மரங்களை அடையாளம் காணும் முறை!

 
















மறைந்திருக்கும் காடுகள்!


பல்லாயிரக்கணக்கான மர இனங்கள், அறிவியலாளர்களால் இன்னும் அறியப்படாமல் உள்ளன.  மரங்களைப் பற்றிய பல்லுயிர்த்தன்மை ஆய்வுக்கட்டுரை , அறிவியல் இதழொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 9,200 மர இனங்கள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் உள்ளது என கூறப்பட்டுள்ளது. 

”மரங்களை முழுமையாக ஆராய்ச்சி செய்வது கடினமான பணி. அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை அறிந்தால் மட்டுமே வேறுபாடுகளை அறிய முடியும்”  என்றார் வேக் ஃபாரஸ்ட் சூழல் உயிரியலாளர் மைல்ஸ் சில்மன்.  புதிய ஆராய்ச்சியில் மரங்களை அடையாளம் காண இரு முறைகளைப் பின்பற்றியுள்ளனர். உலக காடுகள் பல்லுயிர்த்தன்மை திட்டம் மூலம், காடுகளில் உள்ள மர இனங்களை பதிவு செய்தனர். அடுத்து, ட்ரீசேஞ்ச் எனும் வழியில், தனியாக வளரும் மர இனங்களை பதிவு செய்துள்ளனர். இந்த இருமுறைகளிலும் சேர்த்து மொத்தமாக 64,100 மர இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆய்வில், 60 ஆயிரம் மரங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. 

”ஆய்வாளர்களின் இந்த ஆய்வில் கண்டறிய வேண்டிய மர இனங்களின் எண்ணிக்கை கூட குறைவுதான். 6 ஆயிரத்திற்கும் அதிகமான மர இனங்கள் நாம் இன்னும் அறியப்படாதவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இவற்றை, அமேஸான் காடுகளில் காணலாம்” என்றார் உயிரியலாளர் சில்மன். காலநிலை மாற்றம், நோய், காடழிப்பு காரணங்களால் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்து வருகின்றன. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பதற்குள் அரிய மர இனங்கள் அழியவும் வாய்ப்புள்ளது. 







தகவல்

Hidden forests (stephanle pappas)

scientific american may 2022

கருத்துகள்