பருவகாலங்களால் நம் உடல்நிலையில் நோய்கள் ஏற்படுகின்றன என்பது உண்மையா? பொய்யா?

 

 

 

 

 

 

 Season, Winter, Spring, Summer, Fall, Autumn, Snowflake

 




1.உடல் வலிக்கும், பருவ காலங்களுக்கும் தொடர்பிருக்கிறது.

ரியல்: வீட்டில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி ஆகியோர் மழை, வெயில், பனி பல்வேறு பருவக்காலங்களிலும் முதுகுவலி, மூட்டுவலி என்று புலம்பிக்கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வலிக்கான ஆதார காரணம் பருவகாலமல்ல. உடலில் ஏற்படும் வலியை அது ஊக்கப்படுத்தலாம். உடலில் வலியை அது உருவாக்குவதில்லை என்பதே ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் அறிக்கை சொல்கிற தகவல். முதுகுவலி, மூட்டுவலி ஏற்படுவதற்கான முதன்மையான காரணத்தைக் கண்டுபிடித்து சரிசெய்தால், அவர்கள் பருவகாலங்களை குறைசொல்ல வேண்டியிருக்காது. அரிதாக குறிப்பிட்ட பருவச்சூழல், மூளையிலுள்ள செரடோனின் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் சென்சிடிவ்வான உடலைக் கொண்டவர்களுக்கு ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவது உண்டு.

2. கிராஷ் டெஸ்ட்டுகளில் பயன்படுத்தப்படும் மாடல்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.

ரியல்: கார்களில் ஏற்படும் விபத்துகளில் மனிதர்களின் இறப்பைக் குறைக்க டம்மி மாடல்கள் உதவுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி கார் தயாரிப்பு நிறுவனங்கள் சோதனைகளைச் செய்கின்றன. இதில் தேர்ச்சி பெறும் கார்கள்தான் சந்தையில் விற்பனைக்கு வரமுடியும்.

1949ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படை சியரா சாம் என்ற டம்மியை முதன்முதலில் தனது விமானத்திற்காக தயாரித்து சோதித்தது. 1970ஆம் ஆண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் டம்மியில் பல மாறுதல்களைச் செய்து, 1976இல் ஹைபிரிட் 3 என்பதை உருவாக்கியது. தற்போது நவீன முறையில் தோர் எனும் டம்மிகள் மனிதர்களைப் போன்ற எடையில் உருவாக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன. இதில் உள்ள சென்சார்கள் மூலம் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகவல்களை சேகரிக்க முடியும். விபத்து சோதனை வீடியோ, பத்திற்கும் மேற்பட்ட கேமராக்களால் படம்பிடிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. இதன்மூலம் கார்களை பாதுகாப்பானதாக உருவாக்க முடியும்.

3. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி தினசரி தேவைகளுக்கான மின்சாரத்தைப் பெற முடியும்.

தூய்மையான ஆற்றல் என்பதற்காக இப்படி கூறுவார்கள். ஆனால் முற்றிலும் சாத்தியமல்ல. பூங்காவில் எரியும் சூரிய மின்விளக்குக்கான பேனல் பெரிதாக இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். காரணம் அத்தனை சூரிய ஆற்றலையும் நம்மால் மின்சக்தியாக மாற்ற முடியாது. பெரும் தொழிற்சாலைக்கான மின்சாரத்திற்கு நீங்கள் சூரியசக்தியை நம்பினால் கால்பந்து மைதானம் அளவுக்கு சோலார் பேனல்களை வாங்கி குவிக்க வேண்டும். 1954இல் பெல் நிறுவனம் சோலார் செல்களைக் கண்டுபிடித்தபோது அதன் திறன் ஆறு சதவீதம். இன்று முப்பது சதவீதம் என்றளவு உயர்ந்துள்ளது. ஆனாலும் இதற்கான முதலீடும், செலவும் அதிகம். மின்விளக்கு, வாட்டர்ஹீட்டர் போன்ற பொருட்களை சூரிய ஆற்றலில் இயங்குமாறு பயன்படுத்தலாம்.

4. சூயிங்கம்மை மெல்லும்போது தவறுதலாக விழுங்கிவிட்டால், ஏழு ஆண்டுகள் வயிற்றில் தங்கியிருக்கும்.

சூயிங்கம் தின்னும் பழக்கத்தை குறைக்க உங்கள் அம்மா இப்படி சொல்லியிருப்பார். நாம் சாப்பிடும் அனைத்து பொருட்களும் சிலமணிநேரங்கள், நாட்கள் கணக்கில்தான் வயிற்றில் இருக்கும். சத்துகள் உறிஞ்சப்பட, கழிவுகள் ஆசனவாய் வழியாக வெளியேற்றப்படும். சூயிங்கமும் அப்படித்தான். இதில் செயற்கை இனிப்பு, நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. சூயிங்கம் செயற்கை முறையில் வேதிப்பொருட்களின் மூலமே தயாரிக்கப்படுகிறது. எனவே உடலுக்குள் சென்றவுடன் அவை பயன்றறவை என்று குடலால் அறியப்பட்டு கழிவாக ஒதுக்கப்பட்டுவிடும். எனவே பயப்படாதீர்கள். சூயிங்கம்மை குறைவாகப் பயன்படுத்துங்கள்.

5. துருப்பிடித்த ஆணிகளை மிதித்தால் டெட்டனஸ் பாதிப்பு ஏற்படும்

டெட்டனஸ் பாதிப்பு வர ஆணிகளால் ஏற்பட்ட காயம் போதும். அது துருப்பிடித்திருப்பது அவசியமில்லை. புண்ணை சரியான முறையில் சிகிச்சை செய்து குணமாக்காதபோது அதில் சி.டெடானி பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. இதன் விளைவாக டெட்டனஸ் தொற்று ஏற்படுகிறது. காய்ச்சல், தசைகள் இழுத்துப்பிடிப்பது, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இதன் அறிகுறிகள். முறையாக ஊசிபோடவில்லையெனில் நோயாளியைக் காப்பாற்றுவது கடினம். இந்நோய்த்தொற்று நரம்புகளை முடக்குகிறது. தையல் ஊசி, தோட்டக்கருவிகள், விலங்குகள் கடிப்பது, கீறல்கள் ஆகியவற்றையும் சரியாக கவனிக்காதபோது டெட்டனஸ் பாதிப்பை ஒருவருக்கு ஏற்படுத்தக் கூடும்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்