இடுகைகள்

யூதர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யூதர் என்ற காரணத்திற்காக வேட்டையாடப்பட்ட உளவியலாளர் செர்ஜ் மாஸ்கோவிசி

  செர்ஜ் மாஸ்கோவிசி ரோமானியாவின் பிரெய்லாவில் யூதக்குடும்பத்தில் பிறந்தார். பிறகு பள்ளியில் சேர்ந்தார். யூதர் என்ற ஒரே காரணத்திற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1941ஆம் ஆண்டு, யூதர்கள் அவர்களின் மதம் காரணமாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். செர்ஜூவும் அவரது தந்தையும் உயிர் பிழைக்க பல்வேறு நகரங்களுக்கு நகர்ந்து சென்றுகொண்டே இருந்தனர்.  இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரெஞ்சு மொழியைக் கற்றார். அப்போது 'டா 'எனும் கலை பத்திரிகையை துணை நிறுவனராக இருந்து தொடங்கி நடத்தினார். பின்னாளில் இந்த பத்திரிக்கை தணிக்கை சட்டம் காரணமாக தடை செய்யப்பட்டது.  ரோமானியாவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு முகாம்கள் வழியாக நகர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு பிரான்சிற்கு சென்றார்.  1949ஆம் ஆண்டு, உளவியலில் பட்டம் வென்றார். முனைவர் படிப்பை, டேனியல் லாகாசே என்பவரின் வழிகாட்டலில் செய்தார். இதற்கான கல்வித்தொகையை அகதி என்ற அடையாளத்தின் கீழ் பெற்றார். 1965ஆம் ஆண்டு, சமூக உளவியலுக்கான ஐரோப்பிய ஆய்வகத்தை உருவாக்கினார். அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் உளவியல் பேராசிரியர

யூதமக்களின் வாழ்க்கையை உலகப்போர் பின்னணியில் அங்கதமாக விவரிக்கும் நாவல்! ஷோஷா - ஐசக் சிங்கர்

படம்
  ஷோஷா ஐசக் பாஷாவிஸ் சிங்கர் தமிழில் கமலக்கண்ணன் போலந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஐசக் பாஷாவிஸ் சிங்கர் இத்திய மொழியில் எழுதிய நாவல். தமிழில் கமலக்கண்ணன் வெகு சிரத்தையெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார்.   போலந்து நாட்டில் உள்ள யூதக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரோன் கிரடிங்கர். இவர்கள் யூத மத ராபி குடும்பம். இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆரோன், இன்னொரு மதம் சார்ந்த பஷிலி – செல்டிக் ஆகியோரின் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறான். பஷிலியின் பெண்தான் ஷோஷா. இவள் புத்திசாலி கிடையாது. ஆனால் ஆரோன் சொல்லும் கதைகளையெல்லாம் பொறுமையாக கேட்பவள். ஆரோனுக்கு மிக நெருக்கமான அவனை கிண்டல் செய்யாத தோழி, அவள் மட்டுமே. ஆரோன் தனது அப்பா படிக்க கூடாது என்று சொல்லும் நூல்களை படித்துத்தான் தனது இலக்கிய வாழ்வை தொடங்குகிறான். அவர்களது குடும்பம் பிழைக்க பல்வேறு இடங்களுக்குச் செல்கிறது. ஆரோனின் தம்பி யூத மத வழக்கப்படி ராபி ஆகிறான். ஆனால் ஆரோன் இலக்கியவாதியாக எழுத்தாளனாகிறான். தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் எழுதிய நூல்களின் ராயல்டிக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கும் நிலை. போலந்திலும் கூட அப்படித்

பனிரெண்டு ஆண்டுகளில் நாட்டையே அதிரடி சட்டங்களால் மாற்றியமைத்த ஆட்சியாளர் ! ஹிட்லர் - பா.ராகவன்

