இடுகைகள்

நேரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நட்பை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்!

படம்
  நட்பு நட்பை வளர்த்துக்கொள்ள மேற்குலகில் எப்போதும் போல ஏராளமான நூல்கள் உள்ளன. உண்மையில் மனிதர்கள் தனியாக இருக்கும்போது பல விஷயங்களையும் தானே கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. சுய உதவி, முன்னேற்ற நூல்களின் சாதனை விற்பனை அதைத்தான் விவரிக்கிறது. நட்பை துணையா கொள்ள என்ன செய்யலாம்… அதிர்ஷ்டம் உதவாது நட்பை உருவாக்குவதில் எதிர்பாராத விஷயங்கள், அதிர்ஷ்டம் என்பது உதவும் என ஒரு காலத்தில் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அது உண்மையல்ல. நட்பு என்பது உருவாக்கப்படவேண்டியது. அது தானாக உருவாகாது என எழுத்தாளர் சாஸ்தா நெல்சன் கூறுகிறார். இவர் ஹவ் டு டீப்பன் ஃபிரண்ட்ஷிப் ஃபார் லைஃப்லாங் ஹெல்த் அண்ட் ஹேப்பினஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். நம்பிக்கை அதுதான் எல்லாம் நம்பிக்கையோடு ஒருவரை சந்திப்பது, அவருக்கு சிறு பரிசுகளை அளிப்பது நட்பை புத்துயிர்ப்பு செய்யும் என பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது. பரிசு என்பதன் கூடவே பாராட்டையும் கூட சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இன்றைக்கு ஒருவரைப் பாராட்டுவதை கூட குழுவாதம் அடிப்படையில் தனக்குப் பிடித்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்த

தனிப்பட்ட நேரத்தை பறிகொடுத்தேன்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  எங்கள் நாளிதழ் அச்சு பதிப்பு வெளியாகத் தொடங்கிவிட்டது. கட்டுரைகள் முன்னமே எழுதிவிட்டேன். சிலவற்றை மட்டுமே புதிதாக எழுத வேண்டும். நேற்று பக்கத்து அறைக்காரரான சீனிவாசனுக்கு ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க முயன்றேன். ஆனால் இறுதி நேரத்தில் பிழைச்செய்தி வந்துவிட்டது. இரவு நேரத்தில் செய்த இந்த வெட்டி வேலையால் எனது எழுத்து வேலை தடைபட்டது. வேறு வழியில்லை. நீங்கள் இன்டர்நெட் கஃபேக்கு சென்று செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்.  நேற்று ஒருமணிநேரத்திற்கு மேல் இதற்காகவே செலவானது. இந்த நேரத்தில் சீனிவாசனுக்கு பிடிக்காத ரங்கன் என்பவரும் அவருடைய போனுக்கு பிரச்னை என வந்து பக்கத்தில் நின்றுவிட்டார். கடுப்பேற்றுவதுதான் நோக்கம். வேறென்ன?  சுப்ரதோ பக்ஷி எழுதிய நூலை மெல்ல வாசித்து வருகிறேன். நூலை எளிமையாக படிக்கும் வகையில் எழுதியுள்ளது ஆறுதலாக உள்ளது. மாலை முதல் வயிற்றுவலி தொடங்கிவிட்டது. மதியத்தில் சீனிவாசன் கொடுத்த உளுந்து வடை ஒன்றை தின்றுவிட்டேன். இரவில் எதையும் சாப்பிடமுடியவில்லை.  அமேசான் நிறுவனம் நடத்தி வந்த வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் விரைவில் மூட

உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல்வழிச்செய்திகள்!

படம்
  உணர்வுகளைச் சொல்லும் குரல்வழிச்செய்தி!   இன்று பெரும்பாலும் குறுஞ்செய்திகளை எழுதி அனுப்புவதை விடகுரல் வழியே செய்தி அனுப்புவதே புகழ்பெற்றுள்ளது. பொதுமுடக்கம் பலரையும் வெளியிடங்களில்  சந்திப்பதைத் தடுத்திருக்கிறது. இதன் காரணமாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்களில் கூட குரல்வழிச் செய்திகள் அதிகம் அனுப்பப்படுகின்றன.  2013ஆம் ஆண்டு  இந்த வசதி வா்ட்ஸ்அப்பில் நடைமுறைக்கு வந்தாலும், புகழ்பெற்றது பொதுமுடக்க காலகட்டத்தில்தான்.  இன்று போனில் வரும் அழைப்பே, மிகவும் அவசரம் என்றால் மட்டும்தான் என்பதாக மாறியிருக்கிறது. புதிய தலைமுறையினர் பெரும்பாலும் குரல்வழிச் செய்தியை உரையாட அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் அப்படி என்ன சிறப்பு?  ஒருவர் தன்னுடைய குரலில் தான் நினைப்பதை நண்பரிடம் பகிர்ந்துகொள்ளலாம். ஒருவர் வேண்டும்போது இந்த செய்தியைக் கேட்டுக்கொள்ளலாம். உடனடியாக பதில் சொல்ல வேண்டியதில்லை. மேலும், ஒருவர் தனது குரல் வழியாக பிறரிடம் பேசும்போது நேரடியாக பேசுவது போன்ற நெருக்கம் உருவாகிறது.  எதையும் படிக்க அவசியமில்லாமல் காதில் கேட்டுக்கொண்டு செய்தியை அறிந்துகொள்ளலாம். பதில் அளிக்க விரும்பினால் கூட அந்த நேரத்

பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம்?

படம்
              பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் ? மனிதர்களை பழக்கங்களால் உருவானவர்கள் என்று கூறலாம் . இங்கு நடந்துள்ள பல்வேறு மாற்றங்கள் மனிதர்களின் தொடர்ச்சியான பழக்கங்களால் உருவானதுதான் . விமானத்தில் உள்ளது போல ஆட்டோபைலட் முறையில் தினசரி செய்யும் பழக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது . பரிணாம வளர்ச்சியுப் இப்படிப்பட்டதே . இதன்மூலம் ஒன்றை நாம் புதிதாக தொடங்குவது பற்றி யோசிக்காமல் முக்கியமான செயல்களின் மீது எளிதாக கவனம் செலுத்தலாம் . முடிவுகளை முன்னரே யோசித்தல் பாலூட்டி உயிரினமாக மனிதர்கள் உயிருடன் இருக்க முக்கியமான காரணம் , இறந்த காலத்திலிருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வதுதான் . இதனால்தான் நெருப்பைக் கண்டால் சுடும் என விலகுவதும் , பாம்பைக் கண்டால் நடுங்குவதும் ஏற்படுகிறது . இந்த உணர்வுகள் பல நூற்றாண்டுகளாக நமது மரபணுவில் பதிந்து கடத்தப்பட்டுள்ளது . ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அதன் விளைவுகளை யோசிப்பதும் இப்படி உருவாகி வந்ததுதான் . சில சமயங்களில் இது தப்பானாலும் பெரும்பாலான நேரம் முடிவு எடுத்த வழியில்தான் செயல்

டிவி, ரேடியோவுக்கு முன்னதாக நேரம் எப்படி அறிந்தோம்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி டிவி, ரேடியோ கண்டுபிடிக்கப்படும் முன்னர் நேரம் எப்படி அறிந்தோம்? சூரியனின் நிழலை வைத்து நேரம் அறிந்தோம். நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று கூறாதீர்கள். இது தோராயமான கணக்கு. துல்லியமான நேரம் ரயில்களுக்கு தேவை. எனவே, தந்தி கண்டறியப்பட்டவுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப சிக்னல்கள் அனுப்பப்பட்டன. 1830 ஆம் ஆண்டு மின் தந்தி வந்தபின் நேரம் குறித்து ரயில் நிலையங்களுக்கு தகவல் அனுப்புவது எளிதானது. பின் பல்வேறு நிலப்பரப்பு சார்ந்த இடங்களுக்கு சூரியன் வருவதையொட்டி ரயில்வே நேர அட்டவணை உருவானது. பல மாநிலங்கள் இங்கிலாந்தில் கூட நேர அட்டவணையை மாற்றிக்கொள்ள மறுத்தனர். 1880 ஆம் ஆண்டு பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு நேர அட்டவணையை மக்கள் ஏற்றனர். நாடு முழுக்க ஒரே நேரம் அமலானாது. நன்றி: பிபிசி

கணினியில் நேரம் மாறாது இருப்பது எப்படி?

படம்
கணினியை ஆஃப் செய்து வைத்தாலும் கூட எப்படி சரியான நேரத்தைக் காட்டுகிறது? நெட்வொர்க் டைம் புரோட்டோகால் என்ற வசதிப்படி கணினி செயல்படுவதால் நேரமானது கச்சிதமாக மாறாமல் இருக்கிறது. இந்த புரோட்டோகால் யுடிசி எனும் கோஆர்டினேட் யுனிவர்சல் டைம் என்ற வசதியுடன் இணைந்து செயல்படுகிறது. 1985 ஆம் ஆண்டிலிருந்து நெட்வொர்க் டைம் புரோட்டோகால் அமைப்பு செயல்பட்டு வருகிறது. நன்றி: பிபிசி(செய்தி, படம்)