இடுகைகள்

மாற்றுக்கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
                       துணிச்சலான முயற்சி           ஆ ரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாம். இந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்.   ரோச்சுக்கு அப்போது வயது 35. தன்னுடைய இரு பெண் குழந்தைகளும் படிக்கும் பள்ளி ஆண்டு விழாவுக்குச் செல்கிறார் ரோச். விழாவில் அவருடைய பிள்ளைகளின் வகுப்பாசிரியை பேசுகிறார். குழந்தைகள் அதிக மதிப்பெண்களைக் குவிப்பது எப்படி என்று விளக்கும் அவர் , அதற்கான நேர அட்டவணையையும் ஒப்பிக்கிறார். காலை 6 மணிக்குத் தொடங்கும் அந்த அட்டவணை இரவு 10 மணிக்கு முடிகிறது. ரோச் வீடு திரும்புகிறார்.                               நல்லது. நீங்கள் ரோச்சாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? அது ஒருபுறமிருக்கட்டும். ரோச் என்ன செய்தார் தெரியுமா ? மறுநாள் தன் இரு பிள்ளைகளையும் அழைக்கிறார். கதையை நன்றாகக்   கவனித்துக்கொள்ளுங்கள். அப்போது அவரது மூத்த மகள் எஸ்தர் 5- ம் வகுப்பு மாணவி. இளையவர் ஜூடி 3- ம் வகுப்பு மாணவி. இருவரிடமும் ரோச் என்ன கேட்டார் தெரியுமா ?  " இனியும் நீங்கள் இப்படிபட்ட ஆசிரியைகளிடமும் பள்ளிக்கூடத்திலும் படிக்க வேண்டுமா என்ன ?''                                      அப்புறம