படம்
                ஹிட்லர் பா . ராகவன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பனிரெண்டுகள் ஆண்ட ஆட்சியை , வளர்ச்சியை , அழிவை , மனநிலையை , பழக்க வழக்கங்களை வாசிக்க எளிமையான முறையில் சுவாரசியமாக சொல்லுகிற நூல்தான் இது . மருதன் எழுதிய ஹிட்லர் என்ற நூலும் , பா . ராகவனின் நூலும் வேறுபடுகிற இடம் ஆய்வுத்தன்மைதான் . மருதனின் நூல் ஹிட்லரின் பல்வேறு பரிணாமங்கள் , அவரின் சிந்திக்கும் திறன் , பேச்சு ஆகியவற்றை ஆய்வு நோக்கில் எது சரியாக இருக்க முடியும் என்ற கோணத்தில் பார்க்கிறது . பா . ராகவனின் இந்த நூல் அந்தளவு தொலைவாக செல்லவில்லை . ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளை சந்தர்ப்பவாதி ஒருவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதை ஹிட்லர் நூல் மூலம் காட்டியுள்ளார் . பலரும் இன அழிப்பு , யூதர்களின் துன்பம் என்பதை மட்டும் முக்கியப்படுத்தும்போது பொருளாதார வளர்ச்சி சார்ந்து நாடு என்ன நிலையில் இருந்தது என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார் . இது ஆச்சரியகரமான ஒன்று என கூறலாம் . ஹிட்லரின் செயல்திறனுக்கும் கனவுக்க்கும் உழைக்கும் திறனுக்கும் அவர் வேறு வழியில் சென்றிருந்

ஜெர்மனியில் இன அழிப்பை செய்த ஹிட்லர் பற்றிய ஆய்வு உண்மைகள்! ஹிட்லர் - மருதன்

படம்
                  ஹிட்லர் மருதன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பற்றி பல்வேறு யூகங்கள் இதுவரை எழுந்துள்ளன . அவரின் இளமைப்பருவம் , வளர்ச்சி , அரசியல் கட்சியில் சேர்வது , பின்னர் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் , நாஜி கட்சி தொடங்கப்படுவது , இரண்டாம் உலகப்போரை அவர் தொடங்குவது , முதலில் கிடைக்கும் வெற்றி பின்னர் தலைகீழாகி அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மாறுவது என நூல்கள் எழுதப்பட்டுள்ளன . ஆனால் இதில் உள்ள வேறுபாடு , அவரைப் பற்றி பிறர் எழுதியுள்ள பல்வேறு கருத்துகளையும் ஆசிரியர் கூறியுள்ளார் . இதனால் ஹிட்லர் பற்றி முன்னர் நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களும் உண்மையா , பொய்யா என சந்தேகம் ஏற்படுகிறது . இனவெறியுடன் யூதர்களை அழித்தவர் என்று ஹிட்லர் கூறப்பட்டாலும் , அவரின் இளமைக்காலம் , அரசியல் நுழைவு , வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது , இன அழிப்பைத் தொடங்குவது என பல்வேறு விஷயங்களை பேசுபவர்கள் மெல்ல அவரை ஆதரிக்கத் தொடங்குவது நடைபெறுகிறது . இதற்கு காரணம் , இன்றும் அவர் தொடங்கிய இன ஒழிப்பு என்பது ஏதோ ஒரு வகையில் நடந்து வருகிறது என்பதால்தான் . ஹிட்லர் என்பவர் அனைத்து வ

இஸ்ரேலை மிரட்டும் நிழல் கமாண்டோ தலைவர்! - மொகம்மது டெய்ப்

படம்
                  பாலஸ்தீனியர்களை காக்கும் தலைவன் ! மொகமது டெய்ப் மே மாதத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய நாட்டு உச்சநீதிமன்றம் , கிழக்கு ஜெருசலேமிலுள்ள ஷேக் ஜர்ராவிலுள்ள பாலஸ்தீனிய குடு்ம்பங்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது . இஸ்ரேலிய அரசுக்கு மகிழ்ச்சி என்றாலும் உடனே அதன் எதிரிகளில ஒன்றிடமிருந்து உடனே எச்சரிக்கை வந்தது . ஹமாஸ் அமைப்பின் ராணுவப்பிரிவான இஷ் அட் தின் அல் க்வாசிம் படைத்தலைவர் மொகம்மது டெய்ப்தான் அந்த எச்சரிக்கையை செய்தார் . பொதுவாக பாலஸ்தீனியர்கள் மொகம்மதை வெளியிடங்களில் அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள் , மேலும் இதுபோல வெளிப்படையாக எச்சரிக்கையையும் அவர் செய்த்து . இல்லை . பாலஸ்தீனியர்களை வெளியேற்றினால் இஸ்ரேல் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என மொகம்மது தனது எச்சரிக்கை செய்தியில் கூறியிருந்தார் . . பாலஸ்தீன மக்களே பல்லாண்டுகளாக பார்க்காத நிழல் தலைவர்தான் மொக்ம்மது . அவரின் செய்தி வெளியானவுடன் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் ஷேக் ஜர்ராவில் புரட்சி போராட்டத்தைத் தொடங்கினர் . மே 10 அன்று அங்கு வந்த இஸ்ரேலிய ராணுவம் அல் அக்சா மசூதியை முற்றுகையிட

