குகைளை ஒளிர வைக்கும் புழுக்கள்!
புழுக்களால் ஒளிரும் குகை!
நியூசிலாந்தின் வடக்கு தீவுப்பகுதியில் வெயிட்டோமோ (Waitomo) என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக்கல் குகைகளைப் பார்க்கும்போது, சாதாரணமாகவே தோன்றும். ஆனால் இவைதான், உலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன.
வெயிட்டோமோ குகைகளின் சிறப்பு அம்சம், அதன் சுவர்களும் மேற்புறங்களும்தான். இவை குளோவார்ம் (Glowworms) எனும் ஒளிரும் புழுக்களால் நீலநிறத்தில் ஒளிர்கின்றன. இக்காட்சியைப் பார்க்கவே உலக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குகைகளைப் பாதுகாக்க அதன் வெப்பநிலையும் அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவும் அரசால் சோதிக்கப்பட்டு வருகிறது. வெயிட்டோமோ குகையின் மேற்புர கூரையிலிருந்து வளரும் பாறைகளுக்கு விழுதுப்பாறை (Stalactites) என்று பெயர். கீழ்ப்புறத்திலிருந்து செங்குத்தாக வளருபவைக்கு புற்றுப்பாறை (Stalagmites) என்று பெயர். மழைநீர் மற்றும் பாறைகளிலுள்ள கனிமங்களின் சேர்க்கையால், வினோதமான பாறை அமைப்புகள் உருவாகின்றன.
ஒளிரும் புழுக்கள் முழு வளர்ச்சி பெற்றால், ஃபங்கஸ் நாட் (Fungus gnat) இன வகை பூச்சியாக உருமாறுகிறது. இப்பூச்சி, நியூசிலாந்தில் மட்டும் காணப்படுகிறது. ஃபங்கஸ் நாட் பூச்சிகள் இடும் முட்டையிலிருந்து உருவாகும் ஒளிரும் புழுக்கள் குகையின் சுவர்கள், மேற்புறங்களில் வாழ்கின்றன. ஒளிரும் புழுக்கள் கெரோபிளாட்டிடே(Keroplatidae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இதன் அறிவியல் பெயர், அராச்னோகேம்பா லூமினோசா (Arachnocampa luminosa).
ஒளிரும் புழுக்களின் நீலநிற ஒளிக்கு லூசிஃபெரின் (Luciferin)என்ற வேதிப்பொருள் காரணம். சிறு பூச்சிகளைப் பிடிக்க ஒளிரும் புழுக்கள், குகையில் மேற்பரப்பிலிருந்து 50 செ.மீ. நீளத்திற்கு இழைகளை உருவாக்குகிறது.இழையைப் போலவே நீலநிற ஒளியும் கூட இரையைக் கவர்வதற்கான ஏற்பாடுதான். ஒளியைப் பார்த்து கவரப்பட்டு இழையில் ஏறிவரும் சிறு பூச்சிகளை, ஒளிரும் புழு பிடித்து உண்ணுகிறது.
https://www.planetnatural.com/pest-problem-solver/houseplant-pests/fungus-gnat-control/
amazing earth book
(waitomo caves)
https://en.wikipedia.org/wiki/Keroplatidae
https://www.google.com/search?q=Arachnocampa+Luminosa&oq=Arachnocampa+Luminosa&aqs=chrome..69i57.763j0j7&sourceid=chrome&ie=UTF-8
https://www.nature.com/articles/s41598-018-21298-w
https://www.atlasobscura.com/places/waitomo-glowworm-caves
கருத்துகள்
கருத்துரையிடுக