இடுகைகள்

சசி தரூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 நிறைவுப்பகுதி - ஜெரோதா நிதின் காமத், சசிதரூர், சல்மான் ருஷ்டி, நந்தன் நீல்கேனி

படம்
  சல்மான் ருஷ்டி, எழுத்தாளர் சசிதரூர், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தொழில்நுட்ப ஆலோசகர் நந்தன் நீல்கேனி நிதின் காமத், ஜெரோதா ஓப்பன் மைண்ட்ஸ் 2023 சல்மான் ருஷ்டி 76 எழுத்தாளர் இந்தியாவை மையப்படுத்திய விக்டரி சிட்டி என்ற நாவலை வெளியிட்டார். நியூயார்க்கின் சட்டாகுவா என்ற இடத்தில் நூல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தீவிரவாதி ஒருவனால் கடுமையாக தாக்கப்பட்டார். ஈரான் நாட்டின் அயதுல்லா கோமெய்னி என்ற மத அடிப்படைவாத தலைவரால் தூண்டுதல் பெற்ற ஆள்தான் தாக்குதலுக்கு காரணம். சல்மான் ருஷ்டி. தனது கற்பனைக்கு கொடுத்த பெரிய விலை இத்தகைய தாக்குதல் என கூறலாம். விக்டரி சிட்டி நாவல், விஜயநகர பேரரசரைப் பற்றிய புனைவை மையமாக கொண்டது. இதற்கு முன்னர், மிட்நைட் சில்ரன் என்ற ஒரு நாவலை இந்தியாவின் சுதந்திரத்தை மையமாக வைத்து எழுதினார் ருஷ்டி. மத அடிப்படைவாதிகளை தூண்டிவிடும் அளவுக்கு கற்பனை வளம் கொண்ட எழுத்துக்கு சொந்தக்காரர். மாய அழகு கொண்ட எழுத்துக்களால் பேரரசர்கள் மறைந்துவிட்ட உலகிலும் புகழ்பெற்று பேசப்படுகிறார் ருஷ்டி. எதிர்காலத்திலும் அவரது நாவல்கள் புகழ்பெற்று விளங்கும் என்பதை மறுக்க முடி

2021 இல் இப்படி சொன்னார்கள்! - அரசியல், கிரிக்கெட், தொழில், சமூக வலைத்தளம், மருத்துவம்

படம்
  பிப்ரவரி 1  இப்போது விராட் அணியின் தலைவராக இருக்கிறார். நான் துணைக்கேப்டன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பின்புற இருக்கையில் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறேன். ரகானே இந்திய கிரிக்கெட் வீரர் மார்ச் 8 இருபது இந்திய நிறுவனங்கள் மட்டுமே நூறுகோடிக்கும் மேல் மதிப்பு கொண்டவையாக உள்ளன. இவர்கள் எப்படி பன்னாட்டு நிறுவனங்களை எதிர்கொண்டு போராட முடியும்? அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்? விஜய் சேகர் சர்மா நிறுவனர், இயக்குநர் பேடிஎம் மார்ச் 29 அடையாள அரசியல் இங்கே எப்போதும் உள்ளது. இதில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். மேற்கு வங்கத்தில் தலித்துகள் பங்களிப்பு முக்கியமானது. அவர்களே இம்முறை முக்கியமானவர்கள்.  பிரசாந்த் கிஷோர் அரசியல் நிலைப்பாட்டாளர் ஏப்ரல் 5 மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிக மிக கடினம். இதற்கான கொள்கைகளை வகுத்து கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றாதபோது என்ன செய்வது என திட்டம் வகுப்பது முக்கியம் ரந்தீப் குலேரிலா எய்ம்ஸ் இயக்குநர் ஏப்ரல் 26 அனைத்து கட்சிகளும் தவறு செய்பவர்கள்தான். நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம். தீதியின் மீதுள்ள நம

அரசியல்வாதிகள் எழுதிய நூல்கள்! - காந்தி முதல் சல்மான் குர்ஷித் வரை....

