பௌத்த மத வேட்கையால் நேபாளம், இலங்கை, பர்மா சுற்றியலையும் பார்ப்பனரின் இடையறாத அலைச்சல்!
பௌத்த வேட்கை தர்மானந்த கோசம்பி தமிழில் தி.அ.ஶ்ரீனிவாசன் காலச்சுவடு வெளியீடு தன் வரலாற்று நூல். NIVEDAN by Dharmanand Kosambi First published in English as ‘Nivedan’ by PERMANENT BLACK © 2011 Meera Kosambi பௌத்த வேட்கை என்ற நூல், தர்மானந்த கோசம்பி என்ற சரஸ்வத் பார்ப்பனரின் பௌத்த தேடுதலைப் பற்றிப் பேசுகிறது. கோசம்பி, பௌத்தம் கற்க கோவாவில் இருந்து நேபாளம், இலங்கை, மியான்மர் என பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். இறுதியாக இந்தியாவுக்கு திரும்பி தான் கற்ற பௌத்தத்தை கல்லூரியில் போதித்திருக்கிறார். பிறகு, உயிர்வாழும் ஆசை அற்றுப்போய், வார்தா ஆசிரமத்தில் உண்ணா நோன்பிருந்து உடலை உகுத்திருக்கிறார். இந்த நூல் நிவேதன் என்ற பெயரில் மராத்தி மொழியில் வெளியானது. அதை கோசம்பியின் பேத்தி மீரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக ஶ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து உதவியிருக்கிறார். நூலில், பௌத்தம் கற்க எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் என்ற கிளம்பிய மனிதனின் அலைச்சலை எழுத்து வழியாக உணர முடிகிறது. அதை வாசகர்களின் மனதில் பதிவு செய்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீனிவாசன் வெ...