இடுகைகள்

விவகாரத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலனைப் பள்ளித்தோழியோடு சேர்த்து கல்யாணம் செய்து வைக்கும் காதலி! தி வெட்டிங் அன்பிளானர்

படம்
  தி வெட்டிங் அன்பிளானர் மெரினா, கார்லோஸின் அட்டகாச நடனம் தி வெட்டிங் அன்பிளானர்   மெரினா சிறுவயதாக இருக்கும்போதே அவளது பெற்றோர் விவகாரத்து பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு மெரினாவின் அப்பா, தனது வீட்டுக்கு அருகில் உள்ள பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது காரணமாக அமைகிறது. காதல் என்பது பைத்தியக்காரத்தனம் என அப்பா போகும்போது சொல்லும் வார்த்தை மெரினாவின் மனதில் பதிகிறது. எனவே, அவள் ஆண் தோழன் என யாரையும் ஏற்பதில்லை. திருமணமும் செய்யக்கூடாது என முடிவாக இருக்கிறாள். அவளது வாழ்க்கையில் வரும் கார்லோஸ் என்பவன் ஏற்படுத்தும் பிரச்னைகள், அதன் விளைவுகள்தான் கதை. இரண்டு பெண்கள் ஒரு ஆண் என அடிப்படையில் முக்கோண காதல் கதைதான். படத்தில் சுவாரசியமாக இருப்பது மெரினாவின் குணங்கள் பற்றி மெல்ல பார்வையாளர்களான நமக்குத் தெரிய வருவதுதான். இந்த வகையில் அவர் தனக்கு பிடித்த விஷயங்களை அவ்வளவு எளிதாக பிறருக்கு விட்டுக்கொடுப்பவர் அல்ல. தன்னை அவமானப்படுத்தியவர்களை காலம் கடந்தும் வாய்ப்புகள் அமையும்போது பழிவாங்குகிறார். இதில், அவள் நேசிக்கும் காதலன் கூட உண்டு என்பதுதான் வினோதம். மெரினா, காதலே வாழ்க்கையில் நுழ...

செம குறட்டை சாரே!

படம்
  எஸ்ஏபி தனது நூலில், உதவி ஆசிரியர் புனிதன் ஹோட்டல் அறையில் குறட்டை விட்டு தூங்கியதை தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி கிண்டல் செய்திருப்பதை எழுதியிருக்கிறார். பார்க்க குறட்டைதானே ப்ரோ என தோன்றினாலும், இரவில் எழும் குறட்டை பீதி எழுப்பும். எனது அலுவலகத்தில் கூட பேசிப் பேசியே களைப்பான அலுவலக சகாக்கள் சட்டென குட்டித்தூக்கம் போடும்போது எழும் குறட்டை ஜெனரல் ஏசியை விட அதிக சத்தம் எழுப்புகிறது. நமக்கும் கூட ஆவ்வ....வ்வ.. பாருங்க சொல்லும்போதே கொட்டாவி வந்துவிட்டது. அடுத்து தூக்கம், அதன் பின்னே குறட்டைதான்.  இப்போது குறட்டை தொடர்பான சமாச்சாரங்களைப் பார்ப்போம்.  உலகில் வாழும்  45 சதவீதம் பேருக்கு குறட்டை விடும் பிரச்னை உள்ளது. அதாவது வயது வந்தவர்களுக்குத்தான் சொல்கிறேன். நான்கு நபர்களில் ஒருவருக்கு குறட்டை விடும் பழக்கம். என்பது வாழ்நாள் முழுக்க தொடர்கிறது.  க்யூப் தொழில்நுட்பத்தில் உருவாகும் குர் முதல் ப்ர்... வரையிலான ஒலி கொண்ட குறட்டைகள் நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகள், மதுபானம் அருந்துவது, உடல் பருமன் ஆகியவை காரணமாக உருவாகிறது. ஒலியின் தொனி, லயம், ஸ்ருதிக்கு மூக்...

ஓவர் பேச்சு கணவனைப் பிரிய வித்தியாசமாக யோசிக்கும் மனைவி! ஹே சினாமிகா - பிருந்தா

படம்
  ஹே சினாமிகா இயக்கம் பிருந்தா இசை  கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு  ப்ரீத்தா கதை - திரைக்கதை - பாடல்கள் -வசனம்  மதன் கார்க்கி நவீன கால திருமண உறவு பற்றி பேச முயலும் படம். மனைவிக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கும் கணவரின் ஓயாத பேச்சு பிடிக்கவில்லை. இதனால் அவரை எப்படி கழற்றிவிடுவது என யோசிக்கிறார். இதற்காக உளவியல் வல்லுநர் ஒருவரின் உதவியை நாட அதன் விளைவு என்னாகிறது என்பதே கதை.. மௌனாவை பார்த்ததும் யாழனுக்குப் பிடித்துப்போய் விடுகிறது. காதலைச் சொல்லுகிறார். மௌனாவுக்கும் சம்மதம்தான். மணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெடிகுண்டு வெடிக்கிறது. யாழன் வீட்டில் சமையல், தோட்ட வேலைகளை செய்கிறான். மௌனா கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.  மனைவியின் சம்பளத்தில்தான் யாழன் பொருட்களை வாங்குகிறான். அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் என மௌனா நினைப்பது, பேசுவது. நாம் எப்படி தன்னியல்பாக சுவாசிக்கிறோமோ அதுபோல பேசுபவன் என காட்சிகளாக காட்டுகிறார்கள். அது அந்தளவு ஒட்டவில்லை. யாழன் பேசுவது குறிப்பிட்ட மனிதர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், பேசும் விஷயங்களில் நியாயமான தன்மை...