உரிமைகளைக் காக்க, கடமைகளை அரசுக்கு நினைவுபடுத்த தெருக்களில் இறங்குவோம்!
தெருக்களில் இறங்குவோம்! நம் அனைவரிடமும் உள்ள சிடுமூஞ்சி மாமா ஒருவர் இந்தியா எவ்வளவு மோசமானது என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். ஆர்.டி.ஓவிலிருந்து நியாயவிலைக்கடை, நகராட்சி வரை ஒவ்வொரு அரசு அமைப்பும் லஞ்சம் பெறுவது குறித்து நம்மிடம் கூறுகிறார். உடைந்துபோன சாலைகள், சீர்கெட்டுப்போன அரசுப் பள்ளிகள், மோசமான கல்வி என தனது கூற்றுக்கு பலபுறமும் ஆதரவு தேடிக்கொள்கிறார். அவரது தரப்பு சரியாக இருக்கிறபோது, அவரிடம் வாதம் புரிவது மிக கடினமானதாக இருக்கிறது. சில விஷயங்கள் வேலை செய்யாது; நீதி கிடைப்பதில்லை; அதிகாரம் பேசுகிறது; சமநிலை அழிந்துபோனது. அனைத்தும் கேட்க சிரமமாக, கசப்பாக இருந்தாலும் உண்மை அவையாகத்தான் இருக்கிறது. ஒத்துக்கொள்ள மனமில்லை என்றாலும் அதுவே நிஜம். மேலும் மாமா கூறுவார்: இங்கு எதுவும் மாறப்போவதில்லை. நமது சமூகம் சரிசெய்யமுடியாத அளவு பாதிக்கப்பட்டு இந்தியாவே துக்கத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பதாக விளக்குவார். சிடுமூஞ்சி மாமா அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கி மோசமான மனிதர்கள் என முத்திரை குத்தி நாட்டை கீழே தள்ள திட்டத்தோடு யாரோ ஒ...