இடுகைகள்

இனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பினத்தவருக்கு குடியிருக்க வீடுகளைப் பெற்றுத்தர உதவும் போராட்டக்காரர்!

படம்
  லிசா ரைஸ்  lisa rice வீடுகளை வாங்குவதில், வாடகைக்கு பிடிப்பதில் சாதி, மத, இன வெறி இயல்பாக வெளிப்பட்டுவருகிறது. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிறுபான்மையினருக்கு சாதி, மத இழிவு நடக்கிறது என்றால் வெளிநாடுகளில் கருப்பினத்தவருக்கு நடக்கிறது. ஒருவர் வீடு வாங்குவதில் வாடகைக்கு பிடிப்பதில் நிறவெறி சார்ந்த சிக்கல்கள் எழுந்தால் அந்த விவகாரங்களை லிசா ரைஸ் கையாண்டு தீர்வுகளை எட்ட முயல்கிறார்.  அமெரிக்காவில் சொந்த வீடு வைத்துள்ள வெள்ளையர்களின் எண்ணிக்கை அதிகம். வாடகைக்கு வீடு கொடுப்பது, வீடுகளை வாங்குவது ஆகியவற்றில் கருப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அறுபதுகளில் சிறுபான்மையினர் நிறம் சார்ந்த புறக்கணிப்பை அனுமதித்தனர் என்றால் இப்போது வீடு, நிதி வசதி சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் அதே விஷயம் ஒழுங்குமுறையாக நிகழ்த்தப்படுகிறது. தேசிய வீட்டுவசதி கூட்டமைபு என்ற நிறுவனத்தின் அதிபர், இயக்குநராக உள்ள லிசா ரைஸ், இன்று பாகுபாடு என்பது தானியங்கி முறையி்ல மாறியுள்ளது. எனவே இதை எதிர்கொள்வது கடினம் என்றார். பாகுபாட்டிற்கு எதிராக தீண்டாமைச

சாதி, மதம், இனம், நிற ரீதியான வேறுபாடுகள் எப்படி குழந்தைகள் மனதில் உருவாக்கப்படுகின்றன? - கென்னத் கிளார்க், மாமியா

படம்
  கென்னத் கிளார்க்  அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர். பனாமாவில் பிறந்தவர் பின்னாளில், நியூயார்க்கின் ஹார்லேமிற்கு நகர்ந்தார். ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போது தனது வாழ்க்கைத்துணையை அடையாளம் கண்டு, அவருடன் இணைந்து ஆராய்ச்சி செய்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க தம்பதியினர் இவர்கள்தான். ஹார்லேமில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டிற்கான மையங்களை தொடங்கி நடத்தினர்.  கென்னத் கிளார்க், நியூயார்க்கில் உள்ள சிட்டி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்.  முக்கிய படைப்புகள் 1947 ரேஷியல் ஐடென்டிஃபிகேஷன் அண்ட் பிரிஃபெரன்ஸ் இன் நீக்ரோ சில்ட்ரன் 1955 ப்ரீஜூடிஸ் அண்ட் யுவர் சைல்ட் 1965 டார்க் கெட்டோ 1974 பாதோஸ் ஆஃப் பவர் சமூகத்தில் நிலவும் பாகுபாடு என்பது, குறிப்பிட்ட இனக்குழுவைச் சேர்ந்த மக்களை தாழ்ந்தவர்கள் என கூறுவது என கென்னத் கிளார்க் கூறினார். சாதி, மதம், இனம் சார்ந்த பாகுபாடுகளை ஆசிரியர், பெற்றோர், கல்வி நிறுவனங்கள் நேரடியாக ஊக்குவிப்பதி

