இடுகைகள்

சிவசேனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் சார்ந்த கவனம் கொள்ளும் இளைய தலைமுறை - ஆதித்ய தாக்கரே- மகாராஷ்டிரம்

படம்
தாக்கரே குடும்பத்தில் அடுத்த அரசியல் வாரிசு, ஆதித்ய தாக்கரே. தேர்தலில் வென்றுவிட்டு சுற்றுச்சூழல் அமைச்சராகியிருக்கிறார். குடும்ப அரசியல் என்றாலும் கூட சூழல் குறித்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். அதுவே இவரைப் பற்றி நாம் இங்கே எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 13 முதல் சூழல் சார்ந்த பாடத்தை பள்ளிக்கல்வியில் கொண்டு வர முயற்சிசெய்து வென்றிருக்கிறார். மஜிதி வசுந்தரா என்பது இதன் பெயர். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தபோது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்யவேண்டும் என கோரிக்கை எழுப்பியவர் ஆதித்யா. பின்னர், அப்பா முதல்வர் ஆன பிறகு சூழல் அமைச்சகத்தின் தலைவராக ஆனார். பிறகுதான் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். மின் வாகனங்களை மும்பை சாலைகளில் ஓட்டுவதை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். கவிதை நூல் ஒன்றை பதிப்பித்துள்ளார். தனியாக ஆல்பம் ஒன்றை தயாரித்தவர், அதில் எட்டு பாடல்களையும் தானே எழுதியுள்ளார். சுற்றுலாவை அதிகரிக்கவும் ஏராளமான திட்டங்களை மனதில் வைத்திருக்கிறார். ஹோட்டலை தொடங்க இதற்கு முன்னர் 70 முதல் 100

மக்களுக்காக எந்த துரும்பையும் கிள்ளிப்போடாதவர்கள்தான் எங்களை ஊழல்வாதி என விமர்சிக்கிறார்கள்! - யஷ்வந்த் ஜாதவ், சிவசேனா

படம்
                  யஷ்வந்த் ஜாதவ் சிவசேனா தலைவர் மும்பை முனிசிபாலிட்டி நிலைக்குழு தலைவர் . நீங்கள் மக்களுக்கு பைகளை கொடுத்து ஊழல் செய்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்களே ? நாங்கள் உதவி தேவைப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம் . ம எங்கள் மீது குறைசொல்பவர்கள் பணக்கார ர்களின் பக்கம் நிற்கிறார்கள் . நாங்கள் ஏழைகளின் பக்கம் நிற்கிறோம் . அதுதான் இங்கு வித்தியாசமாக உள்ளது . எனது தொகுதி மட்டுமல்ல தேவையான மக்களுக்கு நாங்கள் உதவிகளை வழங்கியபடியே இருக்கிறோம் . பதினைந்து ஆண்டுகளாக முனிசிபாலிட்டி தலைமைப் பதவியில் இருப்பது சிவசேனா கட்சிதான் ஆனாலும் கூட வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லையே ? நாங்கள் இதற்கான கட்டமைப்பை உருவாக்க முனைந்து வருகிறோம் . நிலத்திற்கு கீழே நீர்த்தொட்டி ஒன்றையும் கட்டி வருகிறோம் . அடுத்து வரும் பருவமழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படாது என நம்புகிறோம் . பலரும் நீங்கள் முடிவை எடுக்கும்போது உறுப்பினர்களுடன் கலந்து பேசவில்லை என்று புகார் கூறியுள்ளனரே ? பெருந்தொற்று காரணமாக வேகமாக செயலாற்ற வேண்டிய சூ்ழ்நிலை . பணத்தை நேரடியாக ந