படம்
  சீதாராம் யெச்சூரி தி ஸ்டோரி ஆப் மை எக்ஸ்பரிமென்ட்ஸ் வித் ட்ரூத் 1927 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஓம் புக்ஸ் 295 சத்திய சோதனை என்றாலே எழுதியது யார் என தொடக்கப்பள்ளி மாணவர் கூட சொல்ல முடியும். தென் ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராக பணியாற்றியது முதல் இந்தியாவுக்கு வந்து சுதந்திரப்போராட்டத்தில் இணைவது வரையிலான பயணம்தான் நூலின் பேசுபொருள். தனது வாழ்க்கையை பகிரங்கமாக வெளிப்படையாக பேசிய அரசியல்வாதி, போராளி காந்தி மட்டும்தான். இதனால் இன்றுவரையும் இவரை வலதுசாரி மதவாத கும்பல்கள் என்ன முயன்றும் புறக்கணிக்கவே முடியவில்லை.  மை ட்ரூத் 1980 இந்திரா காந்தி விஷன் புக்ஸ் 195 சிறுவயதிலிருந்து இந்திராகாந்தியின் வாழ்க்கையைப் பேசுகிற நூல் இது. கூடவே அரசியலில் உயர்வு, இறக்கம் என சொந்த வாழ்க்கையைப் பேசுவதோடு இந்தியாவின் வரலாற்றையும் உள்ளடக்கிய முக்கியமான நுல்.  ட்வென்டி ஒன் போயம்ஸ் 2001 வாஜ்பாய் பெங்குவின்  299 எண்பத்து எட்டு பக்கங்களை கொண்ட நூல்தான். வன்முறை, அதிகாரம், பாகுபாடு ஆகியவற்றைப் பற்றி பேசுகிற கவிதைகளைக் கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை பற்றிய பேச்சுகளையும் கொண்டுள்ள நூல் இது.  கபிதா பிதான் 2020 மம்தா பா

புத்தகம் புதுசு! - தேசியவாதம், தேச துரோகம் ஆகிய சொல்லாடல்களின் வரலாறு

படம்
                தி பேட்டில் ஆப் பிலாங்கிங்க்ஸ் சசி தரூர் ஆலெப் ப . 462 ரூ .799 இன்று ஏழை எளிய இந்தியர்களை விட குறிப்பிட்ட இந்தியர்கள் மட்டும் அவர்களை ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் . இவர்கள் இதற்காக தேசியவாதம் , நாட்டுப்பற்று , சமூக விரோதிகள் , தேச துரோகி என பல்வேறு சொல்லாடல்களைப் பயன்படுத்தி வருகின்றரர் . இவற்றின் அர்த்தம் என்ன , இதனை எப்படி எதிர்கால தலைமுறையினர் பயன்படுத்துவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ச சிதரூர் விவரித்துள்ளார் . சைபர் ஸ்ட்ராங் அஜய் சிங் சேஜ் ப . 296 ரூ . 495 வணிகத்திற்கு எப்படி சைபர் பாதுகாப்பு சமாச்சாரங்களை அமைக்கவேண்டும் என்று இந்த புத்தகம் சொல்லித்தருகிறது . இன்று நாட்டிற்கு அதிக ஆபத்து ஏற்படுத்தும்விதமாக இணையத் தாக்குதல்கள் உள்ளன . இவற்றைப் பற்றிய எச்சரிக்கையை நூல் ஏற்படுத்துகிறது . தி காமன்வெல்த் ஆப் கிரிக்கெட் ராமச்சந்திர குஹா ஹார்பர் கோலின்ஸ் ப . 336 ரூ . 1722 குஹா , வரலாற்று ஆய்வாளர் என்று பலருக்கும் தெரியும் . அதேபோல கிரிக்கெட்டை ரசிப்பவரும் கூட . இந்த நூலில் அதனை நிரூபித்திருக

விபத்தால் இந்து - நேருவின் கதை- சசி தரூர்

படம்
நேரு: தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா சசி தரூர் பெங்குயின் புக்ஸ் ரூ.299 (அமேஸானில் 270) கல்வியால் ஆங்கிலேயர் கலாசாரத்தால் முஸ்லீம் விபத்தால் இந்து 1889 ஆம் ஆண்டு நேரு பிறப்பு முதல் 1964 ஆம் ஆண்டுவரை நீளும் நூல் இது. சசி தரூரின் பார்வையில் நீளும் சுயசரிதை, பிற சுய சரிதைநூல்களிலிருந்து எங்கு வேறுபடுகிறது. நேருவின் அரசியல் வாழ்க்கை, அதன் பிரச்னைகளைப் பற்றி பலரும் விவாதித்து உள்ளனர். அதேயளவு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, எங்கேயும் விட்டுக்கொடுக்காத சோசலிச கொள்கை, பொருளாதாரக் கொள்கைகளில் அதன் விளைவு, தனிப்பட்ட அவரது குணம், போஸ், காந்தி, படேல், தாண்டன் ஆகியோரிடம் அவரின் உறவு ஆகியவற்றை வரலாற்று நிகழ்ச்சிகளோடு, விமர்சனங்களையும் கலந்து எழுதியுள்ளார் சசி தரூர். நேரு செய்த அடிப்படைக் கட்டமைப்பு சார்ந்த பணிகளைக் கூறும்போது உடனே எட்வினா மவுன்ட்பேட்டன், பத்மஜா நாயுடு ஆகியோருக்கு அவர் எழுதிய காதல் கடிதங்கள், உறவு ஆகியவற்றை எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் பேசுவார்கள். அதையும் தரூர் விட்டு வைக்காமல் எடுத்து எழுதியிருக்கிறார். அதோடு முக்கியமான பார்வை, நூல் 2003 ஆம் ஆண்டு வெளியா