இடுகைகள்

சேவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சேவல்களின் விரைப்பகுதி மாற்று அறுவைசிகிச்சை செய்து வென்றவர்! அர்னால்ட் அடால்ப் பெர்த்ஹோல்ட்

படம்
  அர்னால்ட் அடால்ஃப் பெர்ட்ஹோல்ட்(Arnold Adolph Berthold 1803 -1861) அர்னால்ட், ஜெர்மனியின் சோஸ்ட் நகரில் பிறந்தார். ஆறு குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளை.  காட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் (University of Göttingen) மருத்துவப்படிப்பில் சேர்ந்தார்.  1823ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ ஆய்வைச் சமர்ப்பித்தார்.  1829ஆம் ஆண்டு மனிதர்கள், விலங்குகள் பற்றிய தனது மருத்துவ நூலைப் பதிப்பித்தார். பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சுற்றுலாவாகச் சென்ற அர்னால்ட், 1835ஆம் ஆண்டு காட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். அங்கு, மருத்துவப் பேராசிரியராக பணியாற்றினார். கூடுதலாக, உயிரியல்துறையின்  ஆவணப் பொருட்களுக்கு காப்பாளராக செயல்பட்டார். ஆர்செனிக் விஷத்திற்கு எதிரான விஷமுறிவு மருந்தைக் (hydrated iron oxide) கண்டுபிடித்தார். கிட்டப்பார்வை, முடி,விரல்நகங்கள் வளருவது, கர்ப்பசெயல்முறை பற்றி ஆராய்ச்சி செய்தார். 1849ஆம் ஆண்டு சேவல்களின் விரைப்பகுதிகளை மாற்றிப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்வது பற்றி,  ட்ரான்ஸ்பிளான்டேஷன் டெர் ஹோடன் (Transplantation der Hoden)என்ற அறிக்கையை வெளியிட்டார்

சேவல்களை ஒழிக்கும் ஆராய்ச்சி!

படம்
  சேவல்களை ஒழிக்கும் ஆராய்ச்சி!  கருவிலேயே ஆண் குஞ்சுகளை ஒழிக்கும் அறிவியல் ஆய்வுமுறை அறிமுகமாகி உள்ளது.  கர்ப்பிணிகளை ஸ்கேன் செய்து பெண் குழந்தைகளை எப்படி கருவிலேயே கொன்றார்களோ அதேமுறையில் கோழிகளுக்கு செய்த அறிவியல் ஆராய்ச்சி சர்ச்சையாகியுள்ளது. இம்முறையில் கோழிமுட்டைகளை கோழி குஞ்சு பொரிக்கும் முன்பே அதிலுள்ளது ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து ஆண் குஞ்சுகளை கொல்லத் தொடங்கியுள்ளனர்.  Seleggt  என்ற ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுமுறையில் கோழி கருவுற்ற ஒன்பது நாளில் அது ஆணா, பெண்ணா என கண்டறிந்து விடுகின்றனர்.  பெண் என்றால் அதனை வளரவிடுவதும், ஆண் என்றால் உடைத்து விலங்கு உணவுகளுக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.  ”நாங்கள் இதன்மூலம் ஆண்டுதோறும 600 கோடி ஆண் சேவல்கள் கொடூரமாக கொல்லப்படுவதை தடுக்கிறோம்” என்கிறார் ஸ்லெக்கிட். ஆண் சேவல் குஞ்சு பொறித்து வெளியே வந்து குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு உதவுகிறது என்றால் சரி; ஆனால் கருவிலேயே கொன்றுவிட்டு இரக்கம் என்று கூறினால் ஏற்பீர்களா?  சந்தையில் பெண் கோழிகளுக்கு உள்ள மதிப்பு, ஆண் சேவல்களுக்கு இல்லை. இதன்விளைவாக, அவற்றை எந்திரத்தில் அரைத்து கொ

சேவலை ஆராய்ந்து அதன் மரபணு தொடர்ச்சியை கண்டறிய விரும்புகிறேன்! - பெர்முடா ஆராய்ச்சியாளர் ஈபென்

படம்
          ஈபென் ஜெரிங் உயிரியல் பேராசிரியர் நோவா சவுத்ஈஸ்டரன் பல்கலைக்கழகம் தெற்கு புளோரிடா உலகில் எத்தனையோ விலங்குகள் இருக்க நீங்கள் பரிணாமவளர்ச்சி பற்றி அறிய சேவலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் ? பிராக்டிகலாக பார்த்தால் , அதனை எளிதாக கவனிக்கமுடியும் என்பதால்தான் . அவை என்ன செய்தாலும் உங்கள் கண்முன்னேதான் செய்யும் . தனிப்பட்ட பராமரிப்பு விஷயங்கள் தேவையில்லை . தொலைதூரம் பறந்து சென்றுவிடாது . இணையத்தில் கூட சேவல் , கோழிகள் பற்றிய படங்களை எளிதாக பெற்று ஆய்வு செய்யமுடியும் என நடைமுறை எளிதாக இருந்ததால்தான் நான் சேவலைத் தேர்ந்தெடுத்தேன் . வேறு சிறப்புக்காரணங்களைக் கூறுங்கள் . பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்வகங்களில் பாக்டீரியாக்களை ஆராய்வதைப்போலசெய்வதை கைவிட்டு அமேசான் மழைக்காடுகள் , பப்புவா நியூகினியா என இரண்டு இடங்களிலும் ஆராய்வது சிறப்பான பயன்களைத் தரும் என நினைக்கிறேன் . சேவல்கள் சிக்கலான சூழலில் வாழ்ந்தாலும் ஏராளமான உயிரியல் அம்சங்களை சந்திக்கின்றன . அவை சந்திக்கும் எதிரிகள் , போட்டியாளர்கள் , இயற்கை இடர்களை நாம் ஆய்வகத்தில் உருவாக்க முடியாது . பெர்முடா கிழக்குப