல் ஒன் இதில் ஹோவர் போர்டு கிடையாது. ஆனால் அசத்தலான வடிவமைப்பு பிரேக் அமைப்பு முறை ஆகியவை அசத்துகிறது. இதனை சூழலைப் பாதிக்கும் வாகனங்களுக்கு பதிலாக வாங்கலாம்.  விலை 89,900 ப்யூர் ஏர் புரோ இதன் முன் சக்கரம் 500 வாட்ஸ் சக்கரம் கொண்டது. பத்து இன்ச் சக்கரங்கள் எளிதாக தடைகளை சமாளித்து கடக்க உதவுகிறது. நகரை ஜாலியாக சுற்றி வர ப்யூர் உதவும்.  விலை 59,900 சீக்வே நைன்பாட் மேக்ஸ் ஜி30 இ 2 நிறைய அப்டேட்டுகளுடன் வந்துள்ள ஸ்கூட்டர் இது. பார்க்கவும் அழகாக இருக்கிறது. எளிமையாக இருக்கிறது.  விலை  79,900 ஜியோமி  மி எசன்ஷியல் பட்ஜெட் விலையில் இ ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்றால் நீங்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். இதில் பிரேக் சிஸ்டம், ஆற்றல், பேட்டரி என இரண்டுமே சிறப்பாக உள்ளது.  விலை 34, 700 ஜியோமி மி புரோ 2 600 வாட்ஸ் பவருடன் இயங்கும் ஸ்கூட்டர். பெரிய அம்சங்கள் கிடையாது. ஆனால் பட்ஜெட்டிற்குள் வாங்க வேண்டும் என்பவர்களுக்கான ஸ்கூட்டர் இது.

விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி!

படம்
  விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்கலத்திற்காக புதிய வகை பேட்டரிகளை கண்டுபிடித்துள்ளது.  நாசா நிறுவனம் விண்வெளிக்கு பல்வேறு விண்கலங்களை தயாரித்து அனுப்பி வருகிறது. இவை செயல்படுவதற்கான ஆற்றல் தேவைக்கு சோலார் பேனல்கள், பேட்டரிகள், அணு பேட்டரிகள் உதவி வருகின்றன.  விண்கலத்தில் உள்ள கேமராக்கள், ரோவர்கள், வழிகாட்டும் வசதிகள் செயல்பட ஆற்றல் தேவை. இதனை சூரிய ஆற்றல் மட்டும் நிறைவு செய்துவிட முடியாது.  ஒளி படாத இருளிலும் ஆராய்ச்சிகள் தடைபடாமல் இருக்க பேட்டரிகள் உதவுகின்றன. கோள்களில் இருளான பகுதிகளில் ஆராய்ச்சி தடைபடாமல் இருக்க கொசுவர்த்தி சுருள் போல மெதுவாக ஆற்றல் செலவிடும்படியான பேட்டரிகள் தேவை. இதற்காக நாசா நிறுவனம், புளோரிடா பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் சார்ந்த இரண்டு குழுக்களுக்கு ஆராய்ச்சி செய்ய நிதியுதவி அளித்து வருகிறது.  செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஆப்பர்சூனிட்டி, ஸ்பிரிட் என இரண்டு ரோவர்களிலும் சோலார்பேனல்கள், பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இவை செவ்வாயில்  நிலவிய தூசிப்புயல் சூழல்களுக்கு தாக்குப்பிடிக்கவில்லை. அடு

பேட்டரிகளின் மறுசுழற்சி!