தெரிஞ்சுக்கோ - தவளைகள்

படம்
  alanajordan   தவளை பற்றிய தகவல்கள்- தெரிஞ்சுக்கோ   ஆஸ்திரேலியன் ஸ்ட்ரைப்டு ராக்கெட்   என்ற தவளை தனது உடல் நீளத்தை விட 50 மடங்கு தூரம் தாண்டும் இயல்புடையது. கிரேட் கிரெஸ்டட் நியூட் இன பெண் தவளை, ஒரே நேரத்தில் 600 முட்டைகளை ஈனுகிறது. ஆப்பிரிக்கன் கோலியாத் இன தவளை 3.3 கிலோ எடை கொண்டது. இதன் நீளம் 30 செ.மீ. இந்தியாவில் வாழும் பர்பிள் தவளை, 50 வாரங்கள் (ஓராண்டிற்கு 52 வாரங்கள்) நிலத்தின் கீழே பாதுகாப்பாக உறங்குகிறது.   மழை தொடங்கும் இரு வாரங்களுக்கு மட்டும் எழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகிறது.   கோல்டன் பாய்சன் டர்ட் தவளையின் உடலிலுள்ள விஷத்தின் மூலம் 10 மனிதர்களைக் கொல்ல முடியும். சிறு விலங்குகளில் எனில் 20 ஆயிரம் எலிகளைக் கொல்லலாம். நீர்நில வாழ்விகளில் மொத்தம் 8300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. -அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

மரங்களை அடையாளம் காணும் முறை!

படம்
  மறைந்திருக்கும் காடுகள்! பல்லாயிரக்கணக்கான மர இனங்கள், அறிவியலாளர்களால் இன்னும் அறியப்படாமல் உள்ளன.  மரங்களைப் பற்றிய பல்லுயிர்த்தன்மை ஆய்வுக்கட்டுரை , அறிவியல் இதழொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 9,200 மர இனங்கள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் உள்ளது என கூறப்பட்டுள்ளது.  ”மரங்களை முழுமையாக ஆராய்ச்சி செய்வது கடினமான பணி. அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை அறிந்தால் மட்டுமே வேறுபாடுகளை அறிய முடியும்”  என்றார் வேக் ஃபாரஸ்ட் சூழல் உயிரியலாளர் மைல்ஸ் சில்மன்.  புதிய ஆராய்ச்சியில் மரங்களை அடையாளம் காண இரு முறைகளைப் பின்பற்றியுள்ளனர். உலக காடுகள் பல்லுயிர்த்தன்மை திட்டம் மூலம், காடுகளில் உள்ள மர இனங்களை பதிவு செய்தனர். அடுத்து, ட்ரீசேஞ்ச் எனும் வழியில், தனியாக வளரும் மர இனங்களை பதிவு செய்துள்ளனர். இந்த இருமுறைகளிலும் சேர்த்து மொத்தமாக 64,100 மர இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆய்வில், 60 ஆயிரம் மரங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.  ”ஆய்வாளர்களின் இந்த ஆய்வில் கண்டறிய வேண்டிய மர இனங்களின் எண்ணிக்கை கூட குறைவுதான். 6 ஆயிரத்திற்கும் அதிகமான மர இனங்கள் நாம் இன்னும் அறியப்படாதவையாக இ

வரலாற்றைத் திருத்தும் நேரம் இதுதான்! - க்வெஸ்ட்லவ், இசைக்கலைஞர்

படம்
                  நேர்காணல் க்வெஸ்ட்லவ் அமெரிக்க இசைக்கலைஞர் 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹார்லெம் கலாசார திருவிழாவை சம்மர் ஆப் சோல் என்ற ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார் . அவரிடம் பேசினோம் 40 மணிநேரம் நீளும் இசைவிழாவை எப்படி படமாக உருவாக்கினீர்கள் ? இசைவிழாவை ஹார்ட் டிரைவில் போட்டுக்கொண்டு நான் சமைய லறை , ஸ்டூடியோ , அலுவலகம் , வீடு , குளியலறை என அனைத்து இடங்களிலும் பார்த்துக்கொண்டே இருந்தேன் . இப்படியே ஐந்து மாதங்கள் வேலை செய்தேன் . தூங்கும்போது கூட இதனை எப்படி எடிட் செய்வது என்றே யோசித்து வந்தேன் . இந்த இசைவிழா , நமது நினைவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் ? இன்று டிக்டாக்கில் தங்களது படைப்புகளை உருவாக்குபவர்கள் கூட அதில் உண்மையாக உழைத்தவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்கவில்லை . நான் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் இயக்குநராக எனது முதல் படம் என்பதோடு வரலாற்றையும் சரி செய்யும் என நினைக்கிறேன் . நீங்கள் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழாவிற்கான இசையமைப்பாளராக உள்ளீர்கள் . இதில் கிளென் குளோசின் டா பட் நி

