சர்வாதிகார அரசுக்கு எதிரான போராட்டம்!
மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள், வன்முறையை கையாளக்கூடியதாக கருதுகின்றன. போராட்டத்தில் அதுவும் ஒருவகை பாணி. மற்றபடி யாராவது தனிநபர்களை படுகொலை செய்வதோ, காவல்துறையை தாக்கி வீழ்த்துவதை அவர்கள் ஊக்குவிப்பதில்லை. பெருநிறுவனங்களை தாக்குவது கூட முதலாளித்துவத்தை எதிர்க்கும் கருத்தை வெளிப்படுத்த மட்டுமே. அதிலுள்ள ஊழியர்களை, தாக்குவதோ கொல்வதோ நோக்கமல்ல. மேலாதிக்கம் கொண்ட அரசுகள், தங்களை விமர்சிக்கும் தனிநபர்கள் அல்லது பத்திரிகை நிறுவனங்களை தாக்குவது, நெருப்பிட்டு எரிப்பது, இணைய இணைப்பை தடுப்பது என பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலை விடுக்கின்றன. ஆந்திரத்தில் ஆட்சிக்கு வந்த முன்னாள் நடிகர் தொடங்கிய கட்சி, தனது கட்சியை விமர்சித்த ஆங்கிலப் பத்திரிகையை குண்டர்கள் விட்டு தாக்கியது. அச்சு எந்திரங்களை அடித்து உடைத்தது. மேலதிகமாக, அங்குள்ள பெண் பணியாளர்களை மானபங்கம் செய்ய முயன்றது. இதுபோன்ற ஆட்களிடம் நீங்கள் அகிம்சை போராட்டம் சாத்தியம் என நினைக்கிறீர்களா என்ன? இதனால்தான் ரௌடிகளுக்கு புரியும் மொழியில் நாங்கள் பேசுவோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். இதில் வெளிப்படும் செய்தி பற்றி சொல்பவருக்...