இடுகைகள்

கொமோரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெறுப்பை, குரோதத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சித்திரங்கள்! கொமோரா - லஷ்மி சரவணக்குமார்

படம்
  கொமோரா நாவல் கொமோரா - லஷ்மி சரவணக்குமார் கொமோரா லஷ்மி சரவணக்குமார் கிழக்கு பதிப்பகம்   வாழ்க்கையில் துயரம், அவமானம், துரோகம் ஆகியவற்றை மட்டுமே சந்தித்து வளர்ந்த கதிர் என்ற இளைஞனின் வாழ்க்கைப்பாடே கதையின் முக்கியமான மையம். கம்போடியாவில் நடைபெற்ற கம்யூனிச படுகொலைகளை பின்னணியாக வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்துவரும் கோவிந்தசாமி, உணவகம் ஒன்றை நடத்துகிறார். ஆனால் கம்போடிய உள்நாட்டு புரட்சிப்படை போரில் வெற்றிபெற, வெளிநாட்டு மக்கள் அனைவரும் விசாரணை என்ற பெயரில் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதில் இருந்து தப்பி மீண்டு வரும் அழகர்சாமி என்ற சிறுவன் என்னவானான், அவனது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது கிளைக்கதை. நாவலில் கதை நடைபெறும் இடம், நிகழ்ச்சி எல்லாமே முன் பின்னாக அமைந்துள்ளது. ஆனால் படித்து முடித்தபிறகு அனைத்துமே மனதில் கோவையாக கோத்துக்கொள்ளலாம். நாவலில் வரும் பல்வேறு விஷயங்கள் வாசிப்பவர்களை தீவிரமாக அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கதிர், கிறிஸ்துவ விடுதியில் வல்லுறவு செய்யப்படுவது, பசியால் கோழி திருடி கடுமையாக அடிக்கப்படுவது, அப்பாவால் வல்லுறவு செய்யப்பட