இடுகைகள்

தலைமைத்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்களை தலைவராக்கும் விதிகளைக் கொண்ட நூல்!

படம்
  21 இர் ரெப்யூடபிள் லாஸ் ஆஃப் லீடர்ஷிப் ஜான் சி மேக்ஸ்வெல் 336 பக்கம் ஹார்ப்பர் கோலின்ஸ்   தலைமைத்துவத்தை ஒருவர் எப்படி வளர்த்துக்கொள்வது என்பதை ஏராளமான அமெரிக்க நாட்டு உதாரணங்களோடு எழுத்தாளர் எழுதி விளக்கியுள்ளார். பிறரது வாழ்க்கை அனுபவங்களோடு, தான் தேவாலயத்தில் பாதிரியாக பொறுப்பேற்று செயல்பட்டபோது செய்த சரி, தவறு, அதனால் நேர்ந்த விளைவுகள் அனைத்தையும் தான் பேசும் தலைமைத்துவ மையப்பொருளுக்கு இணைத்திருக்கிறார். நூலில் இந்தியாவைப் பற்றி மோசமான விவரிப்புதான் உள்ளது. அதைப்பற்றி பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை. காந்தி, இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சுதந்திரம் பெற்றுத்தர எப்படி உழைத்தார், மக்களை தொடர்புகொண்டார் என்பதை சிறப்பாக விளக்கியுள்ளார். ஒரு நிறுவனத்தில் ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறுவது, எதிர்ப்புகளை வெல்வது, பிறருக்கு உதாரணமாக முன்னே நின்று தடைகளை எதிர்கொள்வது, எதிரிகளை வெல்வது, தொலைநோக்காக யோசிப்பது, நெருக்கடியில் வேகமாக சிந்தித்து செயல்படுவது என ஏராளமான விஷயங்களை உதாரணங்களுடன் மெல்ல விவரித்து எழுதியிருக்கிறார். சில இடங்களில் எழுத்தாளர் தான் நடத்தும் பயிற்சி வகுப்பு உதாரணங்கள

தலைமைத்துவ பெண்கள்! - இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களைப் பற்றிய அறிமுகம்!

படம்
            சபா பூனாவாலா ஒப்பனைக்கலைஞர் , சூழலியலாளர் நான் விலங்குகளின் நலனுக்காகவே முதலில் வேலை செய்துவந்தேன் . பிறகுதான் அழகுக்கலை பக்கம் வந்தேன் என்பவரின் சம்பாத்தியத்தில் 80 சதவீதம் விலங்குகளின் நலனுக்கே செல்கிறது . வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை . என்கேஷா , நாலேகு என்ற இரு யானைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் . அழகுக்கலை துறைக்கு தனது 17 வயதில் உள்ளே வந்தவர் சபா . தற்போது நாய்களை பயிற்றுவிப்பதெற்கென தனி அகாடமி தொடங்கி நடத்தி வருகிறார் . ஒருவர் நாய்களை தனது குடும்ப உறுப்பினர் போலவே கருதவேண்டும் என்றுதான் அகாடமி தொடங்கினேன் . அந்த நோக்கம் விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன் என்கிறார் . ராஷ்மி உர்த்வாரேஷி வாகன பொறியியலாளர் தானியங்கி ஆராய்ச்சி அசோசியேஷன் அமைப்பின் முன்னாள் இயக்குநர் . நாரி சக்தி புரஷ்கார் எனும் விருதை கடந்த ஆண்டு பெற்றவர் . தானியங்கி வாகனத்துறையின் பாதுகாப்பு . சூழல் தொடர்பான விவகாரங்கள் , மின் வாகனங்கள் தொடர்பாக முக்கியமான ஆளுமை மேற்சொன்ன அமைப்பின் முதல் பெண் இயக்குநர் ராஷ்மிதான் . பெண்கள் கல்வி தொடர்பாக நூல் ஒன்றை எழுதுகிறார

ஆடை வடிவமைப்பு, மலையேற்றம், சினிமா, தொழில் சாதிக்கும் பெண்கள்! - கிருஷ்ணா பாட்டில், அங்கிதா, ஸ்வேதா, ஹர்சிதா

படம்
                கிருஷ்ணா பாட்டீல் இமாலயத்தில் உள்ள சாடோபந்த மலையில் ஏறிய இளம்வயது பெண் இவர்தான் . மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து இமயமலைக்கு சென்ற முதல் பெண் கிருஷ்ணாதான் . 2007 ஆம் ஆண்டு மலையேற்றம் பற்றி உத்தர்காசியிலுள்ள நேரு இன்ஸ்டிடியூட்டில் படித்தார் . பிறகு அதிலேயே அட்வான்ஸ் கோர்சும் முடித்தார் . பதினெட்டு வயதில் படிப்பின் ஒரு பகுதியாக மலையேற்றத்தைத் தொடங்கிவிட்டார் . மூன்று வயதிலிருந்து மலையேற்றம் செய்யவேண்டும் என்று நினைத்து வந்தவர் கிருஷ்ணா . ஏழு கண்டங்களிலுள்ள ஏழு மலைத்தொடர்களில் ஏறிவிட்டார் . அதற்குப் பிறகு 2010 இல்தான் இமயமலையில் ஏறுவதற்கான முயற்சியைத் தொடங்கினார் . மெக்கின்லி மலை ஏறும்போது தொழில்நுட்பரீதியான தடைகள் தோன்றின . ஒருவகையில் பெண்கள் சாதிப்பதற்கான பல்வேறு தடைகளை கிருஷ்ணா பாட்டீல் தனது சாதனைகள் மூலம் ஓரளவு தகர்த்துவிட்டார் . இயற்கைச்சூழலோடு இணைந்து வாழ்வது பற்றி திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் . ஆறு கண்டங்களிலுள்ள மலையேற்ற பெண்களில் இவரும் சுத்தமான நீர் , காடுகள் பாதுகாப்பு நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . தையல் மற்றும் ஓவியங்களிலும்

விண்வெளி பைலட்டாக விருப்பமா?

மிஸ்டர் ரோனி விண்வெளி பைலட்டாக என்ன தகுதிகள் தேவை? கல்யாணப் பத்திரிக்கையில் போடும்படி ஒரு டிகிரி என படிக்க கூடாது. முடிந்தவரை பொறியியல் சார்ந்து படிக்கலாம். கணினி அறிவியல் கூட படித்து வைக்கலாம். புரோகிராம் செய்ய முடியாவிட்டாலும் உதவும். பயிற்சி ஜெட் விமானத்தில் ஆயிரம் மணி நேரங்களை பயிற்சி எடுக்க செலவழித்திருக்க வேண்டும். பார்வை கண்பார்வை கோழி மீது உட்கார்ந்திருக்கும் ஈயைப் பார்க்கும் அளவு தெளிவாக இருக்கவேண்டும். கண்ணாடி அணிபவர்களுக்கான சோதனை உண்டு. அதில்  தேறினால்தான் விண்வெளி வண்டியை ஓட்ட முடியும். தலைவனாகவும், குழுவில் ஒருவனாகவும் தலைப்பில் சொன்னது போல பல்வேறு திறன்களை நீங்கள் நிரூபிக்கவேண்டு. குறிப்பாக குழுவில் இருக்கும் உளறுவாயன்களையும், சைக்கோ சீனியர்களையும் நீங்கள் ஒருங்கிணைத்துத்தான் ஆக வேண்டும். இதில் தேறாவிட்டாலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.