ஆன்மா இல்லாத அரக்கனை எதிர்கொள்ளும் டைலன் டாக்கின் போராட்டம்! - இது கொலையுதிர் காலம்

படம்
  டைலன் டாக் சென்னை புத்தகத்திருவிழா 2021 நந்தனம் ஒய்எம்சிஏ டைலன் டாக் துப்பறியும் இது கொலையுதிர்க்காலம் ஆக்கம் - செர்ஜியோ போனெல்லி தயாரிப்பு சன்ஷைன் லைப்ரரி டைலன் டாக் இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. இதில் முதல் காட்சியே டெர்மினேட்டர் படம் போல அதிர வைக்கிறது. முரட்டு மனிதர் அலுவலகம் ஒன்றுக்குள் வந்து ஹண்ட் என்பவரைப் பற்றி கேட்டு அவரை  சந்திக்க அனுமதி கேட்கிறார். அப்பாயின்ட்மெண்ட் இல்லாதவர் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது  என வரவேற்பறைப் பெண் சொல்ல, அந்த மர்ம மனிதர் ஹண்ட் என்று சொல்லியபடி உள்ளே செல்கிறார்.  பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்கு முன்னரே ஹண்டை வேட்டையாடத் தொடங்கிவிடுகிறார் அவர். இதில் அலுவலகமே ரத்தக்களறியாகிறது. யார் இந்த மனிதர், அவருக்கும் ஹண்ட் என்பவருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கதையின் அமானுஷ்ய புள்ளி.  டைலன் டாக் டைலன் டாக்கைப் பொறுத்தவரை கதையில் சண்டைகளை விட நுணுக்கமான மூளை விளையாட்டும், விதியின் காய்நகர்த்தல்களும் , உணர்ச்சிகரமான காட்சிகளும் நிறைந்திருக்கும். இந்த நூலிலும் புராணகால சம்பவம் ஒன்று ஜெர்மனியிலிருந்து தொடங்கி இங்கிலாந்தில் வாழும் டைலன் டாக

ஓரினச்சேர்க்கை அரசியல்வாதி! - துயரமான படுகொலை!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஹார்வி மில்க் அமெரிக்காவின் வுட்மேர் நகரில் யூதப் பெற்றோருக்கு மகனாகப்பிறந்தார் ஹார்வி. அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவிக்கப்பட்டு அரசியலில் வென்றவர் இவர். கலிஃபோர்னியா மாநிலத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். அன்று இவர்தான் ஒரே ஒரு ஓரினச்சேர்க்கை அரசியல்வாதி. சிறுவயதில் காதுகள், கால்கள் பெரிதாக இருந்த தால் வகுப்பறையில் கடுமையாக கேலி செய்யப்பட்டார். வகுப்பில் கோமாளி என்றால் ஹார்வியைக் கூறுகிறார்கள் என்று பொருள். அப்போதே தன் உடலில் பாலின மாற்றங்களை உணர்ந்தார் ஹார்வி. அன்று என்னால் பெற்றோரிடம் அதைப்பற்றி கூற முடியவில்லை. காரணம் எனக்கு பயமாக இருந்தது என்று பின்னால் கூறினார். கேலிகளைச் சமாளித்து கணித பட்டதாரியானார். அப்போது கொரியப்போர் வர, அமெரிக்க கப்பற்படையில் பணியாற்றினார். இப்பணி முடித்து வெளியே வரும்போது ஆண் நண்பர் இவருக்கு கிடைத்தார். அவருடன் வசிக்கத் தொடங்கினார். அப்போது நியூயார்க்கில் அவருக்கு வேலை கிடைத்தது. பின்னர் மெல்ல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவை அரசியலில் அவர் முகம் மக்களுக்கு தெரிய உதவின. இதன்விளைவாக தேர்