இடுகைகள்

ஓவியர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது நட்சத்திரங்களை நமது வானத்திற்கும் இடமாற்றும் கவிதைகள் - யூமா வாசுகி கவிதைகள் - யூமா வாசுகி

படம்
  யூமா வாசுகி யூமா வாசுகி கவிதைகள் தன்னறம் வெளியீடு  விலை 300 யூமா வாசுகியின் கவிதைகள் ஆறு நூல்களிலிருந்து பெறப்பட்டு தொகுத்து தனி நூலாக்கப்பட்டிருக்கிறது. நூலின் அட்டைப்படம் வினோத் பாலுச்சாமியின் ஒளிப்படக்கலை மூலம் கண்ணைக் கவருகிறது. ஆலமரத்தின் கீழ் கவிஞர் யூமா வாசுகி நிற்கிறார்.   வேலைவாய்ப்பின்மை, இயலாமை , பசி, மரணம், நோய் பற்றியெல்லாம் எழுதும்போது கவிதைகளில் தனிக்கூர்மை தெரிகிறது. இதெல்லாம் கவிஞரை கடுமையாக பாதித்திருக்கிறதா என்று தெரியவில்லை. தனது மனதில் உள்ள வருத்தங்களை தமிழ்மொழியில் சாணை பிடித்து எழுதியிருக்கிறார். படிக்க படிக்க மனங்களில் ரத்தம் தெறிக்கிறது. வழிகிறது. இந்த நூல் தொகுப்பில் முக்கியமானது என நினைப்பது குழந்தைகள் பற்றிய கவிதைகள்தான். முயலை வீட்டில் வளர்ப்பதாக பொய் சொல்வது, பெண்களைப் பற்றிய ஆச்சரியத்துடன் இருந்து   மகளைப் பெற்றவுடன் கடவுளாக மாறுவது, குழந்தையை ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றும்போதுகூட பயந்துவிடாதே   என்று ஆறுதல் கூறுவது, ஓவியங்களை தீட்டும் குழந்தைகளை மலர்க்கூட்டம் என வர்ணிப்பது, பேருந்தில் கையில் கிடைக்கும் குழந்தையை ஆசிர்வாதமாக   நி

ஓவியர்கள் எப்படி மிகச்சிறப்பாக வரைகிறார்கள்- உளவியல் ஆய்வு

படம்
மிஸ்டர் ரோனி  சிலர் எப்படி பிறரை விட இயல்பாக நன்றாக வரைகிறார்கள்? காரணம் சூழலை அவர்கள் வேறுமாதிரி பார்ப்பதுதான். அவர்களின் பார்வையில் ஒருவரின் உருவத்தை அவர்கள் வரைவதற்கான விஷயங்களாக பார்க்கிறார்கள். டாவின்சியை விடுங்கள். எங்கள் அலுவலகத்தில் உள்ள ஓவியர் பி, தனக்கு லீவு வேண்டும் என்றால் வாட்ஸ் அப்பில் எனது உருவத்தை வரைந்து லீவு சொல்லி பீதியைக் கிளப்பினார்.  ஜாலியான பென்சில் ஸ்கெட்ச்தான். பிரமாதமாக உருவத்தை மனதில் பதித்து வரைந்திருந்தார். ஆனால் நான் அதே உருவத்தை வரைந்தால் என்னாகும்? பலமணிநேரம் பிடித்தாலும் அதே உருவத்தை என்னால் கொண்டுவரமுடியாது. பல உருவங்களுக்கும் போலியா கை, கால்களைத்தான் என்னால் வரைய முடியும். இதுபற்றி எப்போதும் போல வெளிநாட்டுக்காரர்கள் ஆராய்ச்சி செய்திருப்பார்களே? அதைத்தான் தேடப்போகிறோம்.  ஓவியர்கள்  முதலில் பொருட்களின் அளவை தீர்மானிக்கிறார்கள். கேன்வாசின் சைஸூம் இதில் முக்கியம். பின்னர் தாங்கள் பார்த்த விஷயங்களை எப்படி நினைவு கொள்கிறார்கள் என்பதும் இதில் முக்கியம்.  எதை அவர்கள் தேர்ந்தெடுத்து வரைகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டுதா