இடுகைகள்

மைக்கேல் பை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றம் செய்ய கனவு காணுங்கள்! - வலி இல்லைன்னா லைஃப் இல்லை!

படம்
சினிமா விமர்சனம் பெய்ன் அண்ட் கெய்ன் (2013) இயக்கம், தயாரிப்பு - மைக்கேல் பே திரைக்கதை - கிரிஸ்டோபர் மார்க்கஸ், ஸ்டீபன் மெக்ப்ளை ஒளிப்பதிவு -பென் செரிசின் இசை - ஸ்டீவ் ஜப்லான்ஸ்கி  பீட்டே கோலின்ஸ் எழுதிய பெய்ன் அண்ட் கெய்ன் என்ற கட்டுரை நூலைத் தழுவிய படம்.  சன் ஜிம்மில் அதன் உறுப்பினர் எண்ணிக்கையை  300 சதவீதம் உயர்த்துவதாக சூடம் அணைத்து சத்தியம் செய்து வேலையில் சேருகிறார் லூகோ. அங்குள்ள ஜிம் ட்ரெய்னருக்கு பண ஆசை காட்டி தனது க்ரைம் வேலைகளுக்கு அடியாளாக மாற்றுகிறார். லூகோவிற்கு டக்கென பணக்காரனாக வேண்டும். பெண்களுடன் உல்லாசமாக வாழ வேண்டும் என்பதுதான் கனவு. அதற்காக தனது ஜிம்மிற்கு வரும் பணக்காரர் ஒருவரை கடத்துகிறார். அமெச்சூர் தனமாக செய்யும் கடத்தல் பணியில் அவரது சொத்துக்களை ஜிம் ஓனரும் லூகோவும் ஆட்டையப்போடுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு தப்பைச் செய்கிறார்கள். அவரை உயிருடன் விடுகிறார்கள். அதன் விளைவாக லூகோ மற்றும் அவரது இரு நண்பர்களுக்கு நடக்கும் பிரச்னைகள்தான் படம். மார்க் வால்பெர்க் படம் நெடுக்க பின்னியிருக்கிறார். இவருக்கு லொள்ளு மனோகர், யோகிபாபு போல டிவைன் ஜான்ச