படம்
மிஸ்டர் ரோனி பேட்டரிகளை எப்படி மறுசுழற்சி செய்கிறார்கள்? லித்தியம் அயன் பேட்டரிகளை தற்போது மறுசுழற்சி செய்யும் முறை சரியானது அல்ல. இதற்கு ஆகும் செலவு அதிகம். எனவே புதிய பேட்டரிகளை செய்வதே சரியானது. பழைய பேட்டரியில் அதாவது கார்களுக்கு பயன்படும் பேட்டரிகளை உடைத்து, மீண்டும் அதில் புதிய முறையில் தயாரிப்பார்கள். காரீய அமிலம் கொண்ட பேட்டரிகளை இம்முறையில் மறுசுழற்சி செய்கிறார்கள். இதேபோல அல்கலைன் பேட்டரிகளில் ஜிங்க். மாங்கனீசு ஆகியவற்றை இம்முறையில் மாற்றம் செய்து தயாரிக்கின்றனர்.  நன்றி - பிபிசி

கலக்கும் சோலார் கார்!- வாங்க முடியுமா? - லைட்இயர் ஒன்!

படம்
உலகம் முழுக்க சோலார் காய்ச்சல் பரவி வருகிறது. ஆனால் பேட்டரி கார்களை, பைக்குகளை நம்பி பயணிப்பது பலருக்கும் அலர்ஜியாக உள்ளது. டக்கென எங்காவது நின்றுவிட்டால் என்ன செய்வது என்று?  டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. வந்தாலும் விலை அதிகம். என்ன செய்வது? நெதர்லாந்தைத் சேர்ந்த லைட் இயர் எனும் நிறுவனம் ஆற்றல் வாய்ந்த சோலார் காரை உருவாக்கி நம்பிக்கை தருகிறது. இதன் ஒன் எனும் வகைக்கார் ரேசில் கலந்து வெற்றி வாகை சூடியுள்ளது. 2013, 15,17 ஆண்டுகளில் இந்த சம்பவத்தை ஒன் கார் நிகழ்த்தியது. சோலார் காருக்கு வானிலை முக்கியம். இந்த ஒன் வகைக்கார் மழை பெய்யும் காலத்தில் 400 கி.மீ, வெயில் காயும் நேரங்களில் 725 கி.மீ தூரம் என பயணிக்கும் என்று கம்பெனி கூறுகிறது. பொதுவாக ஒருநாள் இரவு மட்டும் சார்ஜ் செய்தால், 250 வோல்ட்ஸ் கரண்ட் தேவை. 350 கி.மீ தூரம் ஜரூராக பயணிக்கலாம் என கேரண்டி தருகிறது லைட் இயர். இந்தியா போன்ற நாடுகளில் சார்ஜிங் பாய்ண்ட் தேவையில்லை. காரணம் இங்கு கொளுத்தும் வெயில்தான். கார் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும். எனவே, பாரத் பெட்ரோல் பங்க் சென்று சார்ஜ் போடும் அவஸ்த

இ - ஸ்கூட்டர் புதுசு - ஜி30 சந்தையைக் கலக்குமா?

படம்
Max G30 e-scooter பெரிய வண்டிகளை ஓட்டுவதற்கு இவை சிறந்த மாற்று. ஸ்டைலாக கோட்சூட் போட்டு வண்டி எடுத்தாலும் சரி. சிம்பிளாக லீவிஸ் ஜீன்ஸ், போலோ டிஷர்ட் போட்டு இ ஸ்கூட்டர் ஓட்டலாம். பிரமாதமாக இருக்கும்.  நைன்பாட் எனும் சீனக்கம்பெனியின் தயாரிப்பு. இக்கம்பெனி பல்வேறு இ ஸ்கூட்டர்கள், ஸ்கேட்டர்ஸ் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. ஐரோப்பாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அறிமுகப்படுத்தியது நைன்பாட். செக்வே - நைன்பாட் என்ற பெயரில் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியது.  மணிக்கு இருபத்தைந்து கி.மீ வேகத்தில் செல்லும் இ ஸ்கூட்டர் இது. இதன் பேட்டரி திறன் 551 wh. 10  அங்குல ட்யூப்லெஸ் டயர்களைக் கொண்டது.  இன்னும் விலை நிர்ணயிக்கப்படாத இ ஸ்கூட்டர் இது. விரைவில் விலை விவரங்கள் அறிவிக்கப்படலாம்.  நன்றி: நியூ அட்லஸ்