அனைத்து இன மக்களையும் இணைத்து பொருளாதார ஏணியில் ஏற்றிய மாமனிதர் ! லீ குவான் யூ - எஸ்.எல்.வி மூர்த்தி

படம்
                            லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி எஸ் . எல் . வி மூர்த்தி கிழக்கு தீவு நகரமான சிங்கப்பூர் எப்படி பல்வேறு இன , மத தகராறுகளை சமாளித்து பொருளாதார வளர்ச்சி பெற்றது என விவரிக்கிறது இந்த நூல் . சிறு நகரம்தானே என பலரு்ம் நினைத்தாலும் நாட்டில் ஒழுங்கை எப்படி லீ ஏற்படுத்தினார் என்பது நிர்வாகரீதியாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது என்றே கூறவேண்டும் . 1819 இல் உருவான சிங்கப்பூர் ராபிள்ஸ் என்ற ஆங்கில அதிகாரியால் வடிவமைக்கப்பட்டது . அவரைப் பற்றிய தகவலும் , நகரைப் பற்றிய தொலைநோக்கு கொண்டவரை அரசியல் சதிகளால் எ்ப்படி வீழ்த்தினார்கள் என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது . இன்று சிங்கப்பூரில் ராபிள்ஸ் உரு்வாக்கிய பல்வேறு கல்வி , கலாசார நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது என்பது சிங்கப்பூர் மக்களின் நன்றியறிதலுக்கு சான்றாக உள்ளது என்ற தகவல் மட்டுமே ஆறுதலாக உள்ளது . சிங்கப்பூர் வரலாற்றில் ராபிள்ஸூக்கு பிறகு அதேபோன்ற இடத்திற்கு வருபவர்தான் லீ . சீனராக இருந்தாலும் கூட அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் தொடக்கத்திலேயே இருந்தது அ

ஜெர்மனியில் இன அழிப்பை செய்த ஹிட்லர் பற்றிய ஆய்வு உண்மைகள்! ஹிட்லர் - மருதன்

படம்
                  ஹிட்லர் மருதன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பற்றி பல்வேறு யூகங்கள் இதுவரை எழுந்துள்ளன . அவரின் இளமைப்பருவம் , வளர்ச்சி , அரசியல் கட்சியில் சேர்வது , பின்னர் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் , நாஜி கட்சி தொடங்கப்படுவது , இரண்டாம் உலகப்போரை அவர் தொடங்குவது , முதலில் கிடைக்கும் வெற்றி பின்னர் தலைகீழாகி அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மாறுவது என நூல்கள் எழுதப்பட்டுள்ளன . ஆனால் இதில் உள்ள வேறுபாடு , அவரைப் பற்றி பிறர் எழுதியுள்ள பல்வேறு கருத்துகளையும் ஆசிரியர் கூறியுள்ளார் . இதனால் ஹிட்லர் பற்றி முன்னர் நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களும் உண்மையா , பொய்யா என சந்தேகம் ஏற்படுகிறது . இனவெறியுடன் யூதர்களை அழித்தவர் என்று ஹிட்லர் கூறப்பட்டாலும் , அவரின் இளமைக்காலம் , அரசியல் நுழைவு , வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது , இன அழிப்பைத் தொடங்குவது என பல்வேறு விஷயங்களை பேசுபவர்கள் மெல்ல அவரை ஆதரிக்கத் தொடங்குவது நடைபெறுகிறது . இதற்கு காரணம் , இன்றும் அவர் தொடங்கிய இன ஒழிப்பு என்பது ஏதோ ஒரு வகையில் நடந்து வருகிறது என்பதால்தான் . ஹிட்லர் என்பவர் அனைத்து வ