இடுகைகள்

நுட்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சரியான கல்வியை பள்ளிகள் வழங்குகின்றனவா? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  சரியான கல்வி எது? - ஜே கே 1 கல்வி கற்காத மனிதன் யார்? பள்ளி செல்லாதவன், தன்னை முழுக்க அறியாதவன்தான். பள்ளி சென்றாலும் நூல்களை மட்டும் படித்தவன் முட்டாளாக இருக்க வாய்ப்புண்டு. அவன் அரசு, அதிகார வர்க்கம் தரும் தகவல்களை மட்டுமே அறிந்திருப்பான். புரிந்துகொண்டிருப்பான்.  ஒன்றைப் புரிந்துகொள்ளுதல் என்பது சுயமாக கற்றல் என்பதன் வழியாக சாத்தியமாகிறது. இது ஒருவரின் மனதில் நடைபெறும் உளவியல் கற்றல் செயல்முறையைப் பொறுத்தது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்குள் தன்னை உணர்ந்துகொண்டு கற்பதுதான் கல்வி என்று கூறவேண்டும்.  புத்தகங்களைப் படித்து அதிலிருந்து நாம் பெறும் செய்திகள், தகவல்கள் ஆகியவற்றின் தொகுப்பைத்தான் கல்வி என்று சொல்லுகிறோம். இதை யார் வேண்டுமானாலும் பெறமுடியும். புத்தகங்களை வாசிக்கத் தெரிந்தால் போதுமானது. இப்படி பெறும் அறிவு மனிதர்களிடையே கொள்ளும் மோசமான உறவு, சிக்கல்கள், எடுக்கும் முடிவு ஆகியவற்றுக்கும் முக்கியமான காரணமாகிறது. ஏறத்தாழ ஒருவரை குழப்பத்திற்குள் ஆழ்த்தி அவரை மெல்ல அழிக்கிறது.  கல்வி கற்க ஒருவருக்கு உள்ள வாய்ப்பு பள்ளி மட்டுமேதானா? நமது சமூகம் ஒருங்கிணைக்கப்பட்டது. நாம் பிள்ளைகளை