இடுகைகள்

விலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை முன்னேற்றும் காய்கறி டெலிவரி நிறுவனம்- வீல்சிட்டி

படம்
  நடுவில் இருப்பவர் இயக்குநர் செல்வம் விஎம்எஸ் செல்வம் விஎம்எஸ் நிறுவனர், இயக்குநர் வீலோசிட்டி   வீலோசிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகளை விற்கும் நிறுவனம். இதன் தனிச்சிறப்பு, காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்கள் உள்ளூரிலுள்ள பெண்கள் என்பதுதான். இவர்கள் காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கும் ஆட்டோ, காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் குளிர்பதன வசதி கொண்டது. அது மின்வாகனம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற செய்தி. ஆர்டர்களை டெலிவரி செய்யும் பெண்களின் போனில் வீலோசிட்டி ஆப் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த ஆப்பில், காய்கறிகளின் புத்துணர்ச்சி, தட்பவெப்பம், வண்டியின் வேகம் ஆகிய நிலைகளை பார்த்து அதற்கேற்ப அவற்றை டெலிவரி செய்ய முடியும்.   இந்த வகையில் பெண்களுக்கு ஒருநாளுக்கு 800- 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இதற்கு அவர்கள் ஆறு மணிநேரம் வேலை செய்தால் போதுமானது. விவசாய பொருட்களை விற்கும் ஐடியா எப்படி வந்தது?   ‘’’2027ஆம் ஆண்டு காய்கறி சந்தை மதிப்பு 136 பில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படி விற்பனை அதிகரித்தாலும், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளு

ஜிடிபி பற்றி தெளிவாக புரிந்துகொள்வோம் வாங்க! - எது உண்மை, எது பொய்?

படம்
  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்றால் என்ன? ஒரு நாட்டின் எல்லைக்குள், குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருள், வழங்கப்படும் சேவைகளின் பண மதிப்பு அல்லது சந்தை மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி எனலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, நாட்டின் பொருளாதார நலத்தைப் புரிந்துகொள்ள உதவும் மதிப்பெண் அட்டை போல…. பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுதோறும் அல்லது காலாண்டு அடிப்படையிலும் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில், காலாண்டு அடிப்படையில் ஆண்டு முழுக்கவுமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுகிறார்கள். இப்படி பெறும் தகவல்களில் பணவீக்கத்திற்கு ஏற்ப பொருட்களின் விலைகளில் சற்று மாறுதல்கள் செய்யப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் புரிந்துகொள்வது எப்படி? அரசு செய்யும் செலவுகள், முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், செலுத்தப்பட்டுவிட்ட கட்டுமானச் செலவுகள், தனியார் நிறுவனங்களின் சரக்குகள், மக்களின் நுகர்வு, ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு ஆகியவை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படும். இறக்குமதி  செய்த பொருட்களின் மதிப்பு கழிக்க

17. பத்திரிகையாளர்களை வழக்குகள்,ரெய்டு மூலம் மிரட்டிய அதானி - மோசடி மன்னன் அதானி!

படம்
  அதானி என்டர்பிரைசஸ், அதானி க்ரீன், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி க்ரீன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வது, பங்குத்தரகர்கள் பங்களிப்பு என்று பார்த்தால் பெரிதாக ஏதுமே இருக்காது. ‘’நாங்கள் அதானி குழுமத்தின் பங்குகளை,  உண்மையான பணப்புழக்கம் இன்மை, வட்டி இன்மை, துறையிலேயே 16 மடங்கு அதிக மதிப்பு ஆகியவை காரணமாக கைவிட்டோம்’’ என பங்குத்தரகர்  கூறினார். இவர் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகளைக் கைவிட்டதை அடுத்து கூறிய வாக்கியம்தான் இது. அதானி போர்ட் என்ற நிறுவனத்தைத் தவிர்த்து வேறு நிறுவனங்களின் பங்குகளை ஆராய எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை என்பதே உண்மை. இதற்கு குழுமத்தின் முதலீட்டு நிதி அளவே காரணம். Adani company Analyst covering per Bloomberg jan 23 Indian Company with similar market cap, Number of analysts covering Adani green energy 1 Bajaj finance: 33 analysis Adani enterprises 2 Larsen & Toubro: 44 analysis Adani Transmission 2 HCL technolog