தலைமைத்துவ பெண்கள்! - இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களைப் பற்றிய அறிமுகம்!

 

 

 Viber tamil sri lanka viber GIF

 

 

 


சபா பூனாவாலா

ஒப்பனைக்கலைஞர், சூழலியலாளர்


நான் விலங்குகளின் நலனுக்காகவே முதலில் வேலை செய்துவந்தேன். பிறகுதான் அழகுக்கலை பக்கம் வந்தேன் என்பவரின் சம்பாத்தியத்தில் 80 சதவீதம் விலங்குகளின் நலனுக்கே செல்கிறது. வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை. என்கேஷா, நாலேகு என்ற இரு யானைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அழகுக்கலை துறைக்கு தனது 17 வயதில் உள்ளே வந்தவர் சபா. தற்போது நாய்களை பயிற்றுவிப்பதெற்கென தனி அகாடமி தொடங்கி நடத்தி வருகிறார். ஒருவர் நாய்களை தனது குடும்ப உறுப்பினர் போலவே கருதவேண்டும் என்றுதான் அகாடமி தொடங்கினேன். அந்த நோக்கம் விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன் என்கிறார்.


ராஷ்மி உர்த்வாரேஷி


வாகன பொறியியலாளர்


தானியங்கி ஆராய்ச்சி அசோசியேஷன் அமைப்பின் முன்னாள் இயக்குநர். நாரி சக்தி புரஷ்கார் எனும் விருதை கடந்த ஆண்டு பெற்றவர். தானியங்கி வாகனத்துறையின் பாதுகாப்பு. சூழல் தொடர்பான விவகாரங்கள், மின் வாகனங்கள் தொடர்பாக முக்கியமான ஆளுமை


மேற்சொன்ன அமைப்பின் முதல் பெண் இயக்குநர் ராஷ்மிதான். பெண்கள் கல்வி தொடர்பாக நூல் ஒன்றை எழுதுகிறார். அதற்காக பியர்சன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.


சிந்துதாய் சப்கல்


சமூக செயல்பாட்டாளர்.


நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற ஆளுமை. பல்வேறு ஏழை குழந்தைகள் கல்வி கற்று மேலே வர உதவியுள்ளார். 2010ஆம் ஆண்டு இவரது வாழ்க்கையைத் தழுவி ஆனந்த் மகாதேவன் சிந்துதாய் சப்கல் என்ற படத்தை உருவாக்கினார். இதனை லண்டன் திரைப்பட விழாவில் திரையிட்டனர். சப்கல் தனது வாழ்க்கையை ஆதரவற்றோர்களுக்காகவே அர்ப்பணித்துள்ளார்.இதுவரை 500க்கும் மேற்பட்ட விருதுகள் சப்கலின் சமூக செயல்பாடுகளை கௌரவித்து வழங்கப்பட்டுள்ளன.


லஷ்மி நாராயணன்


சமூக செயல்பாட்டாளர்


சமூகத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நேரடியாக உதவி செய்வதை விட அவர்களே சுயமாக தங்களுக்கு உதவி செய்துக்கொள்ளும்படியான சூழலை உருவாக்குவதே லஷ்மியின் நோக்கம். அதன்படி அவர் ஸ்வச் எனும் கூட்டுறவு அமைப்பை உருவாக்கி குப்பை பொறுக்கும் ஆட்களை அதில் இணைத்து செயல்பட்டு வருகிறார். இதில் 2 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். குப்பை பொறுக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பட தனது குழுவுடன் செயல்பட்டு வருகிறார் இந்த பெண்மணி.


ராஹி சர்னோபாட்


துப்பாக்கி சுடும் வீரர்


ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தந்த வீரர். 25 மீட்டர் பிஸ்டல் சுடும் வீரர் இவர். தனக்கு பாராட்டுகள், பதக்கங்கள் கிடைப்பதை விட அந்த துப்பாக்கி சுடும் விளையாட்டில் தனக்கு உள்ள ஆசையும் விருப்பமுமே தன்னை இயக்குகிறது என்கிறார். கையிலுள்ள மூட்டு விலகல் பிரச்னையால் ஓய்விலுள்ளவர், விரைவில் போட்டிக்கு திரும்பவிருக்கிறார்.


போட்டிக்கு உடல் வலிமையை விட மன வலிமை அதிகம் தேவை என ராஹி கருதுகிறார்.


வாபிஷ் பாரூச்சா


ரக்பி விளையாட்டு வீரர், பிசியோதெரபி சிகிச்சையாளர்.


மகாராஷ்டிரத்தின் யூ-16 ஹேண்ட்பால் டீம் பெண்கள் ரக்பி குழுவின் கேப்டனாக இருந்து சாதித்தவர். ஆரோக்கியம் சார்ந்த சிக்கல் எழ, இரண்டு ஆண்டுகள் கடுமையாக பயிற்சி செய்து திரும்ப களத்திற்கு திரும்பியுள்ளார். விளையாட்டு, பிசியோதெரபி என இரண்டு வேலைகளையும் செய்துவருகிறார். ரக்பி டீமை ஆசியாவில் முன்னணி அணிகளில் ஒன்றாக மாற்றவே பாடுபட்டு வருகிறார்.



கருத்துகள்