இடுகைகள்

குற்றமனநிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றமனநிலையை குறைக்க மின்சாரம் உதவுகிறது!

குற்றங்களை குறைக்கும் மின்சாரம் ! மூளையில் மின் அதிர்ச்சி கொடுத்தால் ஐம்பது சதவிகித குற்றங்களை குறைக்கலாம் என பென்சில்வேனியா பல்கலைக்கழகமும் , நானியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது . transcranial direct-current stimulation (tDCS) எனும் முறையில் செய்யும் இச்சிகிச்சையை 81 ஆரோக்கியமான மனிதர்களிடம் செய்து இதனைக் கண்டுபிடித்துள்ளனர் .  " மூளையில் வன்முறை எண்ணங்களை உருவாக்கும் பகுதியை அடையாளம் கண்டுவருகிற முயற்சி இது " என்கிறார் ஆராய்ச்சியாளர் ராய் ஹாமில்டன் . எலக்ட்ரிக் ஷாக் என்பதிலிருந்து வேறுபட்ட சிகிச்சை முறை என்பதோடு மூளையின் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மின்சாரம் பாய்ச்சப்படும் . இம்முறையில் தோலில் சிறு எரிச்சல் ஏற்படுத்தும் அளவு மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது . இதன் தீவிர வடிவமே deep brain stimulation (DBS). டிபிஎஸ் பார்க்கின்சன் நோயாளிகளுக்கு கடைசி சிகிச்சைமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது . இத்தாலியைச் சேர்ந்த செர்ஜியோ கானவெரா 2014 ஆம் ஆண்டு இதுகுறித்த கட்டுரையில் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபடுபவர்களை  நியூரோஸ